சென்னை: ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவின், அல்பர்ட்டாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அங்கு வசிக்கும் தமிழர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டு ஆதரவு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கொண்டு வந்தனர். தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுத்தரக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு இனி எந்த காலத்திலும் தடை வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு நகரத்திலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.
English summary:
Chennai: jallikkattu ongoing struggle in favor of the position in the state, where the Tamils have been protesting in favor jallikkattu abroad.