சென்னை : மெரினாவிலிருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி கடந்த 7 நாட்களாக இளைஞர்கள் போராடி வருகின்றனர். இதற்கு பலதரப்பிலும் ஆதரவு பெருகியது. இந்நிலையில் சென்னை-மெரினாவில் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை போலீசார் அறிவித்ததாவது: மெரினாவை விட்டு போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினீர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போராட்டத்திற்கான இலக்கு எட்டப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராடியது போல், அமைதியாகவே கலைந்து செல்லுங்கள். போலீசாருக்கு ஒத்துழைப்பு தந்து உடனடியாக மெரினாவை விட்டு வெளியேறுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
English summary:
Chennai: Marina appealed the police to disperse the protesters.