சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தகோரி போராட்டம் நடத்தும் இளைஞர்களின் பிரதிநிதிகளிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று(ஜன.,19) இது தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டிற்காக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இரவு பகலாக நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் ஆதரவு அலை எழுந்து வருகிறது. பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று ஆதரவளித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று சந்திக்க உள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் பிரதிநிதிகள் 5 பேரிடம் பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும் வாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் :‛‛ ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறேன். பிரதமரை சந்திக்க இன்று டில்லி செல்கிறேன். தொடர்ந்து நாளை மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் அணில் குமார் தவேவை சந்திக்க இருக்கிறேன். இதில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கலந்து கொள்கின்றனர். ஜல்லிக்கட்டிற்காக போராடி வரும் இளைஞர்கள் விரும்பினால் அவர்களையும் அழைத்து செல்ல தயாராக உள்ளளோம். இளைஞர்களின் போராட்டம் நியாமானது. பீட்டா அமைப்பை பற்றி பேசவே அவமானமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Chennai : Union Minister spoke to the representatives of the youth struggle jallikattu happening pon, today (Jan., 19), which will meet Prime Minister Modi said.