புதுடில்லி: மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது. பொங்கல் கொண்டாடும் நபர்கள் உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், அலுவலக உயர் அதிகாரி நினைத்தால் விடுமுறையை ரத்து செய்யலாம்.
தலைவர்கள் கருத்து வருமாறு:
* தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேணடும். ம.தி.மு.,க. பொதுச்செயலர் வைகோ.
* ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு கொண்டாப்படுவது பொங்கல் பண்டிகை. அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். : தி.மு.க. எம்..பி. கனிமொழி.
* தமிழர்களை மத்திய அரசு மதிப்பதில்லை. தமிழன் கேள்வி கேட்கமாட்டான் என்பதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சியில் இருப்பதால் எதுவும் செய்யலாம் என மத்திய அரசு நினைக்கிறது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்: கி. வீரமணி.
* பொங்கல் பண்டிகை மீது மத்திய அரசுக்கு என்ன கோபம்: தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர்.
*விவசாயிகளின் அடையாளம் பொங்கல் பண்டிகை, மத்திய அரசு தனது அறிவிப்பை திரும்ப பெறவேண்டும்., ஜி.கே. வாசன். தமிழ்மாநில காங்கிரஸ்.
* மத்திய அரசின் அறிவிப்பு மதச்சார்பற்ற தன்மையை கேள்விகுறியாக்கும் செயல்: தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்
* பொங்கல்விடுமுறை கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான்.இதனை மத்திய அரசு தற்போதும் பின்பற்றி வருகிறது. தமிழிசை, பா.ஜ. மாநில தலைவர்.
English summary:
New Delhi: The central government Pongal festival has been removed from the list of compulsory leave.