அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் வைத்து, என் கணவரை அடித்து உதைத்து விட்டால், நியாயம் கேட்டு நான் போராட மாட்டேன் என நினைத்து விட்டனர்; அது நடக்காது. எனக்கு நியாயம் கிடைக்கும் கடைசி நிமிடம் வரை போராடுவேன் என, அடித்துச் சொல்லும் சசிகலா புஷ்பா எம்.பி., சசிகலாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமித்ததே செல்லாது. அதை தேர்தல் கமிஷன் ஏற்கக் கூடாது என, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இது குறித்து, சசிகலா புஷ்பா கூறியதாவது:ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை, உலகமே அறிந்து வைத்துள்ளது. கூடவே இருந்து ஜெயலலிதாவைப் பார்த்துக் கொண்டதாக கூறும் சசிகலாதான், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க வேண்டும். அது வரை, அவர் மீதான சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இறந்து போன நாள் வரையிலான 75 நாட்களும், சசிகலாதான் கூடவே இருந்திருக்கிறார். அவர்தான், கவர்னர் உள்ளிட்ட யாரையுமே, ஜெயலலிதாவை சந்திக்கவே விடாமல் தவிர்த்துள்ளார். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவையும் கூட, அவர் மருத்துவமனைக்குள்ளேயே விடவில்லை.
இப்படியெல்லாம் செய்த சசிகலாவைத்தான், ஏற்கனவே துரோகி என கூறி, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார் ஜெயலலிதா. அதனால்தான், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும்; மத்திய அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்றும் கேட்டு, நியாயத்தை நோக்கி போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஜெயலலிதாவாலேயே துரோகி என பட்டம் சூட்டி, போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலாதான், இன்று, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டு, பொதுக் குழுவால், தற்காலிகமாக அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், கட்சியின் அடிப்படையான விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.
அப்படி இருக்க, சசிகலாவை நிரந்தரப் பொதுச் செயலர் போல, பொதுக் குழு தீர்மானங்களையெல்லாம், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளனர். கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான பொன்னையனும், அதையே சொல்கிறார்.
ஆக, சசிகலா, பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதே முறையானது அல்ல என்கிற போது, தேர்தல் கமிஷன், சசிகலாவின் தேர்வை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கக் கூடாது நிரந்தர ஏற்பாடாக, நியாயமான; நேர்மையான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். கட்சியின் அடிப்படை விதிகளின்படி, கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி, ஓட்டளித்து, பொதுச் செயலரை தேர்ந்தெடுக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அப்படி செய்யும் போது, சசிகலாவால், கட்டாயம், கட்சியின் பொதுச் செயலராக வர முடியாது. எதிர்த்து ஒரு மூத்த தலைவர் நின்றால், அவரே, கட்சியின் பொதுச் செயலராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார். இதை விட்டு விட்டு, புற வழியில், கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டு விட்ட, சசிகலாவின் நியமனத்தை, எக்காரணம் கொண்டும் தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இதற்கான சட்ட ரீதியிலான போராட்டங்களை நான் தொடர்ந்து வருகிறேன். இப்படி பொதுச் செயலர் தேர்வுக்கு, தேர்தல் நடத்தினால், அதில் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான், கட்சியின் உறுப்பினர் என்ற வகையில், என் கணவர் யோகேஸ்வர் திலகன், அ.தி.மு.க., தலைமை அலுவலத்துக்குச் சென்றார். அவரை, சுற்றிய சசிகலா ஆட்கள், அவரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அராஜகத்தின் மூலம், சசிகலா வெகு நாட்களுக்கு வெற்றி பெற்றுவிட முடியாது. நியாத்துக்கான கடைசி நிமிடம் வரையில் போராடுவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
English summary:
Digg, and put at the head, beaten and kicked my husband, if you will not fight with the thought that I had a fair hearing; It will not happen. I will fight until the last minute to get justice, Sasikala Pushpa MP's assertion, Sasikala, AIADMK general secretary nominated valid. It would not be acceptable to the Election Commission, has sent a letter to the Election Commission of India.