சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயம்பேட்டில் 26 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படுகின்றன.
ஆன்லைனிலும் முன்பதிவு வசதி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள், முக்கிய ஊர்களுக்குச் செல்ல தினமும் 2,275 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளுடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.11ந்தேதி அன்று 794 சிறப்பு பேருந்துகள், 12–ந்தேதி அன்று 1,779 சிறப்புப் பேருந்துகள், 13–ந்தேதி அன்று 1,872 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்கள் மொத்தம் 4,445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆக ஒட்டுமொத்தமாக 3 நாட்களிலும் சேர்த்து 11,270 பேருந்துகள் இயக்கப்படும்.மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களில் இருந்து ஜனவரி 11ல் 991 பேருந்துகள், ஜனவரி 12ல் 2,291 பேருந்துகள், 13ல் 3,141 பேருந்துகள் என மொத்தம் 6,423 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்து 693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, வழக்கமான விரைவு பேருந்துகளில் முன்பதிவு முடிந்துவிட்டது. இதையடுத்து, சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.சுமார் 300 கி.மீ.க்கு மேல் செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம். இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கவுன்ட்டர்கள், தாம்பரம் 2, பூந்தமல்லியில் 1 என, மொத்தம் 29 கவுன்ட்டர்கள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சிறப்பு கவுன்ட்டர்கள் வரும் 9ம் தேதி திறக்கப்படும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். www.tnstc.in இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 3,4,5,6, ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்தவர்களுக்கான அரசு விரைவுப் பேருந்துகளும், 7,8,9, ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு இல்லாத விரைவு பேருந்துகளும் இயக்கப்படும். 1,2, நடைமேடைகளில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற குறுகிய தொலைவு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தீபாவளியின்போது ஏற்பாடு செய்தபடி பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் உட்பட 5 இடங்களிலிருந்து பஸ்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Chennai, Pongal, ticket bookings for special buses, which run from Chennai to overseas has begun. Koyampet special counters opened at 26.It has been reported that you can access it online booking.