புதுடில்லி: உலக அளவிலான பொருளாதாரத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்
டில்லியில் நடந்த நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜி.டி.பி., அதிகரிக்க வாய்ப்பு:
அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான பெரும் முதலீட்டில் தொடங்கப்படும் தொழில்கள் நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்லும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிக்கும் ஜி.டி.பி., யை அதிகரிக்க உதவும். வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன்களின் வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு தவிர்ப்பு:
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மூலமாக நாட்டில் வரி ஏய்ப்பு முற்றிலுமாக தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பான பொருளாதாரம்:
உலக அளவில் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருக்கும் போது. இந்தியாவின் பொருளாதாரம் நீண்டகால அடிப்படையில் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: The global economy is in a better position in the Indian economy, said Finance Minister Arun Jaitley Financial Stability and Development Council meeting held in New Delhi, Union Finance Minister Arun Jaitley and Reserve Bank Governor urjit Patel participated.