சென்னை: மக்களின் சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக இன்று ஜல்லிக்கட்டு நடத்த மதுரை சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை மக்களின் கடும் எதிர்ப்பால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் தோல்வியுடன் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் ஒப்புதலோடு ஜல்லிக்கட்டிற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி வாடிவாசல்கள் திறக்கப்பட்டுள்ளன. 6 மாத காலம் கெடு கொண்ட இந்த அவசர சட்டத்தை , நிரந்தர சட்டமாக்க சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு நிச்சயம் நிரந்தர சட்டமாக்கப்பட்டு விடும் என்றார். இதற்கான பணிகள் நாளை கூட உள்ள பேரவை கூட்டத் தொடரிலேயே துவங்கப்படும் என்றார்.
English summary:
Speaking to reporters at the airport in Chennai, Tamil Nadu Jallikattu case had been mentioned as his duty. Jallikkattu with the approval of the Central Government issued an ordinance. By ordinance, the ban on jallikattu vadivasal left open. The works will start tomorrow in the plenary session.