நெல்லை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நேற்று 5வது நாளாக போராட்டம் நீடித்தது. மதுரை, நெல்லை, திருச்சியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் மாணவர்களின் போராட்டம் 5வது நாளாக நேற்று தொடர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவர்கள், பல்வேறு தனியார் அமைப்புகள், வியாபாரிகள், சங்கங்கள், பொறியாளர்கள், டாக்டர்கள் என கூட்டம் அலைமோதியது. சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மழை பெய்தாலும் மாணவர்கள் திடலை விட்டு நகரவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி ஒரு மாணவி உள்ளிட்ட 80 மாணவர்கள் நேற்று 2வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். மயங்கிவிழுந்த நந்தா என்ற மாணவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தப்பு செட் மேளத்தை சுமந்தபடி அதற்குரிய சீருடைகளை அணிந்தபடி போராட்ட களத்தில் அமர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானத்திலும் நேற்று 5வது நாளாக மாணவ, மாணவிகளின் போராட்டம் நீடித்தது. கழுகுலையில் கரடிகுளம் சிஆர் காலனியில் கொட்டும் மழையில் ைகக்குழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நெல்லை, தூத்துக்குடியில் நேற்று பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. எனினும் மாணவ, மாணவிகள் போராட்ட களத்தை விட்டு நகரவில்லை.
மதுரை: மதுரையிலும் தமுக்கம் மைதானத்தில் திரண்டிருந்த மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெற்றோர் மழையில் நனைந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். வ.உ.சி மைதானத்திற்கு சென்று, இதர மாணவர்களுடன் போராட்ட களத்தில் இறங்கினர். ஊட்டி, கோத்தகிரி ஆகிய இடங்களில் 3வது நாளாக போராட்டம் நடக்கிறது.
மாணவர்கள் மொட்டை: திருப்பூரில் கலெக்டர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் ஆகிய 2 இடங்களில் 4-வது நாளாக போராட்டம் நேற்றும் நீடித்தது. மாட்டு வண்டியில் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் மொட்டையடித்துக் கொண்டனர். காந்தி நகரில் காளை மற்றும் சேவல்களை வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
காங்கயத்தில் மாலை 4 மணியளவில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. நகரில் நேற்றும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோர் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் அருகில் உள்ள மல்லிகை அரங்கில் தங்கவைக்கப்பட்டனர். மழை நின்றதும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
திருச்சி: திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் இரவில் தூரல் மழை பெய்தது. இருந்த போதிலும் மனம்தளராமல் போராட்டத்தை தொடர்ந்தனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள், நேற்று பேரணியாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பகல் 11.20 மணியளவில் மழை பெய்ய ெதாடங்கியது.
அப்போதும், மழையில் நனைந்தபடி போராட்டத்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் மழையில் நனைந்தனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்களால் குடைகள் வழங்கப்பட்டது. சில பெண்கள் தங்கள் துப்பட்டாவால் போர்த்திக் கொண்டனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் போராட்டம் நீடித்தது. நாகர்கோவிலில் அண்ணா ஸ்ேடடியம் எதிரில் 10 ஆயிரம் குவிந்துள்ளனர். இவர்களுடன் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் வந்து நேற்று பங்கேற்றனர். அவ்வப்போது, தூறல் மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
விழுப்புரம், கடலூர்: புதுச்சேரி ஏ.எப்.டி. திடலில் கடந்த 17ம் தேதியில் இருந்து மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதேபோல் விழுப்புரம் நகராட்சி மைதானத்திலும், கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் மைதானத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல், புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், அரியலூர் மாவட்டங்களிலும் போராட்டம் நீடித்து வருகிறது.
முதல்வரை முற்றுகையிட முயற்சி:
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு 8.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில்ஜல்லிக்கட்டு குறித்து நிருபர்கள் முதல்வரிடம் கேட்டபோது, ‘‘அலங்காநல்லூரில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடப்பது உறுதி’’ என்றார். முதல்வர் ஓபிஎஸ் மதுரை வந்தபோது பெருங்குடி அம்பேத்கர் சிலை அருகே 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர். முதல்வர் வரும் வாகனத்தை மறிக்கப்போவதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அனைவரையும் தரதரவென இழுத்து வேனில் ஏற்றி சென்றனர். பிறகு, கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று முதல்வர் தங்கினார். காளைகளை அவிழ்க்க விடமாட்டோம்: மதுரை அவனியாபுரம் காளை வளர்ப்போர் சங்க தலைவர் மாரி(48) கூறுகையில், ‘ நிரந்தரச் சட்டம் வரும்வரை எந்த காளையையும் ஜல்லிக்கட்டுக்காக அவிழ்க்க விடமாட்டோம்’’ என்றார்.
பிரதமருக்கு காளைகள் அனுப்பும் போராட்டம்:
ஜல்லிகட்டு போட்டியின் அடையாள சின்னமான காளைகளை ரயில் மூலம் பிரதமருக்கு அனுப்பும் நூதன போராட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதையொட்டி சந்திப்பு ரயில் நிலையத்திற்குள் காளைகளை கொண்டு செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் 2 காளைகளுடன் ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்றனர். அதை போலீசார் தடுத்ததால் 2 காளைகளும் கூட்டத்திற்குள் அங்குமிங்கும் மிரண்டு ஓடின. தொடர்ந்து 2 காளைகளையும் போலீசார் பிடித்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றி அங்கிருந்து விடுவித்தனர்.