சென்னை: ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம் தற்போது திசைமாறுவது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த போராட்டத்தில் பல தரப்பு நோக்கம் கொண்ட குழுக்கள் புகுந்துள்ளதாகவும் , தாம் இதில் இருந்து விலகுவதாகவும், பிரபல இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி திடுக் தகவல் வெளியிட்டுள்ளார். இவர் ஆரம்ப காலம் முதல் ஜல்லிக்கட்டுக்காக பேராடுவதில் இவருடைய முக்கிய பங்கும் இருந்தது என்பது குறிப்பிடத்க்கது. இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதியபபட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு மெரினா போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். அடையாளம் தெரியாத கும்பல் சிலர் வருகின்றனர். ஆளுக்கு ஒரு கோஷங்கள் எழுப்புகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க சிலர் சதி செய்கின்றனர். போராட்டத்தை திசை திருப்ப சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. சிலர் தனித்தமிழ்நாடு பேனரை வைத்து போராட்டம் செய்கின்றனர். தொடர் போராட்டங்களில் முதல் இரண்டு நாட்கள் நான் அலங்காநல்லூர், சென்னை, கோவையிலெல்லாம் நான் இருந்தேன்.
தேசியக் கொடியை கீழே போட்டு.,
ஏனென்றால் இது அறப்போராட்டங்களாக நடந்தது. ஆனால் கோவையில் நடந்த சில சம்பவங்கள் என்னை மனம் வருந்தச் செய்தது. அங்கே சிலர் திடீரென வந்து எங்க பகுதியில் வந்து பேசுங்க என்றார்கள். என்ன என்று பார்த்தால் அங்கே தேசியக் கொடியை கீழே போட்டு அவமதித்து, இந்தியா என்று கேவலப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார்கள்.தேசிய விரோத செயலுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன்.அதை அவர்களிடம் தெளிவா சொல்லி விட்டேன். உடனே, “ஹிப்ஹாப் தமிழா நீ உண்மையான தமிழனா இருந்தா இங்கே வந்து போராடு”ன்னு சொல்றாங்க. இன்னொருத்தர், “மத்திய அரசு ஹிந்துக்களுக்கே முன்னுரிமை தருகிறது. இஸ்லாமியர்களுக்கு தரவில்லை” என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் எனக்கு ஒப்புமை இல்லை. கடந்த ஒருவருடமாக நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை பீட்டாவுடன் இணைத்து கெட்ட வார்த்தைகளைக் கொண்டு எழுத ஆரம்பித்தார்கள்.குடும்பப் பெண்கள் உள்ள இடத்தில் திடீரென சில கும்பல்கள் வந்து மோடி, தனித்தமிழ்நாடு என்றெல்லாம் பேசி கூடவே தகாத வார்த்தைகளைப் பேசினார்கள். மனம் வருந்தி நான் அங்கிருந்து கிளம்பி மதுரைக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் இதே போல நடந்து கொண்டிருக்கிறது. “பெப்ஸி, கோக் தடை செய்யவில்லையென்றால் நான் செத்து விடுவேன்” என்கிறான். நீ ஏன் வாங்குற? எதற்காக போராடுகிறோம் என்று தெரியாமல் திசை திரும்பி விட்டது.
ஆபாச வார்த்தைகளில் திட்டுவதா ?
அடையாளம் தெரியாதவர்கள் வருகிறார்கள். பேசுகிறார்கள் அவர்கள் எங்கிருந்து வந்தனர். பெப்சி குறித்து பேசுகின்றனர். தேசிய கொடியை எரிக்க வேண்டும் என்றனர். யார் என தெரியவில்லை. சிலர் நீங்கள் கிளம்புங்கள் என கூறியதை அடுத்து நான் கிளம்பினேன். தேச விரோத செயல்களில் ஒரு போதும் ஈடுபட மாட்டேன். தேச தலைவர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டுவது நல்ல நோக்கமாகாது. சமூக விரோத கும்பல்கள் போராட்டத்தில் ஊடுருவியுள்ளனர். தனித்தமிழ்நாடு, மோடி எதிர்ப்பு என போராட்டத்தை திசை திருப்பக்கூடாது. எனக்கூறினார்.