சென்னை: '16 ஆண்டுகளாக சசிகலா தரப்பினர் எனக்கு கொடுத்த தொல்லைகளை சகித்து கொண்டு இருந்தேன்' என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் அவரது இல்லத்தில்அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா மருத்துவனையில் இருந்த போது சசிகலா விளக்கம் அளிக்க வில்லை. அதிமுகவை 28 ஆண்டுகளாக நாட்டிலேயே 3-வது பெரிய கட்சியாக வளர்த்தவர் ஜெயலலிதா.
கவர்னரை மைத்ரேயன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அ.தி.மு.க., எம்.எல்.ஏக்களின் நிலையை ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. என்னை முதல்வர் பதவியில் அமர்த்தி சித்ரவதை செய்தார்கள். அசிங்கப்படுத்தினார்கள். 16 வருடங்களாக எனக்கு கொடுத்த தொல்லைகளை சகித்து கொண்டு இருந்தேன்.
கடந்த 20 ஆண்டுகளில் ஜெயலலிதா ஒரு முறை கூட என்னை கடுமையாக பேசியது கிடையாது. யாரை பற்றியும் நான் ஜெயலலிதாவிடம் குறை கூறியது கிடையாது. ஜெயலலிதாவிற்கு என்னை பிடித்துபோனதால் அவர்கள் எனக்கு தொந்தரவு கொடுத்தார்கள். தனியாளாக நின்று போராடுவேன் என்று கூறியதை பெருமையோடு பலர் தெரிவித்தனர். ஜெயலலிதா மறைந்த போது அவரது உடலை கூட தீபாவை பார்க்க விடவில்லை. யாராவது தன்னைப்பார்த்து சிங்கம் என்று கூறுவார்களா? என கூறினார்.