சென்னை: ‛எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என நம்புகிறோம். நாளைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்' என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி., தினகரன், அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, எம்.பி., நவநீதகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 பேர் இன்று (பிப்.,15) இரவு 8 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அந்த அணியினர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு மீண்டும் வலியுறுத்தினர். முன்னதாக, அவர்கள் நேற்று (பிப்.,14) கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்புக்கு பிறகு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.கவர்னரிடம் 124 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு பட்டியலை கொடுத்துள்ளோம். உரிய ஆவணம் செய்வதாக கவர்னர் கூறினார். பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என நம்புகிறோம். நாளைக்குள் அவர் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.