சென்னை: ஒரு கோடி தொண்டர்களும் தன் பக்கம் இருக்கிறார்கள் என்ற சசிகலா பேச்சு தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க., கட்சியை முழுவதுமாக கைப்பற்றி தமிழக முதல்வராகி விடலாம் என்ற கனவில் மிதந்து வரும் சசிகலா இரண்டாவது தடவையாக நேற்று (பிப். 12) கூவத்தூர் ரிசார்டில் உள்ள தனது கட்சி எம்.எல்.ஏ., க்களை சந்தித்து பேசியுள்ளார்.
ஓரு கோடி பேர்:
கூவத்தூரில் தங்கி உள்ள அனைத்து எம்.எல .ஏ., க்களும் தனக்கு ஆதரவு கொடுக்க தயாராக உள்ளதால் ஒரு கோடி தொண்டர்களும் தன் பக்கம் இருப்பது போல் உணர்வதாக கூறியுள்ளார். மேலும், . அ.தி.மு.க., வை உடைக்க நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள் சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பதே லட்சியம். இவ்வாறு கூவத்தூரில் இரண்டாவது தடவையாக நடந்த எம்.எல்.ஏ., க்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்
மக்கள் கொந்தளிப்பு;
எம்.எல்.ஏ. க்களை சுதந்திரமாக இருக்க வைத்து அவர்கள் ஜனநாயக முறைப்படியான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்திரராஜன் போன்ற பல அரசியல் கட்சி தலைவர்கள், பொது மக்கள் கூறி வரும் நிலையில் எம்.எல்.ஏ., க்கள் தொடர்ந்து ரிச்சராட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டு அவர்களுடன் சசிகலா உரையாடிய போது தொண்டர்கள் எல்லாம் தன் பக்கம் என பேசியதால் பன்னீர் ஆதரவு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.