அ.தி.மு.க.,வில், பாசறை நிர்வாகிகள் பலர், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்க துவங்கியுள்ளனர்.
அ.தி.மு.க.,வில், 2008ல், அப்போதைய பொதுச் செயலர் ஜெ., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை உருவாக்கினார். பாசறையின் மாநில செயலராக, சசிகலாவின் உறவினர் வெங்கடேஷை நியமித்த ஜெ., பின், அவரது செயல்பாட்டில் அதிருப்தியடைந்து, நீக்கினார். சட்டசபை தேர்தலில், ஊட்டி உட்பட பல தொகுதிகளில், பாசறை நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கினார். ஜெ., மறைவுக்கு பின், வெங்கடேஷ், மீண்டும், பாசறை நிர்வாகிகளை சந்தித்து பேசத் துவங்கினார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட பாசறை செயலரும், சட்டசபை தேர்தலில், ஊட்டி தொகுதியில் போட்டியிட்டு தோற்றவருமான வினோத், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். இதுபோல், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாசறை செயலர்கள், நிர்வாகிகள் பலர், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்ல துவங்கியுள்ளனர்.