சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம் அளித்து ஒரு வார காலம் ஆன பிறகும் கவர்னர் இதுவரை அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், உடனடியாக தனக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க வேண்டும் என கவர்னருக்கு சசிகலா கடிதம் எழுதி இருந்தார். இருப்பினும் கவர்னர் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அதேசமயம், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் எம்.பி., மைத்ரேயனுக்கு நேரம் ஒதுக்கி, அவரை சந்தித்தார்.
இதனால் இன்று (பிப்ரவரி 13) கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க மீண்டும் சசிகலா நேரம் கேட்டுள்ளார். இன்றும் கவர்னர் தனக்கு நேரம் ஒதுக்கவில்லை என்றால், நேரடியாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.