கவர்னரின் தமிழகம் வருகை ரத்து செய்யப் பட்டது, சசிகலா மற்றும் அவரது உறவினர் களிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, உடனடியாக முதல் வராக பதவியேற்க முடிவு செய்தார். பதவி யேற்பு விழாவிற்காக, சென்னை பல் கலையில் உள்ள, நுாற்றாண்டு விழா அரங்கை தயார் செய்யும் பணி, நேற்று காலை துவக்கப்பட்டது.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று காலை, கோவை பாரதியார் பல்கலையில் நடை பெறும் விழாவில்
பங்கேற்க வருவதாக இருந்தது. விழா முடிந்து, சென்னை திரும்பியதும், இன்று மாலை, பதவியேற்பு விழா நடைபெறும் என, அ.தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று இரவு, கவர்னர் கோவை நிகழ்ச்சியை ரத்து செய்தார். அவர் எப்போது சென்னை வருவார் என்பது, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.
அவரின் சென்னை வருகை முடிவாகாததால், இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.கவர்னரை சந்தித்து, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்தையும், சட்டசபை, அ.தி.மு.க., கட்சி தலைவராக, சசிகலா தேர்வுசெய்யப்பட்டதற்கான கடிதத்தையும் அளித்த பிறகே, பதவியேற்பு விழா குறித்து, முடிவு செய்யப்படும்.
'கவர்னர் எப்போது வருவார், பதவியேற்பு விழாவை எப்போது நடத்துவது...' என, முடி வெடுக்க முடியாத தால், சசிகலா, அவரது உறவினர்கள்
அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கவர்னரிடம் பேசி, அவரை இன்று சென்னைக்கு வரவழைப் பதற்கான முயற்சி களை, சசிகலா உறவினர் கள் துவக்கி உள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வர உள்ள நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளி போவ தால், சசிகலா, 'அப்செட்'டாகி உள்ளதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.