தமிழ்நாட்டில் தற்போது எழுந்த அரசியல் சிக்கலுக்கு இன்னமும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. 120-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், தன்னை சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ள சசிகலா, இதனால் தன்னை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என்றும், தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஒருவேளை சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து, அவர் முதல்வராகப் பதவியேற்ற பின்னர், தீர்ப்பு சசிகலாவுக்கு பாதகமாக வரும்பட்சத்தில், மீண்டும் ஒருவரை முதல்வர் பதவியில் அமர்த்தியாக வேண்டும் என்பதால், ஆளுநர் தாமதிக்கிறாரோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடும் சவாலாக இருந்து வந்தார். ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோடி செயல்படக்கூடும் என்றும் பரவலான கருத்து நிலவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்துள்ளார் சசிகலா. அடுத்த சில நாட்களில் ஆளுநர் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்..
-- நன்றி விகடன்