புதுக்கோட்டை: முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசுவதற்காக நெடுவாசல் போராட்டக்குழுவினர் சென்னை புறப்பட்டனர். அவர்கள் இன்ற (மார்ச் - 1) தலைமைசெயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு மாணவர்களும் ஆதரவளித்துள்ளனர்.
சென்னை புறப்பட்டனர்:
இந்நிலையில் போரட்டக்குழுவை சேர்ந்த ஒன்பது பேர் இன்று(மார்ச் -1) காலை 10 மணியளவில் முதல்வரை சந்தித்து பேச உள்ளனர். முன்னதாக ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் மாவட்ட எஸ்.பி, மற்றும் போராட்ட குழு உறுப்பினர் ஒன்பது பேர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், போராட்டக்குழுவினர் சென்னை புறப்பட்டனர்.