சென்னை, நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்களிக்க தமிழக அரசின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதுக்கோட்டை நெடு வாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பாக நானும், காங்கிரஸ கட்சி சட்டமன்ற தலைவர் ராமசாமியும் அந்த பகுதி மக்களை சந்தித்து பேச உள்ளோம். தேவைப்பட்டால் மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்தும்.தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விதி விலக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.