சென்னை :
ப்ளஸ் 2 தேர்வுகள் துவங்க உள்ளதால் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது லவுட் ஸ்பீக்கர் வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :
நாளை முதல் (மார்ச் 2) பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களின் அடுத்த கட்ட கல்லூரி வாழ்க்கையை தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்த தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும். இந்த நேரத்தில் மாநிலம் முழுவதும் என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து தி.மு.க.,வினர் மக்கள் நலம் பயக்கும் உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியும், மனநிறைவும் தருகிறது. அப்படி பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்தும் கட்சி நிர்வாகிகள் நாளை துவங்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு தொந்தரவு செய்ய வேண்டாம். தங்களின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற இந்த நேரத்தில் ஆடம்பரம், ஆரவாரம் இன்றி மிகவும் அமைதியான முறையில் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுத வழிவிட வேண்டும்.
English Summary:
Chennai: The birthday celebration will start today, plus 2 choices of action during the DMK leader MK Stalin as not Loud speaker, urged parties.