புதுடில்லி: குடிநீர் மற்றும் மின்கட்டணங்களை செலுத்தாத நபர்கள் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. வேட்பாளர்கள் மீதான குற்றம்தொடர்பான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 3வது பிரிவை திருத்த வேண்டும். இதன் மூலம் வரி கட்டாமல் ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2015ல் வழக்கு ஒன்றை விசாரித்த டில்லி ஐகோர்ட், மின் மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாத வேட்பாளர்களை தடை செய்ய வேண்டும் என கேட்டுள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், குடிநீர் மின் கட்டணம் ஏதும் பாக்கியில்லை என சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
English summary:
NEW DELHI: People do not pay water charges for assembly and Lok Sabha elections and ban the EC has asked to have the law