திருவனந்தபுரம்: சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் முன்னரே சமூக வலைதளங்களில் கேரள மாநில அரசின் பட்ஜெட், கசிந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சராக தாமஸ் ஐசக் உள்ளார். இன்று அவர் அரசின் முழுமையான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மாநில அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் கசிந்து விட்டது. இதனால் பட்ஜெட் தனது நம்பகத்தன்மையை இழந்தவிட்டது . மேலும் சட்டசபையில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது, சட்டசபை வளாகத்தில் ரமேஷ் சென்னிதாலா, சமூக வலைதளங்களில் கசிந்த பட்ஜெட் அறிக்கையை வாசித்து காட்டினார்.