லக்னோ: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய உ.பி., அமைச்சர் காயத்ரி பிரஜாபதி தலைமறைவானார்.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசில் காயத்ரி பிரஜாபதி போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் அமேதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
பெண்ணை மிரட்டி:
கடந்த சில வருடங்களுக்கு முன் சித்ர கூடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அமைச்சர் பிரஜாபதியும் அவரது கூட்டாளிகளும் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பெண்ணை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் போலீஸில் புகார் அளித்தார். அதனை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கோர்ட் உத்தரவின் பேரில் லக்னோ கவுதம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் பிஜாபதி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
தலைமறைவு:
லக்னோவில் உள்ள பிரஜாபதி வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இதனையடுத்து பிரஜாபதி தலைமறைவாகிவிட்டார். அமேதியில் உள்ள பங்களாவில் அவர் இருந்ததாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்றனர். ஆனால் பிரஜாபதி அங்கு இல்லை. அவருக்கு சொந்தமான இடங்கள், உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியும் அமைச்சர் சிக்கவில்லை. லக்னோவில் உள்ள வீ்ட்டிற்கு சென்றதாக ஊழியர்கள் கூறினர்; அங்கும் அவர் இல்லை.பிரஜாபதி தலைமறைவானதை மாவட்ட எஸ்.பி., உறுதி செய்துள்ளார். அவருக்கு எதிராக கோர்ட் மூலம் பிடி வாரன்ட் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
English summary:
LUCKNOW: UP caught in the rape case, the minister went underground Gayatri Prajapati.
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav-led Samajwadi Party government is the Transport Minister Gayatri Prajapati. Now he is contesting the assembly elections from Amethi.