லக்னோ: உ.பி.யில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய அம்மாநில அமைச்சர் கைதுக்கு பயந்து வெளிநாடு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உ.பி. மாநில சட்டசபை க்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அகிலேஷ் உள்ளார். இவரது அமைச்சரவையில் உள்ள காயத்ரி பிரஜாபதி,,49 என்பவர் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரஜாபதி தற்போது தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் சந்தேகம்:
பாலியல் புகார் தொடர்பாக அவரை போலீசார் கைது செய்ய முயற்சித்து வருகின்றனர். ஜாமின் கோரி கோர்ட்டில் மனு செய்துள்ள நிலையில் விசாரணை திங்கள் கிழமை(6-3-17) வருகிறது. இந்நிலையில் இவர் கடந்த 4 நாட்களாக அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் அவர் வெளிநாடு தப்பியோடிவிட்டதாக போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.இதையடுத்து விமான நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
English summary:
Lucknow: Uttar Pradesh Chief Minister caught in the rape case was reported to be fled abroad for fear of arrest. UP Assembly takes place in 7 phases. In the state's ruling Samajwadi Party regime. Chief Minister Akhilesh said. ,, Gayatri Prajapati in his cabinet on 49 October last year, a woman who complained of rape. The police have registered a case. Prajapati has been named as SP candidate in the election.