கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிக்கும் குழுவில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்ற ஐ.நா.,வின் கோரிக்கையை ஏற்க இலங்கை மறுத்து விட்டது.
மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதில் இலங்கை காலதாமதம் செய்கிறது. விசாரணைக்காக கலப்பு கோர்ட் அமைக்கப்பட வேண்டும். இந்த கோர்ட்டில் உள்ளூர் மற்றும் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூறியிருந்தது.
இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது: கலப்பு கோர்ட் அமைக்க வேண்டும் என்ற ஐ.நாவின் கோரிக்கை சாத்தியமில்லாதது. இலங்கையின் நீதித்துறை மீது சர்வதேச அளவில் நம்பிக்கையில்லாத நேரத்தில் இந்த கோரிக்கை வந்துள்ளது. அதிபர் ஸ்ரீசேன தலைமையிலான அரசு தலைமையில் விசாரணை குழு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கலப்பு கோர்ட் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Colombo: The war against the LTTE in the final stages of the Committee to investigate human rights abuses overseas UN judges to take place, Sri Lanka has refused to accept the request.