சென்னை - செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்தற்காக முத்துப்பேட்டை அரசுப் பள்ளி மாணவிக்கு அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் தமிழகத்தை சேர்ந்த சாதனையாளர்கள் 5 பேருக்கு ஆண்டுதோறும் ‘குருசேத்ரா’ எனும் விருதை வழங்கி கவுரவிக்கிறது. இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில், 2017-ம் ஆண்டு விருதுப் போட்டிக்காக எளியமுறையில் செங்கல் அறுக்கும் கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி இரா.ஆர்த்திக்கு 'குருசேத்ரா' விருது, சான்றிதழ், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விருது மற்றும் பாராட்டு பெற்ற மாணவி இரா.ஆர்த்திக்கு பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கோதண்டராமன், ஆசிரியர்கள் ஆண்டனி, செல்வசிதம்பரம், கவுதமன், மேகநாதன், ஆசிரியைகள் முத்துலட்சுமி, ஜெயலட்சுமி, அமிர்தம், இந்திரா மற்றும் முத்துப்பேட்டை பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.