புதுடில்லி: இந்தியா -பாக்.இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம்தொடர்பாக இம்மாதம் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடி ஆவேசம்:
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாக்., பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலில், 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் கடும் கோபடைந்த மத்திய அரசு 'பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டது. ரத்தமும், தண்ணீரும், ஒரே நேரத்தில் பாய முடியாது என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 65 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுடன் போடப்பட்ட சிந்து நிதி நீர் பங்கீடு ஒப்பந்ததத்தினை நிறுத்தி வைப்பது, அல்லது மீண்டும் தொடர்வதை பரிசீலனை செய்வது , மற்றும் சிந்து நதி ஒப்பந்தத்தில், இந்தியாவுக்கு உள்ள, அனைத்து உரிமைகளையும் பயன்படுத்திக் கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இம்மாதம் கூட்டம்:
இந்நிலையில் இந்தியா - பாக்., இடையே உள்ள, நதிநீர் பங்கீடு குறித்து விசாரிக்கும் சிந்து நதி ஆணைய கூட்டம் ஓவ்வொரு நிதியாண்டு நடக்கும். இதன்படி இந்தாண்டு மார்ச் 3-வது அல்லது 4-வது வாரத்தில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா -பாக். சிந்து நதி ஆணையர்கள், இருநாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. திட்டமிட்டபடி இம்மாதம் பேச்சுவார்த்தை நடந்தால் இந்தியாவின் நிலை என்ன என்பது தெரியவரும்.