புதுடில்லி : நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 ஸ்மார்ட் நகரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வீட்டு வாடகையே தரும் அரசு :
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் ஒரு பகுதியாக, நகர்ப்புறங்களில் வசிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு அரசே வீட்டு வாடகை வழங்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.2713 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது. நடப்பு நிதியாண்டிலேயே இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்ட
மிட்டுள்ளது.
ஸ்மார்ட்சிட்டி ஏழைகளுக்கு சலுகை :
நகர்ப்புறங்களில் வசிக்கம் ஏழைகளுக்கு மாதந்தோறும் வீட்டு வாடகை தொகை வவுச்சர் (voucher) மூலம் வழங்கப்படும். இந்த வவுச்சரை, அவர்கள் வங்கியில் நேரடியாக கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 100 நகரங்களில் மட்டும் இந்த வீட்டு வாடகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு முதல் கட்டமாக ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பினாமி சொத்துக்களை கைப்பற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன
English Summary:
NEW DELHI: The choice of 100 smart cities across the country of residence of the Federal Government has decided to implement a program of providing housing for the poor.