சென்னை : அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி இணைப்பால் தமிழகத்தின் நிகழ்காலம் எப்படி இருக்கும் என்று நடிகரும். பாஜகவைச் சேர்ந்த மூத்தத் தலைவருமான எஸ்.வி.சேகர் டுவிட்டரில் ஒரு புதிரான கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் எதிர்ப்பு கோஷத்தை கையில் எடுத்து ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 7-ம் தேதி நடத்திய 45 நிமிட தியானத்தில் தொடங்கிய தமிழக அரசியல் அனல் 2 மாதங்களைக் கடந்தும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சசிகலா,தினகரனை சிறைக்கு அனுப்பியது வரை அனுமார் வாலாக நீண்டு கொண்டே வருகிறது.
அதிமுக அம்மா அணி(இபிஎஸ்), மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி எப்போது வேண்டுமானாலும் இணையும் நாங்களெல்லாம் அண்ணன் தம்பிகள், இரு அணி பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று இரு அணியினரும் புதிர் போட்டு வருகின்றனர்.
கடிவாளம் :
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் அணியினர் மீடியாக்களிடம் பேச கடிவாளம் போட்டுள்ளார். அதனை மீடியாக்களை சந்திக்கும் அனைத்து அமைச்சர்களுமே இரு அணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாக சொல்லி வைத்தார் போல ஒரே மாவை அரைத்து வருகின்றனர்.
குற்றச்சாட்டு ;
இந்நிலையில் அதிமுக இரு அணிகள் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் கட்சியை இணைப்பது பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அரசு முற்றிலும் செயல்படாமல் முடங்கியிருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுயநலம்:
இந்த வரிசையில் அதிமுக இணைப்பு பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகரும் பாஜக மூத்தத் தலைவருமான எஸ்.வி.சேகர் இப்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்திருப்பதற்கு சுயநலம் ஒன்றே ஒன்று தான் காரணம் என்று கூறியுள்ளார்.
ஆபத்து :
அதுமட்டுமில்லையாம் இந்த சுயநல முடிவால் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் தமிழகத்தின் நிகழ்காலத்துக்கும் ஆபத்தாக இருக்கலாம் என்றும் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
டவுட் :
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர் 2009ம் ஆண்டு அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது நோட் பண்ணப்பட வேண்டிய விஷயமாக உள்ளதால், இவர் தரப்பு கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று டவுட்டாக உள்ளது.
English Summary:
Film actor and bjp's senior leader s.ve.shekher tweeted that admk merger is not good for admk's future and tn's current situation