No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Monday, 30 November 2020

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை? - சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

நீதிபதிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வு பெற்றார். அந்த சமயத்தில் அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசிய வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும் இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிமன்றம் இதுவரை ஏன் கைது செய்யவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், இதுகுறித்து டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
http://dlvr.it/Rmjg18
Share:

ம.பி: `மத நம்பிக்கையை மாற்ற வற்புறுத்துகிறார்!’ - மனைவியின் புகாரால் கணவன் கைது

மத்திய பிரதேச மாநிலம் தன்பூர் பகுதியில், தனது மத பழக்கவழக்கங்களை தான் பின்பற்ற வேண்டும் என கணவன் வற்புறுத்தியதாக மனைவி அளித்த புகாரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று (29.11.2020) செய்தியாளர்களிடம் பேசிய தன்பூர் பகுதிக்குட்பட்ட துணை காவல்துறை அதிகாரியான பாரத் துபே, ``இந்து மதத்தைச் சேர்ந்த புகாரளித்த பெண் 2018-ம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர், மத்திய பிரதேச மாநிலம் தன்பூரில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணையும், அப்பெண்னின் உறவினர்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்தல் செய்வதோடு, உருது மற்றும் அரபு மொழிகளை கற்க கூறி அழுத்தம் தருவதாக அப்பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள கணவரை மத சுதந்திர சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தார். ‘திருமண நோக்கத்துக்காக மட்டும் மதம் மாறுவது ஏற்கத்தக்கதல்ல’ என்று உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத சுதந்திர மசோதா விரைவில் அமல்படுத்த அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் உட்பட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான கர்நாடகா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மதச் சுதந்திர சட்டம் அமல்படுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. Also Read: `மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா 2020’ - கேள்வி கேட்பவர்களை மிரட்ட இன்னோர் ஆயுதமா? இச்சட்டத்திற்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகள் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rmj1D6
Share:

அதிக அளவில் போட்டியிடும் இளம் பெண் வேட்பாளர்கள்... களைகட்டும் கேரள உள்ளாட்சித் தேர்தல்!

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று கட்டமாக நடக்கவிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் கேரளத்தில் களைகட்டி வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என அனைத்து உள்ளாட்சிகளுக்குமான தேர்தலில் 50% பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கல்லூரி மாணவிகளில் தொடங்கி இளம் பெண்கள்வரை 20 வயதுகளில் உள்ள பலர் களம் இறங்கியுள்ளனர். சி.பி.எம், காங்கிரஸ், பா.ஜ.க என அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்களுக்கு அதிகளவு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சில பெண் வேட்பாளர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் ஓட்டுக்கேட்டு பதிவு செய்யும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள அவர்களின் படங்கள், 'கேரள தேர்தலில் இத்தனை இளம் பெண்களா' என்று அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் இளம் பெண் வேட்பாளர் இது ஒருபுறம் இருக்க, சில விஷமிகள், தேர்தலில் போட்டியிடாத சில இளம் பெண்களின் புகைப்படங்களையும், அவர்கள் கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கட்சிகளின் லோகோவுடன் போஸ்டர்கள் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்தப் போஸ்ட்களில், 'கேரளாவில் தேர்தல் நடக்கிறதா உலக அழகிப் போட்டி நடக்கிறதா?' என்பது முதல், 'பஞ்சாயத்து மாறி வேறு பஞ்சாயத்தில் ஓட்டுப்போட முடியுமா?' என்பதுவரை விரும்பத்தகாத கமென்ட்கள் விழுகின்றன. கேரள உள்ளாட்சித் தேர்தலில் இளம் பெண்கள் அதிக அளவு போட்டியிடுவதற்கு அனைத்துக் கட்சிகளும் வாய்ப்பளித்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம். திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்கள் அதிகமாகப் போட்டியிட்டுவருகின்றனர்.சி.பி.எம் கூட்டணி குந்நோத்துபறம்பு ஊராட்சி வார்டு உறுப்பினர் வேட்பாளர் திருவனந்தபுரம் மாநகராட்சி பாப்பனங்கோடு வார்டு கவுன்சிலராக போட்டியிடுகிறார் பா.ஜ.க இளைஞரணி மாவட்டச் செயலாளர் ஆஷாநாத். கேரள மாநிலத்தில் அதிக அளவு இளம் பெண்கள் போட்டியிடுவது குறித்து ஆஷாநாத்திடம் பேசினோம். "கேரள உள்ளாட்சித் தேர்தலில் இளம் வயது பெண் வேட்பாளர்கள் நிறைய பேர் களம் இறங்கியிருக்கிறோம். சமுதாயத்தை பாதிக்கும் என்ன விஷயமாக இருந்தாலும் அதற்கு முதலில் எதிர்வினை எழுவது இளைஞர்களிடம் இருந்துதான். அரசியலில் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்ற கனவு இளைஞர்களிடம் உண்டு. அதனால்தான் இந்தத் தேர்தலில் இளைஞர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். இளைஞர்கள் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு. இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் சின்னச் சின்ன பிரச்னைகளையும் கவனித்து வருகிறார்கள். சாலை சீரமைத்தல் போன்றவை குறித்து முதலில் குரல்கொடுப்பதும் இளைஞர்கள்தான். ஆஷாநாத் அதனால்தான் பா. ஜ.க. அதிக அளவு இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. பா.ஜ.க மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளும் இளைஞர்களை முன்னிறுத்தியுள்ளன. திருவனந்தபுரத்தில் போட்டியிடுவதில் அதிகமானோர் இளைஞர்கள்தான். ப.ஜ.க-வில் இளைஞர் வேட்பாளர்கள் அதிகம்" என்றார். கேரள உள்ளாட்சியில் அனைத்துக் கட்சிகளிலும் இளம் பெண்கள் பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பது மாநிலம் தாண்டியும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/Rmj16J
Share:

Sunday, 29 November 2020

கேரள அரசின் புதிய அணைக்கு எதிர்ப்பு... ஜோதி பயணத்திற்குத் தயாராகும் விவசாயிகள்!

தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த நிலையில், அணை பலவீனமாக இருப்பதாகவும் எனவே இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கேரள அரசு தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாக விவசாயிகள் கொந்தளிக்கின்றனர்.விவசாயிகள் கம்பத்தில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசுகையில், ``உச்சநீதிமன்றமும், பல்வேறு ஆய்வு குழுக்களும், நிபுணர்களும் முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று ஒரு முறைக்கு பலமுறை சான்றளித்த பின்னரும் கேரள அரசும், அரசியல் கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவோம் என்ற பிடிவாதத்திலேயே இருந்து வருகின்றனர். மேலும் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு பசுமை தீர்ப்பாயத்திடமும், மத்திய நீர்வளத் துறையிடம் அனுமதி பெற்று புதிய அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்யத் தொடங்கியுள்ளது. புதிய அணை என்கிற கேரள அரசின் பிடிவாதம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் மத்திய மாநில அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய அணை கட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவிற்கு கொடுத்த, தாக்க மதிப்பீட்டு வரைவுக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.விவசாயிகள் மேலும் முல்லைப்பெரியாறு நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கேரள மாநில அரசின், அரசியல் சாசன அமர்வுக்கு எதிரான போக்கினை கண்டித்தும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரியும், வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி தொடர் ஜோதி பயணம் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தொடங்கி சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் வழியாக தேனிவந்து சீலையம்பட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, அம்மாபட்டி, உத்தமபாளையம், கம்பம் வழியாக லோயர்கேம்ப் பென்னிகுயிக் மண்டபத்தில் நிறைவு பெறும்" என்றார். இந்நிகழ்ச்சியின்போது ஐந்து மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பொதுச் செயலாளர் பொன்காட்சிக்கண்ணன், செயலாளர் சலேத்து, பொருளாளர் லோகநாதன், இணைச்செயலாளர் ரஞ்சித்குமார் உடனிருந்தனர்.
http://dlvr.it/Rmcy8l
Share:

Saturday, 28 November 2020

`கேரளா செல்பவர்களுக்கு சோதனை இல்லை!’ - இ-பாஸ் மேலும் தளர்வு

கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து எல்லைப் பகுதியான கேரளவுக்கு உட்பட்ட இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர்கள் ஜீப் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். கொரோனா அசாதாரண சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் தொழிலாளர்கள் கேரளா இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதிலும், பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தளர்வுகளுடன்கூடிய ஆறு மாத ரெகுலர் பாஸ் வழங்கப்பட்டது. இ-பாஸ் இதன்படி ஒரு முறை பாஸ் எடுத்தால் நாள்தோறும் காலையில் சென்று மாலையில் திரும்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் குமுளியில் கேரள வருவாய்த்துறையிடம் இ-பாஸ் பதிவு செய்து டோக்கன் மட்டும் பெற்றால் போதும். மற்ற சோதனைகள் இல்லை என்றும் தெரிவித்தனர். இருப்பினும், தமிழக எல்லையான குமுளிப் பகுதியில் நாள்தோறும் டோக்கன் பெற பொதுமக்களும், தொழிலாளர்களும் வாகனங்களுடன் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். இதனால், கேரளா செல்ல அனுமதித்திருக்கும் இ-பாஸை ரத்துசெய்ய தொழிலாளர்கள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் கேரள அரசு இ-பாஸில் மேலும் தளர்வுகளை அளித்திருக்கிறது. இதன்படி குமுளி, சின்னாறு, போடிமெட்டு வழியாக கேரளாவுக்குச் செல்பவர்கள் இ-பாஸ் சரிபார்ப்பு, டோக்கன் பெறுதல் எனக் காத்திருக்க வேண்டியதில்லை. இ - பாஸ் இ-பாஸ் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும். அதை எல்லைப் பகுதியிலுள்ள போலீஸாரிடம் காட்டிவிட்டுச் செல்லலாம் என அறிவித்திருக்கிறது. இதனால், கேரளா செல்லும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். குமுளி வழியாக கேரளாவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று மட்டும் இயக்கப்பட்டது. ஆனால், குமுளி மலைச்சாலையில் சாலைப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி ஒரு ட்ரிப்போடு போக்குவரத்து நிர்வாகம் அதை ரத்துசெய்துவிட்டது.
http://dlvr.it/Rmb4SB
Share:

வேலூர்: வெள்ளத்தில் சிக்கி 2500 நாட்டுக் கோழிகள் உயிரிழப்பு - நிவாரணம் வழங்க கோரிக்கை!

காட்பாடி அருகே வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்கு தயாராக இருந்த 2500 நாட்டுக் கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரசு உதவ வேண்டும் என விவசாயி கோரிக்கை வைத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள பொன்னை, பி.ஆர்.குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர், கடந்த 11 ஆண்டுகளாக தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து நாட்டுக் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் ஓடும் பொன்னை ஆற்றில் சுமார் 20 ஆயிரம் கனஅடி அளவுக்கு வெள்ளம் வந்துள்ளது. திடீரென வெள்ளம் அதிகரித்ததால் விவசாயி மோகனின் பண்ணையில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 2500 நாட்டுக் கோழிகளும், 5 ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. சுமார் 3000 நாட்டுக் கோழிகள் காப்பாற்றப்பட்டுள்ளது. அதேபோல் பண்ணை கொட்டகை, கோழி தீவனம் போன்றவையும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மோகன் வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்தில் வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதன் மொத்த பாதிப்பு சுமார் 3 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. கோழி பண்ணையை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியிருந்த தனக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டும் என விவசாயி மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.
http://dlvr.it/RmZNR1
Share:

கேரளா:`உன் புகாரைப் பார்க்க எங்களுக்கு மனசு இல்ல போடா...!’ - தந்தை, மகளிடம் எகிறிய எஸ்.ஐ

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாறு அணை காவல் நிலையத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கூறியவர் மற்றும் அவரது மகளை எஸ்.ஐ ஒருவர் ஒருமையில் பேசி ஆவேசமாகத் திட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் புகார் அளிக்க வந்தவர், மது போதையில் வந்ததாக எஸ்.ஐ கூறுகிறார். ஆனால் அவரது மகளோ, `தந்தை மது குடிப்பதே இல்லை, வேண்டுமானால் போதையில் இருப்பதை ஊதிக் கண்டுபிடிக்கும் மிஷினைப் பயன்படுத்தி சோதனை செய்யுங்கள்’ எனக் கூறுகிறார். அதற்கு அந்த எஸ்.ஐ, ``நீ சொல்லும்போது அந்த மிஷினோட நாங்கள் நிற்கணுமா?" என எகிறுகிறார். அதற்குப் புகார் அளிக்க வந்தவர், "இதுதான் போலீஸ் ஸ்டேஷனில், நீங்கள் தரும் மரியாதையா? நாங்கள் எதாவது தப்பா சொன்னோமா... போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் எதுவும் இல்லையா?" எனக் கேட்கிறார்.கேரள போலீஸ் அதற்கு அந்த எஸ்.ஐ,``இதுதான் போலீஸ் ஸ்டேஷன். உன் புகாரைப் பார்க்க எங்களுக்கு மனசு இல்ல போடா... நாங்க உன்னை மிரட்டுவோம்; தப்பாத்தான் பேசுவோம். நீ போ... போயிட்டு வா" என எகிறுகிறார். இதனால் பயந்துபோன அந்தப் பெண், ``அப்பா இங்க இருந்து போயிடலாம்" என அழுதபடியே தந்தையை அழைத்துச் செல்கிறார். சுமார் ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோ கேரளாவில் வைரலானது. Also Read: கேரளா: `வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டுச் சிறை!’ - எதிர்ப்பால் பின்வாங்கிய பினராயி விஜயன் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாறு அணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிவேட்டை பகுதியைச் சேர்ந்த சுதேவன் என்பவர்தான், மகளுடன் புகார் அளிக்கச் சென்றவர். இவரது ஒரு மகள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞ்ருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சென்றுள்ளார். இதுகுறித்து சுதேவன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார், இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த இளைஞர் சுதேவனின் வீட்டு முன்பு வந்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.எஸ்.ஐ கோபகுமார் இதுகுறித்து நெய்யாறு அணை காவல் நிலையத்தில் சுதேவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார். போலீஸார் விபரங்களை கேட்டறிந்துள்ளார்கள். அதன் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த நாள், தனது மற்றொரு மகளுடன் நெய்யாறு அணை காவல் நிலையத்துக்கு சுதேவன் சென்றுள்ளார். அப்போதுதான் காவல் நிலைய எஸ்.ஐ கோபகுமார் மிரட்டியிருக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள டி.ஜி.பி தலையிட்டு, எஸ்.ஐ கோபகுமாரை குட்டிக்கானம் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.
http://dlvr.it/RmZNQC
Share:

Friday, 27 November 2020

"ஒரே தேசம், ஒரே தேர்தல்!" - விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதற்குத் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தின் கெவாடியாவில் நடைபெற்ற 80-வது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற, பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "மகாத்மா காந்தியின் உத்வேகத்தையும், சர்தார் வல்லபாய் பட்டேலின் அர்ப்பணிப்பையும் நினைவு கூரும் நாள் இது. கடந்த 2008-ம் ஆண்டு இதே நாளில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்கிறேன். அன்று வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்துகிறேன். இன்று தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா புதிய வடிவில் போராடி வருகிறது. கடந்த 1970களில், அதிகாரப் பிரிவினைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் நல்லொழுக்கம் மற்றும் அதிகாரப் பிரிவினை குறித்து அரசியலமைப்பில் தெரிவித்துள்ளது போலவே, அரசியலமைப்பின் வாயிலாக அதற்கு விடை அளிக்கப்பட்டது. அவசரநிலைக்குப் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சட்டமன்றம் நிர்வாகம் மற்றும் நீதித்துறையில், கட்டுப்பாடுகளும், இருப்புகளும் மேலும் கடுமையாக்கப்பட்டன. அரசின் 3 கிளைகளின்மீது 130 கோடி இந்தியர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இது சாத்தியமாக்கப்பட்டது. இந்த நம்பிக்கை காலப்போக்கில் மேலும் வலுவடைந்துள்ளது.  நமது அரசியலமைப்பின் வலிமை, நெருக்கடியான தருணங்களில் நமக்கு உதவிகரமாக இருக்கிறது. இந்தியத் தேர்தல் முறையின் நெகிழ்வுத் தன்மையும் கொரோனா பெருந்தொற்றில் நமது எதிர்வினையும் இதனை நிரூபித்துள்ளது. அண்மைக்காலங்களில் சிறந்த வெளிப்பாடுகளை வழங்கி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊதியக் குறைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள். சர்தார் சரோவர் அணை திட்டம் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்ததால் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு அதன் பயன்கள்  தடைபட்டு இருந்தது. அணை கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பலன்கள் அவர்களை எட்டியது. நமது அரசியலமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. எனினும் கடமைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஒரு சிறப்பு அம்சமாகும். மகாத்மா காந்தி இதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே ஓர் நெருக்கத்தை அவர் கண்டார். நமது கடமையை நாம் நிறைவேற்றும்போது நமது உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படுவதாக அவர் கருதினார். அரசியலமைப்பின் மாண்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது டிஜிட்டல் பாதுகாப்பிற்கு எப்படி ஓர் சிறப்பு அம்சமோ அதேபோல் உங்கள் தொகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்கும். அனைத்து சட்டங்களுடன் மக்கள் நேரடித் தொடர்பை உணரும் வகையில் சட்டத்தின் மொழி எளிமையானதாகவும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் அமைய வேண்டும்.  வழக்கொழிந்த சட்டங்களை நீக்கும் முறைகள் எளிமையானதாக இருக்க வேண்டும். சட்டத் திருத்தம் மேற்கொள்ளும்போது பழைய சட்டங்கள் தாமாகவே ரத்து செய்யப்பட்டுவிடும் முறையை உருவாக்கலாம். சில மாதங்களுக்கு ஒருமுறை தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுவதைப் பார்க்கிறோம். இதனால் வளர்ச்சிப் பணிகள் தேக்கமடைவதை நாம் அனைவருமே அறிந்துவைத்திருக்கிறோம். எனவே ஒரே தேசம், ஒரே தேர்தல் முறைதான் தற்போது நாட்டிற்க்கு அவசியமானது. 'ஒரே தேசம், ஒரே தேர்தல்' குறித்த விவாதம் தேவை. நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கென தனித்தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது வீண்வேலை. இவை அனைத்திற்கும் ஒரே சமயத்தில் நடத்துவதற்கு பொதுவான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தலாம். இதை செயல்படுத்துவதில், சட்டமன்றங்களில் டிஜிட்டல் புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்" என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
http://dlvr.it/RmWWvG
Share:

பாலாற்றில் வெள்ளம்... 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல், நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வந்தது. புயல் கரையைக்கடந்த பின்னரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழன் காலை துவங்கி நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். பாலாற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RmW80s
Share:

‘டிகோடிங் மொபைல் & டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ - டிச.10இல் இணைய வழி மாநாடு

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மீடியா அவுட்சோர்சிங் நிறுவனமான ஃபோர்த் டைமன்ஷன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதியன்று ‘டிகோடிங் மொபைல் மற்றும் டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ மாநாட்டை இணைய வழியில் நடத்த திட்டமிட்டுள்ளது.  தொலைக்காட்சி, ரேடியோ, அச்சு இதழ் என தடம் பதித்துள்ள ஃபோர்த் டைமன்ஷன் நிறுவனம் யூடியூப்  சேனல்கள், டிஜிட்டல், கேபிள் மற்றும் அவுட்டோரிலும் இந்தியா முழுவதும் தனது இருப்பை உறுதி செய்துள்ளது. அதற்காகவே சென்னை, மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகம் அமைத்துள்ளது.  2018 மற்றும் 2019 இல் தென்னிந்திய அளவிலான ஊடக கருத்தரங்கம், 2019 இல் கோவை நகரில் மொபைல் மற்றும் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் மதுரையில் மீடியாவின் மாறிவரும் சூழல் குறித்தும் கருத்தரங்கையும் இந்நிறுவனம் ஒருங்கிணைத்து உள்ளது. அது மட்டுமல்லாது இதற்கு முன்னதாக இணைய வழி மாநாடு மற்றும் கருத்தரங்கை இந்நிறுவனம் நடத்தி உள்ளது.  இம்முறை ‘ டிகோடிங் மொபைல் மற்றும் டிஜிட்டல் இன் சவுத் இந்தியா’ என்ற தலைப்பில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் கலந்துரையாடவும், பார்வையாளர்களுக்கு வழிகாட்டவும் உள்ளது. துறை சார்ந்த வல்லுநர்கள் இந்த இணைய வழி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். அதில் வழக்கமான ஊடக செயல்பட்டிலிருந்து தென்னிந்தியாவில் ஊடகங்கள் டிஜிட்டலுக்கு மாறிவரும் நிலை குறித்து விரிவாக அலசப்பட உள்ளது.  “கதைசொல்லிகளாக எங்களுடைய பார்வை எப்போதுமே தென்னிந்தியாவின் பக்கம் தான் இருக்கும். மொபைல் மற்றும் டிஜிட்டல் பயனர்களின் பயன்பாட்டை ஆராய விரும்பி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷங்கர்.
http://dlvr.it/RmW80P
Share:

Thursday, 26 November 2020

சென்னை: வெள்ளநீரில் மிதக்கும் ஆதம்பாக்கம்! - கள நிலவரம்

சென்னையில் இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஆதம்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. 'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதற்கிடையே இரு தினங்களாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற குடியிருப்பு வாசிகளும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
http://dlvr.it/RmS8X6
Share:

வேரோடு சாய்ந்த மரம்.. ஒருவர் பலி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

சாலையில் நடந்து சென்ற நபரின் மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  மரம் வேரோடு நடந்து சென்ற நபர் மீது விழும் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் பெண்கள் பள்ளிக்கு எதிரில் உள்ள மரம் ஒன்று சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மீது எதிர்பாராத நேரத்தில் திடீரென விழுந்தது. அவருக்கு பின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே வேரோடு சாய்ந்த மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். இறந்து போன நபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இது பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
http://dlvr.it/RmRkg0
Share:

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம்!

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டீகோ மாரடோனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபது வயதான மாரடோனா அவரது வீட்டில் இருந்த போது உயிரிழந்தார். அர்ஜென்டினா அணிக்காக கடந்த 1986 இல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் மாரடோனா. நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை  பீலேவுடன் பகிர்ந்து கொண்டவர் மாரடோனா என்பதும் குறிப்பிடத்தக்கது.  #BREAKING Football great Maradona in critical condition: Argentine TV pic.twitter.com/evxk4FlKNI — AFP News Agency (@AFP) November 25, 2020 உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சையான ‘கடவுளின் கை’ என்ற கோல் பரவலாக அறியப்படுகிறது. கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாரடோனா தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RmRkdz
Share:

Wednesday, 25 November 2020

நிவர் புயல் Live Updates: முகாம்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுக - மத்திய சுகாதாரத்துறை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிரப் புயலாக மாறியது. இது, அதிதீவிரப் புயலாக மாறி இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பான லைவ் அப்டேட்ஸ்... நவ.25,2020 | பிற்பகல் 01.16 மணி: நிவர் புயல் வெள்ள முகாம்களில் மக்களை தங்க வைக்கும்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நவ.25,2020 | பிற்பகல் 01.13 மணி: நிவர் புயல் காரணமாக நாளையும் 27 ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நவ.25,2020 | பிற்பகல் 12.51 மணி: குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B - கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. குளத்தூர் ஏரியிலிருந்து வரும் உபரிநீர் தணிகாசலம் நகர் கால்வாய் வழியாக B - கால்வாய்க்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. #NivarCyclone #Nivarpuyal #TNGovt pic.twitter.com/oHkkqmpkBb — Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 25, 2020 நவ.25,2020 | பிற்பகல் 12.44 மணி: அடையாறு, வேளச்சேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய் மற்றும் நீர்வழித்தட பகுதிகளில், கனமழையால் தேங்கும் நீரை உடனுக்குடன் வெளியேற்ற, அதிகத் திறன் கொண்ட இயந்திரங்கள் மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவ.25,2020 | பிற்பகல் 12.40 மணி: திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். நவ.25,2020 | பிற்பகல் 12.30 மணி: செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நவ.25,2020 | பிற்பகல் 12.23 மணி: கடலூர் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 272 பகுதிகள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 92 இடங்களில் பாதிக்கப்படும் இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலமாக நிவாரண முகாம்களில் தங்குவதற்கான அறிவுறுத்தல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முகாம்களிலும் ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு 24 மணி நேரமும் பணிகள் உள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் 15 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நவ.25,2020 | காலை 11.56 மணி: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. முழு விவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது !  நவ.25,2020 | காலை 11.150 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். நவ.25,2020 | காலை 11.10 மணி: தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலின் வேகம் 11 கி.மீ ஆக நகர்ந்து வருகிறது. இன்று காலை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 240 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ, சென்னையில் இருந்து 300 கீ.மீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. நவ.25,2020 | காலை 11.10 மணி: செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்திதுறை தெரிவித்துள்ளது. முழு விவரம் : செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு  நவ.25,2020 | காலை 11.10 மணி: புதுச்சேரியில் நாளை முதல் நவ.28 ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. முழுவிவரம்: நவ.28 வரை பள்ளிகளுக்கு விடுமுறை- புதுச்சேரி அரசு நவ.25,2020 | காலை 11.10 மணி: தமிழக அரசு, இதுவரை 3,948 குழந்தைகள் உட்பட 24,166 பேரை தாழ்வான பகுதிகள் / பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இருந்து 987 நிவாரண மையங்களுக்கு மாற்றியுள்ளது. நவ.25,2020 | காலை 11.03 மணி: செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுத்தல்களை வழக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தின் ஓடுதளங்களை முறையாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. நவ.25,2020 | காலை 10.50 மணி: செம்பரம்பாக்கத்தில் 34,500 கன அடி வரை நீர் திறக்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.  நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னையில் அடையாற்றுக் கரையோர மக்கள், வெள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவ.25,2020 | காலை 10.37 மணி: சென்னை தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் இருந்தால் நீர் திறக்கப்பட்டால் முடிச்சூரில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நவ.25,2020 | காலை 10.31 மணி: நிவர் புயல் காரணமாக சென்னையில் பேனர் மற்றும் பெயர்பலகைகளை சம்பந்தப்பட்டவர்களை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்குள் அனைத்து பேனர் மற்றும் பெயர்பலகைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நவ.25,2020 | காலை 10.05 மணி: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்படுவதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், அடையாறு கரையோரங்கள் வசிப்பவர்களும், தாழ்வானப் பகுதிகளிலுள்ளவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாலும் அச்சம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, 1000 கன அடி நீர் என்பது அஞ்சத்தக்க அளவு இல்லை என்றும், 2015 அளவுக்கு தேவையற்ற பீதி வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. > விரிவாக வாசிக்க > 'செம்பரம்பாக்கம் திறந்தாலே வெள்ளம் என்ற பீதி வேண்டாம்' - நிலவரம் இதுதான்!  நவ.25,2020 | காலை 9.40 மணி: தற்போது 22 அடியை நெருங்குவதாலும், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து நொடிக்கு 4027 கன அடியாக உள்ளதாலும் ஏரியிலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் 1000 கன அடி திறக்கப்படுகிறது. நீர்வரத்திற்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும். எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருமலை மற்றும அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக செம்பரம்பாக்கம் வெள்ளக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 வெள்ளத்தோடு ஒப்பிடும்போது, அந்த அளவுக்கு இல்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் 2015 அளவுக்கு பீதியடையத் தேவையில்லை என்றும், அதேவேளையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நவ.25,2020 | காலை 9.11 மணி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் இன்று நள்ளிரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நகரந்து வருகிறது. புதுச்சேரிக்கு 300 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 12 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் மிக கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.25,2020 | காலை 8.45 மணி: சென்னைக்கு 8 ராணுவக் குழுக்கள் வரவழைக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நவ.25,2020 | காலை 8.40 மணி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. நவ.25,2020 | காலை 8.30 மணி: தீவிரப் புயலாக மாறிய நிவர், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று இரவு 11:30 மணிக்கு, கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில், 320 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில், 380 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தது. அடுத்த 2 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திடையில் நகரும் என்றும் அதன் பின்னர் வடமேற்கு திசையிலும் நகரும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 8 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் வட உள் மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதீத கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செய்தித் தளத்தின் செவ்வாய்க்கிழமை இரவு வரையிலான லைவ் அப்டேட்ஸுக்கு > https://bit.ly/3fmLsH9
http://dlvr.it/RmNPJ5
Share:

நிவர் புயல்: சென்னைக்கான உதவி எண்கள் அறிவிப்பு

நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே, நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில், சென்னை மக்களின் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மழையால் ஏற்படும் சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தூர்வாரும் வாகனங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், 176 நிவாரண மையங்கள், 109 படகுகள், 44 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே உள்ள ரிப்பன் மாளிகையில் அனைத்து துறை அலுவலர்களுடன் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 044-25384530, 044-25384540 என்ற உதவி எண்களை மக்கள் தொடர்புகொண்டு மழை தொடர்பான புகார்களை அளிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கழிவுநீர் கால்வாய் அடைப்பு, கழிவு நீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து 044-45674567 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளித்தால் உடனடியாக சீரமைக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RmMy1M
Share:

பெரிய அபாயம்: கடலூர், புதுச்சேரியில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

'நிவர்’ புயல் காரணமாக கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து, 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘நிவர்’ புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 10ம்  எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 10-ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது. சென்னை என்ணூர் துறைமுகத்தில் 9ம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 9-ஆம் எண் கூண்டுக்கு, புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள்.  நாகை மற்றும் காரைக்காலிலும் 8ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.  நிவர் புயல் காரணமாக பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    
http://dlvr.it/RmMxxR
Share:

Tuesday, 24 November 2020

'நிவர்' புயல் Live Updates: 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை (புதன்கிழமை)பிற்பகலில் கரையைக் கடக்கவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 'நிவர்' புயல் தொடர்பான அப்டேட்ஸ் இங்கே... நவ.24,2020/ பிற்பகல் 1.16: புதுச்சேரியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடல் பகுதிகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அவற்றை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டபோது... நவ.24,2020/ பிற்பகல் 1.06: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தம் செய்ய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்ததும் நிலையை ஆய்வு செய்த பின்னரே பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.24,2020/ பிற்பகல் 1.00: 24 மணிநேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவ.24,2020/ பிற்பகல் 12.39: தமிழகத்தின் புயல் காரணமாக 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் 8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. > விரிவாக வாசிக்க > நிவர் புயல்: இன்று 3, நாளை 8 மாவட்டங்கள்... அதீத கனமழை எச்சரிக்கை! "> நவ.24,2020/ பிற்பகல் 12.31: கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நவ.24,2020/ பிற்பகல் 12.14:வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கடந்த 3 மணிநேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 450 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ தொலைவிலேயே கடந்த 3 மணிநேரமாக புயல் மையம் கொண்டுள்ளது.  நவ.24,2020/ பிற்பகல் 12.10 : காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 30 மீனவர்களை காணவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அவர்களை கடலோர காவல்படை உதவியோடு தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். நவ.24,2020/ காலை 11.47: நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் வரும் 26 தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுவிவரம் இதோ.. நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாள்கள் ஊரடங்கு !  நவ.24,2020/ காலை 11.37: 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. > முழுவிவரம்: 2015 சென்னை வெள்ளத்திற்கு பின்பும் பாடம் கற்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் அதிருப்தி  > புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் என்னென்ன? - புதுச்சேரி முதல்வர் நாராணயசாமியுடன் களத்திலிருந்து பேட்டி... நவ.24,2020/ காலை 11.19: புயல் காரணமாக இன்றும் நாளையும் நடைபெற இருந்த சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி, நாகை உள்ளிட்ட இடங்களில் நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.24,2020/ காலை 11.10: நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் நாளை கடைகளை திறக்க வேண்டாம் எனவும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தியுள்ளார். நவ.24,2020/ காலை 10.56: நிவர் புயல் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி முதல்வர்களுடன் போனில் பேசியதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நவ.24,2020/ காலை 10.55: நிவர் புயல் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் முழு விவரம் இதோ... > நிவர் புயல்: கடலோர மாவட்டங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?  நவ.24,2020/ காலை 10.50: நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். முழுவிவரம்: நிவர் புயல் எச்சரிக்கை: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு  நவ.24,2020/ காலை 10.44: சென்னை மக்கள் நிவர் பாதிப்பு குறித்து புகாரளிக்க அழைபேசி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-2538 4530, 044 - 2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. >  முழுவிவரம்: “அச்சப்பட வேண்டாம்; நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” - சென்னை மாநகராட்சி ஆணையர் நவ.24,2020/ காலை 10.33: நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது எனவும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். > விரிவாக வாசிக்க > “அச்சப்பட வேண்டாம்; நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” - சென்னை மாநகராட்சி ஆணையர் நவ.24,2020/ காலை 10.24: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நவ.24,2020/ காலை 10.20: சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள நிவர் புயல் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ.ஆக அதிகரித்து நகர்ந்து வருகிறது எனவும் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ.24,2020/ காலை 10.19: சென்னை - திருவான்மியூர் கடல் பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நவ.24,2020/ காலை 10.10: 90 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவர்களின் நிலை என்ன ஆனது எனவும் காரைக்கால் மீனவ குடும்பங்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நவ.24,2020/ காலை 10.00: நிவர் புயல் நெருங்கி வருவதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  நவ.24,2020 | காலை 8.35: நேரலை: வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னையில் இருந்து 470 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. நவ.24,2020 | காலை 8.30: நேரலை: நிவர் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நவ.23,2020 | இரவு 9.30: நேரலை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு நவ.30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ.23,2020 | இரவு 9.00: நேரலை: நிவர் புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புயலின் திசைமாற வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது “ தற்போதுள்ள சூழலில் 60-70 சதவீதம் கடலூர் அருகே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி பிற்பகலில் புயல் நெருக்கமாக வரும்போது திசை மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. புயல் வலுவடைகிறதா அல்லது வலுவிழக்கிறதா என்பதை பொறுத்து எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என நாளை முடிவு செய்யலாம். கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பொழியும் வாய்ப்புள்ளது, ஒருவேளை மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடந்தால் சென்னைக்கும் மிக கனமழை வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார். நவ.23,2020 | இரவு 8.00: நேரலை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. வரும் நவம்பர் 25 ஆம் தேதி நிவர் புயல் கரையை கடக்கவிருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நிவர் புயலை முன்னிட்டு செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார். நிவர் புயல் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு முக்கிய அம்சங்கள் பொதுமக்கள் மின்கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின் மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிகஅருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் வீடுகளில் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாளுங்கள் பலத்த காற்று வீசும் போது மரங்கள் விழ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும்  பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டறிந்து அதன்படி செயல்பட வேண்டும்  வட தமிழக கடற்கரையோரம் புயல் கரையை கடக்க உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் கடலூரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும்,தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும் அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள்,போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை பொதுமக்கள் போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்றம் செய்து முழுமையாக தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். புயல் பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகநிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் ஆதார், ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வையுங்கள் நவ.23,2020 | இரவு 7.00: நேரலை: நிவர் புயலுக்கு செய்யபட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?- வருவாய் துறை அமைச்சர் உதயகுமாருடன் நேரலையில்... நவ.23,2020 | மாலை 5.40: படகுகள் சேதமடைந்தால் உடனடி நிவாரண உதவி வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “143 படகுகளில் மீன்பிடிக்க சென்ற சென்னையைச் சேர்ந்த மீனவர்கள் இன்று இரவு கரை திரும்புவர். தாழ்வான பகுதிகளில் நீரில் மக்கள் சிக்கினால் மீட்பதற்கு மீன்பிடி படகுகளுடன் மீனவர்கள் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்தார். நவ.23,2020 | மாலை 5.25: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் காற்றில் ஈரப்பதமும் அதிகம் காணப்படுகிறது. நவ.23,2020 | மாலை 5.10: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவ.23,2020 | பிற்பகல் 4.35:  'நவ.25-ல் புயல் கரையைக் கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!' > சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வரும் 25-ம் தேதியன்று பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். இதனால், சென்னையில் நாளையும், நாளை மறுநாளும் (நவ.24, 25) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், தாஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்; மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் கரையை கடக்கும்போது 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 24, 25 ஆம் தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் 55-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நிலவரம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. 24, 25 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். நவ.23,2020 | பிற்பகல் 4.15: மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில்கள் ரத்து > புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகும் நிலையில் மயிலாடுதுறை - தஞ்சாவூர் பயணிகள் ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நவ.23,2020 | பிற்பகல் 4.10: நிவர் புயல் முன்னேற்பாடுகள் பற்றி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் மத்திய கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆலோசனையில் ஈடுபட்டார்.  நவ.23,2020 | பிற்பகல் 01.20மணி: எங்கெல்லாம் அதீத கனமழை? நவ.23,2020 | பிற்பகல் 01.15 மணி: இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது, நிவர் புயல், 7 பேர் விடுதலை, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. > முழு விவரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி  நவ.23,2020 | பிற்பகல் 01.00 மணி: தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: அதி தீவிர புயலாக கரையை கடக்கும் 'நிவர்': எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா? நவ.23,2020 | பிற்பகல் 12.30 மணி: நிவர் புயலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அமைச்சகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். நவ.23,2020 | காலை 11.40 மணி: தமிழகத்தை நிவர் புயல் நெருங்கும் சூழலில், தயார் நிலை குறித்து முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்துகிறார். நவ.23,2020 | காலை 11.30 மணி: புயல் கரையை கடக்கும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். > முழு விவரம்: "புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்"-அமைச்சர் தங்கமணி   நவ.23,2020 | காலை 10.30 மணி:கஜா புயலை போல நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். > முழு விவரம்: ‘கஜா‘ புயலைபோல ‘நிவர்‘  பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது: ஜெயக்குமார்    நவ.23,2020 | காலை 10.05 மணி: சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. > முழு விவரம்: ‘நிவர்’ தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை    > 'நிவர்' புயல் காரணமாக மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாப்புக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன் முழு விவரம் > “நிவர் புயல் - இதையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்”- பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தல்   
http://dlvr.it/RmJchV
Share:

“ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறால் கடுமையாக அவதிப்பட்டேன்” - பாகுபலி ராணா

பாகுபலி திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. ஆஜான பாகுவான உடல் வாகில் அந்த படத்தில் மிரட்டியிருப்பார் அவர். இந்நிலையில், ரத்த கொதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பினால் தான் அவதிப்பட்டதாக சொல்லியுள்ளார் ராணா.  நடிகை சமந்தா உடனான ‘சாம் ஜாம்’ சேட் ஷோவில் இதனை தெரிவித்துள்ளார் ராணா… “வாழ்க்கை வேகமாக போய்க் கொண்டிருக்க திடீரென ஒரு பேர் இடி . ரத்த கொதிப்பு, இதயத்தில் பாதிப்பு மற்றும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டேன். கிட்டத்தை 70 சதவிகிதம் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு இருந்தது. 30 சதவிகிதம் உயிரிழக்க கூட வாய்ப்பு இருந்தது. எனது உடல்நிலை குறித்து நிறைய வதந்திகள் பறந்தன. நான் நன்றாக தான் உள்ளேன். எனக்குள்ள கோளாறுகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என அவர் சொல்லியுள்ளார்.  இதற்கு முன்னதாக அவரிடம் உடல் நல கோளாறு கேட்ட போது அதை மறுத்து வந்தார் ராணா. ராணா டகுபதி மிஹீகா பஜாஜை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தனது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
http://dlvr.it/RmJBNH
Share:

கேரளா: `வலைதளத்தில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டுச் சிறை!’ - எதிர்ப்பால் பின்வாங்கிய பினராயி விஜயன்

கேரள மாநில அரசு போலீஸ் சட்டத் திருத்த மசோதா ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவசரமாகக் கொண்டு வந்து, கவர்னரின் ஒப்புதலையும் பெற்றது. அந்த மசோதாவின் மூலம் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது போலீஸ், தாமாக முன்வந்து புகார் வழக்கு பதிவு செய்ய முடியும். சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் நபர் என்றில்லாமல், மூன்றாவதாக ஒருவர் புகார் அளித்தாலும் அது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் கைதுசெய்து சிறையில் அடைக்க, இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது. கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா `சமூக வலைதளம் மட்டுமல்லாமல், எல்லாவிதமான ஆன்லைன் ஊடகங்கள் மீதும் இதே நடவடிக்கை பாயும். எனவே, இது ஊடகங்களை ஒடுக்கும் செயல்’ என்றரீதியில் பினராயி விஜயனின் அரசுக்கு எதிராகக் குரல் எழுந்தது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. Also Read: `ஆதாரங்களை அழிப்பதைத்தான் முதல்வர் செய்துகொண்டிருக்கிறாரா?'- கொதித்த பினராயி விஜயன் ``புகார்தாரர் இல்லாமலேயே போலீஸ் வழக்கு பதிவு செய்யும்விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒரு செய்தியோ, புகைப்படமோ, கருத்தோ உண்மையானதா அல்லது அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறதா என்பதை காவல்துறையா முடிவு செய்யும்? இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்கு எதிராக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம், பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் அரசின் மோசமான செய்திகளை யாரும் விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால் சிறையில் அடைப்போம் என்ற மிரட்டல்தான் இந்தப் புதிய சட்ட மசோதா" என்கிறார் கேரள எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா. போலீஸ் சட்டத் திருத்த மசோதா, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என விமர்சனங்கள் எழுந்தன.சி.பி.எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.பி.எம் தேசியப் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ``கேரள போலீஸ் சட்டத் திருத்தம் மறு பரிசீலனை செய்யப்படும். அதில் தேவையான திருத்தம் ஏற்படுத்தி அச்சம் அகற்றப்படும்" எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, `போலீஸ் சட்டத் திருத்த மசோதாவை நடைமுறைக்குக் கொண்டுவரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். மேலும், சட்டசபையில் விவாதம் நடத்தி அனைத்து தரப்பினரிடமிருந்து கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை மூலம் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/RmJBGs
Share:

Monday, 23 November 2020

'நிவர்' தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் புதுச்சேரிக்கு அருகே 600 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், வரும் 25 ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. IMD bulletin 10 pic.twitter.com/98jr6LFnDw— TN SDMA (@tnsdma) November 23, 2020 மேலும், “சென்னையில் தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இன்று இரவு முதலே மழை தொடங்க வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கலாம். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். அதன்பிறகு தீவிரப் புயலாக மாறும். தீவிரப் புயலாகவே கரையை கடக்கும் பட்சத்தில், 89 முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RmDx18
Share:

தேர்தல் பரப்புரை எப்போது? - கமல்ஹாசன் பதில்

தேர்தல் பரப்புரை எப்போது என்பது குறித்த கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். சென்னை அடையாறில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. டி.ராஜேந்தர் - தேனாண்டாள் முரளி தலைமையில் 2 அணிகள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களத்தில் உள்ளன. இதில் இதுவரை 942 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தலில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பாஜக கூட்டணி ஏற்கெனவே தெரிந்த செய்திதான். அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார்கள். மருத நாயகத்தில் வரும் பாடல் 17-ஆம் நூற்றாண்டு காலத்தை குறிப்பிட்டு எடுக்கப்பட்டதால் அதில் மனுநீதியை பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அப்புத்தகம் புழக்கத்தில் இல்லாதது என்பது உண்மை. அப்புத்தகம் தேவையில்லை என்பது இன்னொரு மிகப்பெரிய உண்மை. அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாம் ஒரு சமூகமாக கூடி செய்து கொண்டிருக்கிறோம். வேகம் போதாது என்பது நமது மனக்குறை. நியாயமான மனக்குறைதான். கூட்டணி குறித்து சொல்லவேண்டிய நேரம் இது இல்லை. பல கூட்டணிகள் உருவாகலாம். பல கூட்டணிகள் உடையலாம். அனுமதி கிடைத்தவுடன் தேர்தல் பரப்புரையை தொடங்குவேன். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ஊடகத்தின் தேவை எங்களுக்கும் இருக்கிறது. எங்களின் தேவை உங்களுக்கும் இருக்கிறது. எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருப்போம். இதை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RmDXFd
Share:

‘விராட் கோலி ட்விட்டரில் அனைத்தையும் படிப்பார்’ ஆடம் சாம்பா

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் அனைத்து போஸ்டுகளையும் படிப்பார் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா.  கோலியும், சாம்பாவும் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  “2016 ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் ‘கோலி மற்றும் டிவில்லியர்ஸ்’ படங்களை ட்விட்டரில் பகிர்ந்து ‘ஒவ்வொரு ஆட்டத்தையும் நீங்கள் முடித்து கொடுப்பது எங்களது அதிர்ஷ்டம்’ என பாராட்டியிருந்தார். அதற்கு நான் ‘இவர்கள் யார் நட்பே?’ என ரீ ட்வீட் செய்திருந்தேன். அதற்கு அப்போது இந்திய ரசிகர்கள் எனக்கு பதில் ட்வீட் செய்திருந்தனர்.  Fairly lucky to get to watch these 2 up close every game. #appreciated pic.twitter.com/KqSydMHlDh — Keith Poordaughter (@kanerichosux) April 23, 2016 2016 சீசனில் நான் ஐபிஎல் தொடரில் பூனே அணிக்காக விளையாடினேன். அது தான் ஐபிஎல் அரங்கில் எனது முதல் போட்டி. ஆர்சிபி உடனான அந்த போட்டியில் நான்கு ஓவர்களை வீசினேன். கடைசி பந்தை பவுண்டரிக்கு விளாசிய கோலி என் பக்கத்தில் வந்து ‘ட்விட்டரிலிருந்து கொஞ்சம் தள்ளியே இருங்கள் நட்பே’ என சொன்னார். ‘கடவுளே…  ட்விட்டரில் அனைத்தையும் இவர்  படிப்பாரா’ என அதிர்ச்சி அடைந்தேன். அந்த போட்டியில் கோலி 108 ரன்களை விளாசினார்” என கோலி உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார் சாம்பா. 
http://dlvr.it/RmDXC1
Share:

Sunday, 22 November 2020

இந்தியாவில் மீண்டும் விற்பனையை தொடங்கும் ஹார்லி டேவிட்சன்!

வரும் ஜனவரி மாதம் முதல் வர்த்தக செயல்பாடுகளை முழு வீச்சில் தொடங்க இருப்பதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பிரிமீயம் ரக க்ரூஸர் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தனது வர்த்தகத்தை மறுசீரமைக்கும் வகையில், இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக திடீரென அறிவித்தது ஹார்லி டேவிட்சன். எதிர்பார்த்த அளவு இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை இல்லாததால், இந்த முடிவை எடுத்ததாக ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. மேலும், ஹரியானாவில் செயல்பட்டு வந்த ஆலையையும் மூடியது. இது அந்நிறுவனத்தின் இந்திய பணியாளர்கள், டீலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனையை மீண்டும் துவங்குவதற்கு ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் வர்த்தக செயல்பாடுகள் முழு வீச்சில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாரண்டி மற்றும் ஹார்லி உரிமையாளர் குழுக்களுக்கான செயல்பாடுகளை தொடர முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வர்த்தகத்தை மீண்டும் துவங்குவதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விற்பனை, சர்வீஸ், வாரண்டி மற்றும் உரிமையாளர் குழுக்களின் செயல்பாடுகள் மீண்டும் துவங்கப்படும் என்று ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வளரும் ஆசிய நாடுகளுக்கான பிரிவின் நிர்வாக இயக்குனர் சஜீவ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  
http://dlvr.it/RmBCPt
Share:

திருச்சி: பட்டப்பகலில் புதிய லாரி கடத்தல்.. 60 கிமீ தூரம் துரத்தி மடக்கிப்பிடித்த போலீஸ்

திருச்சியில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட புதிய லாரியை சினிமா சேஸிங் காட்சிகளைப் போல 60 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். திருச்சி மணப்பாறையில் உள்ள தனியார் அரிசி ஆலைக்குச் சொந்தமான லாரியை ஒருவர் திடீரென கடத்திச் சென்றார். இதனை கண்ட ஆலை பணியாளர்கள் உடனடியாக லாரி கடத்தப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். லாரி வரும் திசையை அறிந்த காவல்துறையினர் சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து மடக்கிப்பிடிக்க முயன்றனர். ஆனால் அந்தத் தடுப்புகளையெல்லாம் இடித்து தள்ளிவிட்டு லாரி மின்னல் வேகத்தில் பறந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், உள்ளூர்காரர் ஆகிய மூன்று பேரும், மூன்று தனித்தனி கார்களில் துரத்தினர். சினிமா காட்சியை போன்று பரபரப்பான சேஸிங் காட்சிகளை போன்று சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் தூரத்திச் சென்று, அரியமங்கலம் பால்பண்ணை அருகே லாரியை மடக்கி சுற்றிவளைத்தனர். பின்னர் லாரியில் இருந்து கடத்தியரை வெளியே இழுத்து கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சிக்கையில், பொதுமக்கள் உதவியுடன் துரத்திப் பிடிக்கப்பட்டார். விசாரணையில், லாரியைக் கடத்தியவர் திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
http://dlvr.it/Rm9vYj
Share:

'புற்றுநோயா, பார்க்கின்சன் நோயா...?' - புதின் உடல்நிலையால் கலங்கும் ரஷ்ய மக்கள்!

ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து புதுப்புது அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி வருவது ரஷ்ய மக்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது.  "புதின் சமீபகாலமாக பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார். இந்த நோயின் காரணமாக வெளியுலகில் முகம் காட்டுவதை தவிர்த்து அவர் வருகிறார். கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் கடுமையான வலியால் புதின் அவதிப்படுகிறார்.   இதனால் புதின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலக திட்டமிட்டு வருகிறார். அவரின் மகள்கள் மற்றும் 37 வயதான காதலியின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனது ராஜினாமாவை செய்வார்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து சில வாரங்களுக்கு முன், மாஸ்கோவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகரும், மாஸ்கோ ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான வலேரி சோலோவி தெரிவித்திருந்தார்.  இதே தகவல்களை முன்னணி ஊடகங்களும் சந்தேகத்துடன் வெளியிட்டு இருந்தன. இதற்கேற்றார்போலவே, அண்மையில் அவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியின் சம்பவங்கள் அமைந்தது. அந்த நிகழ்ச்சியில், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட புதின், அடிக்கடி இருமி கொண்டிருந்தார். மேலும், நாற்காலியில் அமரும்போது கைகளில் வலி ஏற்பட்டது போல, ஓர் உணர்வுடன் அமர்ந்தார். இந்த வீடியோ காட்சிகள் முதலில் வைரலான நிலையில், பின்னர் அந்த வீடியோவை எடிட் செய்து ரஷ்யா வெளியிட அது சர்ச்சையானது. வீடியோ பதிவைப் பார்த்தால் இதை தெரிந்துகொள்ள முடியும். அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். நாற்காலியைப் பிடித்து அமரும்போது அவர் கைகளில் வலியை உணர்வதை காணமுடிகிறது. பேனாவை பிடித்து எழுதும்போது அவரது கைகள் நடுங்குகின்றன. இப்போது இதே வலேரி சோலோவி, இங்கிலாந்து ஊடகமான 'டெய்லி மெயில்' (Dailymail) பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரியில் புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் வலேரி சோலோவி கூறியிருப்பதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. அதேபோல், புதினின் அடிவயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக இன்னொருவர் கூறியதாக அதேச் செய்தியில் விவரிக்கப்படுகிறது.  மேலும் இதே செய்தியில், எனக்கு கிடைத்த தகவல் உறுதியானவை. அவருக்கு இரண்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்று பார்கின்சன் எனப்படும் உளவியல் - நரம்பியல் தன்மை கொண்டது, மற்றொன்று புற்றுநோய் பிரச்னை. பார்க்கின்சன் நோய் புதினின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என கூற முடியாது. ஆனால், நரம்பியல் மண்டலத்தை பாதித்துள்ள இந்த நோயால் புதின் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். இதனால், பதவி விலக திட்டமிட்டிருக்கும் புதின் தனது இரண்டு மகள்களில் ஒருவரான கேடரினா டிகோனோவாவை அதிபராக்கவும் திட்டமிட்டு வருகிறார்" என்றும் வலேரி சோலோவி பேசியுள்ளார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதின் குறித்த செய்திகளையும், அவரின் நிலையையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அவரின் எதிரி நாடுகளும் இந்த விவகாரங்களை கண்கொத்தி பாம்பாக இருந்து கண்காணித்து வருகின்றன. இதற்கு முன் இதுபோன்ற பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன. அப்போதெல்லாம் அதனை பொய்யாக்கி இருக்கிறார். புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை ரஷ்யாவின் அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை முற்றிலும் மறுத்துள்ளது. ஆனால், அவரின் உடல்நிலை குறித்து பேச மறுத்துவிட்டது. அதனால் என்ன நடக்கிறது என்பது அறியாமல் புலம்பி வருகின்றனர் ரஷ்ய மக்கள்.
http://dlvr.it/Rm9vXM
Share:

Saturday, 21 November 2020

இலவச வேட்டி, சேலைகள்: கேரளாவுக்கு கடத்தல்... பூ வேலைப்பாடுகளுடன் ரிட்டர்ன்?! - அதிகாரிகள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள பிதர்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தீபாவளியை முன்னிட்டு இதே பகுதியிலுள்ள ஒரு தனியார் துணிக்கடையில், தன் மனைவிக்குப் புடவை ஒன்றை வாங்கியிருக்கிறார். வீட்டுக்கு வாங்கி வந்த புடவையைப் பிரித்துப் பார்த்த மனைவி, அதில் தமிழ்நாடு அரசின் முத்திரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், இது தமிழக அரசு வழங்கிய விலையில்லா சேலை என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த சேலையை எடுத்துக்கொண்டு அதே கடைக்குச் சென்று முறையிட்டிருக்கிறார்கள். தெரியாமல் நடந்துவிட்டதாகக் கூறி, அந்தப் புடவையை ரகசியமாக வாங்கி வைத்துவிட்டு, வேறொரு சேலையை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் கடைக்காரர்கள். மேலும் அந்தத் தொழிலாளி இது குறித்து நுகர்வோர் அமைப்புகளிடமும் புகார் கொடுக்க, தாசில்தார் தலைமையிலான குழுவினர் அந்தத் துணிக்கடையில் ஆய்வு செய்தனர். ஆய்வில், அதிரவைக்கும் பல முறைகேடுகள் தெரியவந்திருக்கின்றன.விலையில்லா வேட்டி சேலைகள் பாதிக்கப்பட்ட நபர் இது குறித்துப் பேசுகையில், ``மக்கள் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அவசரமா புடவையை வாங்கிட்டு, வீட்டுக்குப் போயிட்டேன். விடியக் காலையில பார்த்தா, இலவச வேட்டி சேலையில இருக்கற மாதிரி மார்க் போட்டிருக்காங்க. அரசாங்க சேலையை ஏமாத்தி 275 ரூபாய்க்கு வித்துட்டாங்க. அதுக்கு அப்புறம் போயி வேற குடுங்கன்னு மாத்திட்டு வந்துட்டேன்" என்றார் அப்பாவியாக. இந்த முறைகேடு குறித்து கூடலூர் வருவாய்த்துறை அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், ``தமிழக அரசின் விலையில்லா சேலையை இதே பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறார்கள். இந்தச் சேலைகள், தமிழகத்திலிருந்து கேரளா கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூ வேலை செய்யப்பட்டு, விற்பனை செய்ய அனுப்புகின்றனர். இந்தக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, எட்டு விலையில்லா சேலைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் கேரளாவுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள முடிவுசெய்திருக்கிறோம்" என்றனர் இந்த விவகாரம் குறித்துக் கடை உரிமையாளர், ``கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியிலிருந்து புடவைகளை மொத்தமாக கொள்முதல் செய்தேன். அதில், இந்தச் சேலைகளும் கலந்து வந்திருக்கின்றன. வேறு எதுவும் எனக்குத் தெரியாது" என்றார்.விலையில்லா வேட்டி சேலைகள் கூடலூர் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ``தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளைச் சட்டவிரோதமாக, ஒரு சில அதிகாரிகளின் உடந்தையுடன் மொத்தமாக வாங்கி, மூட்டை மூட்டையாகக் கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். அங்கு கொண்டு சென்ற பிறகு, அரசு லோகோவை அழித்து, சில பூ வேலைப்பாடுகளைச் செய்து கடைகளில் விற்கின்றனர். இதை அறியாத அப்பாவிப் பழங்குடிகளும்,தோட்டத் தொழிலாளர்களும் வாங்கி ஏமாறுகின்றனர்" என்றனர்.
http://dlvr.it/Rm7Xw2
Share:

நாயகியாக அஞ்சலி.. கன்னட சினிமாவில் கால்பதிக்கும் விஜய் மில்டன்!

கன்னட நடிகர்  சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் விஜய்மில்டன் இயக்குகிறார்.  தமிழில் ‘கோலிசோடா’ விக்ரமின் ’10 எண்றதுக்குள்ள’ படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய் மில்டன். இவர் தற்போது கன்னடத்தில் ஒரு படத்தை இயக்குகிறார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கும் இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் தனஞ்செய் நடிக்கிறார். இந்தப்படத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். கன்னட உலகில் முதன்முறையாக அறிமுகமாகும் விஜய் மில்டன் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவும் செய்கிறார். அனூப் சீலின் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை பெங்களூரில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 23 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சன்ஸ்க்ரிட் கல்லூரியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. Back to work for my new film.. pic.twitter.com/qNbqQd3bKI — DrShivaRajkumar (@NimmaShivanna) November 19, 2020 இது குறித்து நடிகர் சிவராஜ்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “ புதியப்படத்திற்காக மீண்டும் வேலைக்கு புறப்படுகிறேன்” என்று பதிவிட்ட அவர் அதனுடன் விஜய்மில்டன் மற்றும் படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.
http://dlvr.it/Rm7CsW
Share:

’மிருகம் 2’ படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்!

உலகிலேயே கொடிய நோய் என்றால் அது எய்ட்ஸ்தான். இதுவரை, இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. அப்படியொரு கொடிய நோயான எயிட்ஸ் இந்தியாவில் 1987 ஆண்டுகளின் காலக்கட்டத்தில் பரவத்தொடங்கியது. ஆனால், யாருக்கும் அது என்ன நோய் என்றும் தெரியாது. பின்புதான் கண்டுப்பிடிக்கப்பட்டது. அப்படியொரு கொடிய நோயான எயிட்ஸ் நோயை மையப்படுத்தி கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் ‘மிருகம் 2’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது. சாமி இயக்கிய மிருகம் படத்தில் நடிகர் ஆதி அறிமுகமாகி இருந்தார். அவருக்கு ஜோடியாக பத்மப்பிரியா நடித்தார். தகாத உறவுகளால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆதி அவதியுறும் காட்சிகள் விழிப்புணர்வூட்டின. அதோடு, அவரின் கெட்டப் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.   இந்நிலையில், இயக்குநர் சாமி இயக்கத்தில் மிருகம் 2 படத்தில் ஆர்.கே சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கான பூஜை போடப்பட்டுள்ள நிலையில், அதற்கான  படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தவர் “மிருகம் வெற்றிப்பெற்ற மிகச்சிறந்த படம். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் பூஜை நடத்தினேன். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க பெருமைப்படுகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இயக்குநர் சாமி உயிர், சிந்து சமவெளி, கங்காரு உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இவரது அனைத்துப் படங்களுமே சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்நிலையில், மிருகம்2 படம் எந்த மாதிரியான சர்ச்சையை கிளப்பப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்!.
http://dlvr.it/Rm7Cmv
Share:

Friday, 20 November 2020

`சசிகலா விடுதலையில் சிறப்புச் சலுகை கிடையாது!’ - கர்நாடக உள்துறை அமைச்சர்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ள சசிகலா கர்நாடகாவின் பெருங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகை பெங்களூரு நீதிமன்றத்தில் சமீபத்தில் கட்டப்பட்டது. சசிகலா சசிகலா விடுதலை குறித்து கர்நாடக ஆர்.டி.ஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி கேட்டிருந்த கேள்விக்கு, அவர் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை பதில் கொடுத்திருந்தது. அதேபோல், ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்படுபவர்களுக்கு ஒருநாள்கூட விடுமுறையில்லை எனவும் கர்நாடக சிறைத்துறை, தனது பதிலில் கூறியிருந்தது. Also Read: `சசிகலா விடுதலையில் சிக்கல்’ - அபராதத் தொகையைவைத்து அரசியல் ஆட்டம் ஆரம்பம்? அபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த கேள்வியை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவாராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த பசவராஜ், `சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படாது’ என்று தெரிவித்தார். மேலும், சிறைச்சாலை விதிகளின்படியே அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சசிகலா விடுதலையாக 68 நாள்கள் இருக்கும் நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சிறைத்துறை அவருக்கு 129 நாள்கள் சலுகை வழங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை வைத்திருந்தார். Also Read: சசிகலா 10 கோடி அபராத விவகாரம்: கடைசி நேர நீதிமன்றப் பரபரப்பு... நடந்தது என்ன?
http://dlvr.it/Rm41xJ
Share:

Thursday, 19 November 2020

`பினராயி விஜயனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நிர்பந்திக்கிறார்கள்’ - ஸ்வப்னா ஆடியோ பரபரப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள சி.பி.எம் அரசுக்கு ஸ்வப்னா சுரேஷ் வழக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. கேரள எதிர்கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க-வும் பினராயி விஜயன் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்தநிலையில் திருவனந்தபுரம் அட்டகுளங்கர சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் அந்த ஆடியோவில் ஸ்வப்னா, ``நான் சிவசங்கரனுடன் யு.ஏ.இ சென்று சி.எம்-க்காக பணம் சமந்தமாக பேரம்பேசியதாகக் கூறும்படியும், அப்படி முதல்வருக்கு எதிராகச் சாட்சி சொன்னால், என்னை அப்ரூவராக மாற்றுவதாகவும் கூறி விசாரணை அதிகாரிகள் நிர்பந்திக்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் எனக் கூறினேன், இருந்தாலும் அவர்கள் ஜெயிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.நான் அளித்த வாக்குமூலத்தை என்னைப் படிக்க விடாமல் கையெழுத்து வாங்குகிறார்கள்" என அந்த ஆடியோவில் கூறியுள்ளார். இதுகுறித்து சி.பி.எம் கேரள மாநிலத் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,``மத்திய அரசு ஏஜென்சிகள் முதலமைச்சரை குறிவைப்பது ஸ்வப்னா சுரேஷின் ஆடியோ மூலம் தெரிய வருகிறது. தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அப்ரூவராக மாற்றி முதல்வருக்கு எதிராக சாட்சி கூற மத்திய ஏஜென்சிகள் முயற்சிக்கின்றன" எனக் கூறப்பட்டுள்ளது.பினராயி விஜயன் இது ஒருபுறம் இருக்க ஜெயிலில் இருப்பவரின் ஆடியோ வெளியே வந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறியுள்ளார். `ஸ்வப்னா சுரேஷ், தனது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி உள்ளது. அதுபோல சிறையில் உள்ள போனில் இருந்து வெளியில் பேசவும் அனுமதி உண்டு. அப்படிப் பேசியதைப் பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம்’ என சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவரும் நிலையில், ஸ்வப்னா சுரேஷ் ஆடியோ மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/Rm1K74
Share:

காஷ்மீர்: லாரியில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள்; சுங்கச்சாவடி என்கவுன்ட்டர்! - திக் திக் நிமிடங்கள்

ஸ்ரீநகரை நோக்கிப் பயணித்த லாரி ஒன்று பான் டோல் பிளாசா அருகேயுள்ள சோதனைச் சாவடியில், பாதுகாப்புப் படையினரால் நிறுத்துமாறு அடையாளம் காட்டப்பட்டபோது, அதிலிருந்த ​​நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புச் படையினர் அவர்களைச் சுட்டு வீழ்த்தினர். கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், புல்வாமா மாவட்டத்திலுள்ள லெத்போரா பகுதியில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். பாகிஸ்தானை மையமாகக்கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது அந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. அதையடுத்து, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் பதுங்கி தாக்குதல்களை நடத்துவதும், ஜம்முவுக்குள் நுழைவதற்குப் பல்வேறு இடங்களில் எல்லையை மீறுவதும் தொடர்கதையாகிவருகிறது. மேலும், ஒரு வாகனத்தைத் தாக்கிய பின்னர், அவர்கள் ராணுவம் அல்லது போலீஸ் நிலைகள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்களை நிகழ்த்துவதும் நடந்துவருகின்றன.துப்பாக்கிச்சூடு இந்தநிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு காவலர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் ஸ்ரீநகருக்கு லாரியில் பயணிக்க முயன்றபோது, நக்ரோட்டா மாவட்டம் பான் டோல் பிளாசா அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருக்கிறது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநகர் நோக்கி லாரியில் பயணம் செய்தனர். பயங்கரவாதிகள் பயணித்த லாரியை பான் டோல் பிளாசா அருகில் பாதுகாப்புப் படையினர் அடையாளம் கண்டு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.துப்பாக்கிச்சூடு பாதுகாப்புப் படையினர் லாரியைச் சோதிக்கத் தொடங்கியபோது, பதுங்குகுழி போன்ற கட்டமைப்பில் மறைந்திருந்த நான்கு தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர், அதில் காவலர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, ஜம்மு காவல்துறை அதிகாரி முகேஷ் சிங் கூறுகையில், ``துப்பாக்கிச்சூட்டில் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பயணித்த லாரி ஓரளவு சேதமடைந்திருக்கிறது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அந்தப் பகுதி முழுவதும் சோதனை நடந்துவருகிறது’’ என்று தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு கடந்த ஜனவரி 31-ம் தேதியன்று காஷ்மீருக்குள் நுழைய முயன்ற மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதையடுத்து இது போன்ற சம்பவம் நடப்பது இது இரண்டாவது முறை. புல்வாமா மாவட்டத்தில், பாதுகாப்புப் படை வீரர்கள் குழு மீது தீவிரவாதிகள் நேற்று நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். புல்வாமாவின் ககாபோரா பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், தீவிரவாதி கையெறி குண்டை இலக்கைத் தவறவிட்டு சாலையில் வீசியதால், பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
http://dlvr.it/Rm1K3p
Share:

எதிர்பார்ப்புடன் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: கடந்த முறை நடந்தது என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பரபரப்பு கபில் தேவ் காலம்தொட்டு விராட் கோலி காலம் வரை நீடிக்கிறதென்றால் அது மிகையல்ல. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அது ஆஸ்திரேலியாவில் நடந்தாலும் சரி இந்தியாவில் நடந்தாலும் சரி எப்போதும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதோ மீண்டும் ஒரு இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முழு பலத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு எப்போதும் பெரிய வெற்றிகளை கொடுத்ததில்லை. 1970 முதல் 2003 வரை ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்தது. முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடர் வெற்றியை 2003 இல் தடுத்து நிறுத்தியது அனில் கும்பளே தலைமையிலான இந்திய அணி. அதன்பின்பு 2018 இல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்தது. அந்தத் தொடரில் முக்கிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டாலும், அந்தத் தொடரில் இந்தியா அசத்தியது என்பதை மறுக்க முடியாது. ஏறக்குறைய 71 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது விராட் கோலியின் படை. இந்நிலையில் மீண்டும் இம்முறையும் தொடரை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது கோலியின் அணி. இந்நிலையில் 2018 சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் குறித்து சற்றே திரும்பிப் பார்க்கலாம். விராட் கோலி ஆஸ்திரேலிய தொடர் முழுவதுமே ஆக்ரோஷமான கேப்டனாக இருந்தார். கடந்த டெஸ்ட் தொடரில் 282 ரன்களை குவித்தார். மிக முக்கியமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் 123 ரன்களை சேர்த்து அசத்தினார். ஆனாலும் அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. பெர்த் டெஸ்ட்டில் தன்னுடைய 25 ஆவது சதத்தையும் அடித்தார் கேப்டன் கோலி. இப்போது விமர்சிக்கப்பட்டாலும் அப்போதைய ஆஸ்திரேலியா தொடரில் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார் ரிஷப் பன்ட். பேட்டிங் சிறப்பாக விளையாடினாரோ இல்லையா ஸ்டம்ப் பின்னாடி நின்றுக் கொண்டு "ஸ்லெட்ஜிங்"மூலம் ஆஸி வீரர்களை கலாய்த்துக்கொண்டு இருந்தார் பன்ட். ஆனால் தொடரின் முக்கியமான 4ஆவது டெஸ்ட்டில் விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பன்ட் 159 ரன்களை எடுத்தார். மொத்தமாக அந்தத் தொடரில் 350 ரன்களை எடுத்து நல்ல பிள்ளை என பெயரெடுத்தார். ராகுல் டிராவிட்டிற்கு பின்பு ஆஸ்திரேலியா தொடரில் சுவராக இருந்து காப்பாற்றினார் புஜாரா. அந்தத் தொடரில் 4 போட்டிகளில் மொத்தம் 521 ரன்களை குவித்தார் புஜாரா. அந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மன்களில் அதிக ரன்களை எடுத்தவர் புஜாரா மட்டுமே. ஒரு டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை எடுத்து அசத்தினார். மேலும் அந்தத் தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் புஜாரா. பந்துவீச்சை பொறுத்தவரை 2018 - 2019 தொடரில் பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். அந்தத் தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ராவுக்கு உறுதுணையாக இருந்து முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் முறையே 16, 11 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
http://dlvr.it/Rm0C7w
Share:

Wednesday, 18 November 2020

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மீண்டும் ஒப்பந்தம்

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நாடு முழுவதிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஏஎல்பி எனப்படும் திறந்தவெளி அனுமதி எனும் நடைமுறை 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு நிலவும் சூழலில் ஓ.ஏ.எல்.பியின் ஐந்தாவது சுற்றுச்சூழல் ஏலம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது தமிழகத்தின் காவிரி படுகையில் அமைந்துள்ள நிலப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் 7 ஒப்பந்தமும், ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் 4 ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
http://dlvr.it/RlxVlG
Share:

`சசிகலா விடுதலையில் சிக்கல்’ - அபராதத் தொகையைவைத்து அரசியல் ஆட்டம் ஆரம்பம்?

சசிகலா, தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் அவர் விடுதலை தொடர்பான விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆனால், ``அபராதத் தொகையை செலுத்தியதால் மட்டும் சசிகலாவின் விடுதலை உறுதியாகிவிடாது. அதற்குப் பின்னால் பல அரசியல் ஆட்டங்கள் நடந்துவருகின்றன'' என்கிறார்கள் சசிகலா தரப்பினர்.ஜெயலலிதா - சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் குற்றவாளிகள் என பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் நால்வருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கினார். தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் நால்வரின் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்த நிலையில், 2016-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்தார். இந்தநிலையில் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15-ம் தேதி சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு அவரது நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிவுக்கு வருகிறது. இந்தநிலையில், சிறையில் சசிகலாவின் நன்னடத்தையைக் காரணம் காட்டி அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்கிற பேச்சுகள் தொடர்ந்து எழுந்துவந்தன.சசிகலா, இளவரசி குறிப்பாக, பா.ஜ.க-வின் தேசிய நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி ``2020-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார்” என்று ட்விட்டரில் பதிந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவர் சொன்ன தேதியிலும் சசிகலா விடுதலையாகவில்லை. மற்றொருபுறம், அவரது நன்னடத்தைக் காலத்தைக் கணக்கிட்டு 2020, செப்டம்பர் இறுதிக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் விடுதலையாக வாய்ப்புண்டு என்று சசிகலா தரப்பில் சொல்லப்பட்டது. இப்படி சசிகலா விடுதலை குறித்த தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் கர்நாடகச் சிறைத்துறைக்கு ஆர்.டி.ஐ மூலம் சசிகலா விடுதலை குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ``ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது சசிகலா ஏற்கெனவே சிறையிலிருந்த நாள்களையும், அவர் பரோலில் இரண்டு முறை வெளியே வந்த நாள்களையும் கணக்கிட்டு இந்தத் தேதியைக் குறிப்பிட்டிருந்தது கர்நாடக சிறைத்துறை. ஜனவரி 27-க்கு மேல் சசிகலாவை சிறையில் வைத்திருக்க முடியாது என்கிற நிலையே இருந்தது. ஆனால், குன்ஹா தீர்ப்பின்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்களுக்கான அபராதத் தொகையை முதலில் செலுத்த சசிகலா தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் கட்டினாலும், யாரால் இந்தத் தொகை கட்டப்பட்டது, இந்தத் தொகைக்கான வருவாய் எப்படி வந்தது, சசிகலா இந்தத் தொகைக்கு எப்படிப் பொறுப்பாவார் உள்ளிட்ட விவரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.பெங்களுர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி... இந்தநிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியனும், சசிகலாவுக்காக ஆரம்பத்தில் வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் முத்துக்குமாரும் நேற்று மாலை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அபராதத் தொகையான பத்து கோடி ரூபாயை டி.டி-யாகச் செலுத்தினார்கள். இது குறித்த தகவல் வெளியானதும் ``சசிகலாவின் விடுதலையை இனி யாரும் தடுக்க முடியாது” என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆனால், ``பணத்தைக் கட்டினாலும் சசிகலா விடுதலையிலுள்ள சிக்கல்கள் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கின்றன'' என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலாவுக்கான அபராதத் தொகைக்கு மூன்று பேர் டி.டி-களை வழங்கியிருக்கிறார்கள். அப்போது நீதிபதி ``இந்த மூவரும் சசிகலாவுக்கு எந்த வகையில் பணம் செலுத்துகிறார்கள்” என்று குறுக்குக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். `ஏற்கெனவே அளிக்கப்பட்ட குன்ஹா தீர்ப்பில் தங்கள் வசமுள்ள நகைகளை விற்று பணத்தைக் கட்டச் சொல்லியிருந்தார்கள். அந்தமுறையில் இப்போது ஏன் பணத்தைக் கட்டவில்லை?’ என்கிறரீதியில் கேள்விகளை நீதிபதி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அபராதத் தொகையை சசிகலா தரப்பு கட்டினாலும், அதை இன்று நண்பகல் வரை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்யவில்லை. Also Read: `2021 ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை!’ - ஆர்.டி.ஐ கேள்விக்கு பெங்களூரு சிறை பதில் இதற்குப் பின்னால் பலமான அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ``தனி நீதிமன்றம் பணத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், சசிகலா விடுதலையை ஜனவரி 27-ம் தேதிக்கு மேல் தள்ளிப்போட முடியாது. மேலும், இந்தப் பணம் கட்டிய பிறகு சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கும் மனுவையும் அவர்கள் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். அப்போது சிறைத்துறையும் சசிகலாவின் நன்னடத்தைக்கான காலத்தை அவருக்கு வழங்கும் நிர்ப்பந்தம் உருவாகும்.இதைத் தடுக்க முதலில் சசிகலாவின் அபராதத் தொகைக்கே சிக்கலை ஏற்படுத்தலாம் என்று தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு ஓர் அழுத்தம் சென்றிருக்கிறது. இதற்கு பின்னால் தமிழகத்தின் ஆளும் பிரமுகர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சசிகலாவின் விடுதலையால் அ.தி.மு.க-வுக்குள் பல்வேறு சர்ச்சைகள் உருவாகும் என்பதால், அவரது விடுதலையைத் தள்ளிப்போட அபராதத் தொகையை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் முன் உள்ள வாய்ப்பு.சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி எனவே சசிகலாவுக்காகக் கட்டப்பட்டுள்ள பணத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதைவைத்தே சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இதை முறியடிக்க சசிகலா தரப்பினரும் பல்வேறு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை நடத்திவருகிறார்கள். ஒருவேளை சசிகலாவின் அபராதத் தொகையைத் தனி நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் போனால் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சைகள் கிளம்ப வாய்ப்பிருக்கிறது. சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் பெங்களூரிலேயே கடந்த சில நாள்களாக முகாமிட்டு, சசிகலாவின் விடுதலையை உறுதி செய்வதற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.
http://dlvr.it/RlxVj3
Share:

வெள்ளக்காடான குற்றாலம்... 28 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வெள்ளப்பெருக்கு

மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 28 ஆண்டுகளில் இல்லாத அளவு குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக  பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் நேற்று காலையில் வெள்ளம் சற்று கட்டுக்குள் வந்தது. மதியம் மீண்டும் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் செம்மண் நிறத்தில் பாதுகாப்பு வளைவு மற்றும் தடாகத்தை தாண்டி பாலத்தின் மீது கொட்டியது. மேலும் நேரம் செல்ல செல்ல நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இரவு 8 மணி அளவில் தடாகம், பாலத்தை தாண்டி ஆற்றின் மீது தண்ணீர் விழுந்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இருந்து குற்றாலநாதர் கோயில் சன்னதி பஜாருக்கு செல்லும் பாலத்தின் மீது வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது. இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாகும். சன்னதி பஜார் வழியாக வெளியேறி தண்ணீர் அண்ணா சிலை அருகே உள்ள பாலத்தின் வழியே மீண்டும் ஆற்றில் கலந்தது. இதனால் குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் ஆற்று பாலத்தில் நேற்றிரவு போக்குவரத்து தடைபட்டது. பழைய குற்றால அருவியில் அருவியை நெருங்க முடியாத அளவிற்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. மெயினருவியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கலெக்டர் இரவோடு இரவாக கொட்டும் மழையிலும் அருவி பகுதியை பார்வையிட்டார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினரை அறிவுறுத்தினார். அருவிப் பகுதியில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
http://dlvr.it/RlwL9G
Share:

Tuesday, 17 November 2020

நடிகர் தவசிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சூரியின் அப்பாவாக தவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். 'கருப்பன் குசும்புக்காரன்' மீம்கள் மூலம் வைரலான அவரது முகம் தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து காணப்பட்ட தவசி, உதவி வேண்டி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணனின் ’சரவணா’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ரூ. 10ஆயிரமும் நிதியுதவி செய்துள்ளார். ஏற்கெனவே நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் ரூ25 ஆயிரம், நடிகர் சூரி ரூ.20 ஆயிரமும் நிதியுதவி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RlsbKV
Share:

கொரோனா மூன்றாவது அலையின் உச்சத்தைக் கடந்த டெல்லி!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதல் பெரும் பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் முக்கியமானது, யூனியன் பிரதேசமான தலைநகர் டெல்லிதான். அதேபோல இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவித்ததும் டெல்லிதான். தற்போது, கொரோனா தொற்று பரவல் மூன்றாவது அலையின் உச்சத்தில் இருப்பதாக டெல்லி அரசு அறிவித்திருந்தது. மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில், டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.கொரோனா பரிசோதனை பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்,``தற்போது கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் உச்சக்கட்டத்திலிருந்து குறைந்திருப்பதை என்னால் உங்களுக்குக் கூற முடியும். ஊரடங்கு என்பது ஒரு கற்றல் பயிற்சி. Also Read: ஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! இந்த ஊரடங்குகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டது என்னவென்றால். ஊரடங்கில் கிடைக்கும் லாபங்கள் என்பது, நாம் முகக்கவசம் அணியும்போது கிடைக்கும் பலன் போன்றது. பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது மட்டுமே ஒரே தீர்வாக அமையும். முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.கொரோனா டெல்லியில் நாளொன்றுக்கு 7,000-க்கும் அதிகமான புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுவந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 3,235 தொற்றுகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 7,000-க்கும் அதிகமானோர் வீடு திரும்பியிருக்கிறார்கள். கடந்த வாரத்தை ஒப்பிடும்போது தற்போது புதிய தொற்றின் எண்ணிக்கை பாதிக்குப் பாதியாகக் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RlsbDx
Share:

போரிஸ் காதலியால் பனிப்போர்... இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் அடுத்தடுத்து ராஜினாமா?!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் காதலியால், அந்நாட்டு பிரதமரின் அலுவலக பிரமுகர்கள் அதிகாரப் போரில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்ட கால உதவியாளர் டொமினிக் கம்மிங்ஸிவர். இவர் தனது உதவியாளர் பணியை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்பாக, இவருக்குக் கீழ் நிலையில் பணிபுரிந்த லீ கெயின் என்பவர் பிரதமர் அலுவலகப் பொறுப்பில் இருந்து திடீர் ராஜினாமா செய்தார். இந்த வாரம் லீ கெயினுக்கு போரிஸ் பதவி உயர்வு கொடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீர் ராஜினாமா செய்தார். இது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பிரதமரின் உதவியாளர்கள் ராஜினாமா குறித்து தற்போது அங்கு காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக இங்கிலாந்து ஊடகங்கள் கை காட்டுவது போரிஸ் ஜான்சனின் காதலி கேரி சைமண்ட்ஸைதான். இந்த கேரிக்கும் டொமினிக்கிற்க்கும் இடையேயான பனிப்போரை இத்தனை பிரச்னைக்கும் ஆரம்பப் புள்ளி. போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் இவர்களுக்கான அலுவலகம் இருந்து வருகிறது. இவர்களின் பனிப்போரால் கேரி அணி - டொமினிக் கம்மிங்ஸ் அணி என இரு பிரிவாக அவர்கள் இல்லத்தில் செயல்பட்டு வருகிறார்கள். போரிஸின் காதலி கேரிக்கும் ராஜினாமா செய்த லீ-க்கும் கருத்து மோதல் மிகுதியாக இருந்த நிலையில், லீயை கேரியின் எதிர்ப்பை மீறி பிரதமர் அலுவலக பதவியில் அமர்த்தியிருக்கிறார் டொமினிக். கொரோனா தடுப்பூசி 94 சதவீதம் வெற்றி: அமெரிக்க மருந்து நிறுவனம் மாடர்னா அறிவிப்பு  கேரி அணியை சேர்ந்தச் ஊடக செயலரான அலெக்ரா ஸ்ட்ராட்டன் என்பவருக்கும் மூத்த உதவியாளரான முனிரா மிர்ஸா என்பவருக்கும் லீ இருப்பது பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு இவர்கள் இருவரும், லீயுடன் சண்டையிட்டுள்ளனர். அதிலும், அலெக்ரா லீயுடன் நேரடியாக சண்டையிட்டு, "லீக்கு கீழ் வேலை பார்க்க முடியாது, எதுவானாலும் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தான் நேரடியாக தெரிவிப்பேன்" என்று போர்க்கொடி தூக்கிய சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளது. இதற்கு கேரி அனுமதி கொடுத்தும் பகையை வளர்த்திருக்கிறார். இப்படி போரிஸ் அலுவலகத்தில் மோதல்கள் வெளிப்படையாகவே நடந்து வந்துள்ளன. இதற்கிடையே, பிரதமரின் ஆலோசகர்களால் பிரதமருக்கு சரியான ஆலோசனை கொடுக்கப்படவில்லை என்று சமீபத்தில் லீயை குறிவைத்து புகார் கூறினார் கேரி. அவரின் இந்தப் புகார் தன்னை அவமதிப்பது போல் இருந்ததாக கருதிய லீ, தொடர் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி கொடுக்க வேண்டும் என எண்ணியே பதவியை ராஜினாமா செய்தார் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன. மேலும், லீயை போலவே தற்போது டொமினிக்கும் பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனினும், தனது நீண்டகால உதவியாளரான டொமினிக்கை அப்படி ஒரு முடிவை எடுக்க போரிஸ் விட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
http://dlvr.it/RlrS2P
Share:

Daily Tamil News. Powered by Blogger.

Contributors

Search This Blog

Labels

tamil nadu (1374) India (1281) chennai (1031) New delhi (664) world (360) jayalalitha (203) politicians (196) Jallilkattu (190) Tamilnadu (130) Black money (125) World news (115) narendra modi (108) dmk (97) O paneer selvam (90) indian politcis (85) sasikala (75) ALADMK (74) BJP (74) struggle (69) bank (68) government (64) jallikattu (64) supreme court (63) cm (61) washing ton (59) india politics (57) mumbai (57) tamil nadu politics (55) lucknow (53) US (52) bangalore (51) climate (51) madurai (51) Reserve bank of india (49) Tamilnadu politics (48) shashikala (48) vardha.cyclone (46) MK stalin (45) srilanka (45) election (42) modi (41) minister edappadi palanisamy (39) Railway (37) income tax (37) congress (36) panneer selvam (36) world terrorism (36) Accident (34) central government (34) rahul gandhi (34) tamil nadu cinema (34) fisherman (33) pakistan (33) ADMK (32) federal government (32) jammu kashmir (32) Alanganallur (31) kerala (31) apollo hospital (30) marina beach (30) tami nadu (30) MLA (29) court (29) ATM (28) uttar pradesh (28) Tamilnadu Police (27) stalin (27) OPSVsSasikala (26) UP (26) karunaanithi (26) cyclone (25) OPS Vs Sasikala (24) governor (24) india sports (24) Sasikala vs OPS (23) andra pradesh (23) deepa jayakumar (23) heavy rain (23) tirunelveli (23) election commission of india (22) pm (22) sports (22) weDoJallikattu (22) cricket (21) kolkata (21) money seized (21) thirukural (21) vidyasagar rao (21) china (20) pranab mugarjee (20) lok sabha (19) world sports (19) Coimbatore (18) OPS (18) america (18) donald (18) parliment (18) venkaiah naidu (18) UP chief minister Akhilesh (17) ban (17) cbi (17) death (17) india army (17) karnataka (17) ram mohan rao (17) vaiko (17) AIADMK (16) ISIS (16) SasikalaVsOPS (16) india cinema (16) pongal festival (16) rain (16) rajya sabha (16) students (16) Delhi (15) Hyderabad (15) R.K.nagar (15) Tamil Nadu Assembly (15) agriculture (15) airport (15) donald trump (15) islambad (15) jeyalalitha (15) nada cyclone (15) salem (15) state assembly election (15) tamilnadu cinema (15) alanganallur Jallikattu (14) arrest (14) earthquake (14) india-pakistan (14) london (14) poes garden (14) pon radha krishnan (14) puducherry (14) samajwadi party (14) tamil nadu election (14) tamil nadu police (14) thiruvananthapuram (14) world politics (14) State government (13) madras high court (13) punjub (13) republic day (13) sasikala puhpa (13) school (13) ISupportOPS (12) New CM (12) SupportJallikattu (12) arun-jaitley (12) attack (12) india terrorism (12) old banknotes (12) old notes (12) patna (12) srinagar (12) Assembly election (11) RBI (11) bank notes (11) bay of bengal (11) chandigarh (11) emergency law (11) indian army (11) notes (11) parliament (11) president (11) pudukottai (11) ramadoss (11) tamilnadu politics (11) trump (11) CM edappadi palanisamy (10) Rajiniganth (10) UN (10) farmer (10) japan (10) maharashtra (10) meterorological center (10) metrological centre (10) minister sushma swaraj (10) new banknotes (10) vardha (10) Army (9) colombo (9) crop farmer (9) dinakaran (9) dindigual (9) electricity (9) kanimozhi (9) north Korean (9) russia (9) tirupathi (9) MDMK (8) bank new notes (8) barack obma (8) cho ramaswamy (8) cinima (8) cuddalore (8) federal budget (8) finance minster arun jaitley (8) hospital (8) kamal hassan (8) kancheepuram (8) mayawathi (8) mp (8) nagapattinum (8) new york (8) petrol (8) rameshwaram (8) sexual harassment (8) shekhar reddy (8) strike (8) subramaniya samy (8) tamilnadu chief secretary (8) tiruvannamalai (8) twitter (8) vijay mallya (8) MarinaProtest (7) Tirunavukkarasar (7) america politics (7) australia (7) budget (7) dhanapal (7) gujarat (7) high court (7) hydro-carbon plan (7) indian national flag (7) indian police (7) injured (7) kejriwal (7) killed (7) marina jallikattu (7) minister (7) political parties (7) social networking (7) tamil (7) tamil nadu people (7) tamilisai (7) thambidurai (7) thanjavur (7) tiruvarur (7) varanasi (7) GST (6) Girija Vaidyanathan (6) ISRO satellite (6) Krishnagiri (6) Peta (6) Rajnath Singh (6) SBI (6) aadhaar card (6) aardhar card (6) bangladesh (6) bank account (6) banknotes (6) beijing (6) bhopal (6) bihar (6) chandrababu naidu (6) christmas (6) cricket sports (6) dubai (6) ennore (6) erode (6) facebook (6) gandhinagar (6) india cricket (6) jail (6) kauvery hospital (6) kuvattur (6) madhya pradesh (6) madusudanan (6) pandiyarajan (6) prime minister (6) soldiers (6) sonia gandhi (6) student (6) sucide (6) syria (6) theni (6) tuticorin (6) voting (6) withdrawal (6) Afghanistan (5) BJP.finance minister arun jaitley (5) Vijayawada (5) airlines (5) american politics (5) andaman and nicobar islands (5) arvind kejriwal (5) avalanche (5) border security force (5) cho (5) depositing bank (5) digital transaction (5) elangovan (5) former justice markandey katju (5) france (5) goa (5) gunfight (5) india-england (5) indonesia (5) iraq (5) kanyakumari (5) mahatma gandhi (5) metro railway (5) mexico (5) money laundering (5) murder (5) national Green Tribunal (5) neduvasal (5) newyork (5) palanisamy (5) petrol bunk (5) plus 2 (5) prison (5) ration card (5) sarath kumar (5) tamilsai soundarajan (5) terrorist (5) thiruvalluvar (5) tiruchirapalli (5) trichy (5) union minister finance arun jaitley (5) uttarakhand (5) vellore (5) vidhyasagar rao (5) villupuram (5) visa (5) whatapp (5) BSP (4) MPs (4) Madurai high court (4) Paris (4) advani BJP (4) agrahara jail (4) aircraft (4) amazon (4) amit shah (4) amritsar (4) balasore (4) barley (4) beta (4) bi-election (4) colleges (4) dam (4) doctors (4) farmer suicide (4) fog (4) former justice markandeya katju (4) germany (4) gunfire (4) human rights (4) india news (4) indian bank (4) indian cricket (4) israeli (4) jaipur (4) jan dhan bank (4) judgement (4) kanpur (4) kashmir (4) kasparov cycle (4) madurai tamil nadu (4) mahendra dhoni (4) mamata banerjee (4) mamtha banerjee (4) march 8th (4) mobile smart phone (4) mulayam singh yadav (4) new general secretary (4) new year (4) new zealand (4) open tennis (4) orissa (4) pakistan politics (4) panaji (4) sabarimala (4) satellite (4) security (4) sezied (4) tennis (4) terrisom (4) thiruvullar (4) train accident (4) tv channels (4) union home minister (4) union minister rajnath singh (4) vendhar movies (4) vijaykanth (4) virat kohli (4) withdrawn (4) .world (3) 10 (3) 10th and 12 th (3) 2000 notes (3) ALDMK (3) CBSE (3) DSP (3) Gk.vasan (3) H-1B (3) India budget 2017-2018 (3) LiveUpdates (3) MGR (3) S.R.Balasubramain (3) Seoul (3) Tokyo (3) WeSupportOPS (3) agra (3) ahmedabad (3) ankara (3) army chief (3) assembly committee (3) assert (3) bahujan samaj (3) berlin (3) bipin rawat (3) birthday party (3) boat accident (3) brazil (3) cabinet committee (3) california (3) cauvery (3) chennia (3) chicago (3) chidambaram (3) chief Velupillai Prabhakaran's (3) cinema (3) cm chandrababu naidu india (3) collector (3) congres (3) deepak (3) dengue fever (3) depty CM (3) economic (3) england (3) federal minister (3) fight (3) flag hoist (3) former chief minister jayalalithaa (3) gas (3) gayatri Prajapati. (3) general meeting (3) government hospital (3) granite (3) indians (3) interest (3) jamaluddin (3) japanese prime minister shinzo (3) jobs (3) judge (3) kadalur (3) karachi (3) karthikeya sivasenapathy (3) kavery (3) kerala politics (3) kodaikanal (3) last evening (3) latest news (3) madhan (3) maneka gandhi (3) manmohan singh (3) melbourne (3) melur (3) military (3) muslim (3) nagercoil (3) namakkal (3) nashik (3) navjot singh sidhu (3) nirmala sitharaman (3) nitish kumar (3) noida (3) olymbic (3) pakistan army (3) paneerselvam (3) police (3) pollachi (3) pon radhakrishna (3) ponniyan (3) pyongyang (3) radhakrishna (3) raghava lawrence (3) rama rao (3) ramanadhapuram (3) release (3) rocket (3) sahitya academy (3) san francisco (3) sengottaiyan (3) silent struggle (3) south Korean (3) speaker (3) special buses (3) state governor (3) suresh prabu (3) tamil nadu government (3) telangana (3) terrorist attack (3) thirumavalavan (3) tirupur (3) tiruvallur (3) tnpsc (3) tsunami (3) union ministry (3) us government (3) vadivasal (3) vijay (3) won (3) yogi (3) yuvraj singh (3) 26 week period (2) Ariyalur (2) BCCI (2) British (2) CIA (2) IAS (2) India-Bangladesh (2) Iphone (2) Kabul (2) M.P.pandiyanrajan (2) M.R.Vijaya Baskar (2) MGR memeorial (2) NIA (2) Qatar (2) Rk (2) State bank (2) Taliban terrorist (2) Tamil Nadu legislative Assembly (2) US president donald trump (2) abu bakr baghdadi (2) act (2) against (2) air india (2) ajith kumar (2) allahabad (2) ambur (2) anbumani ramadoss (2) animal welfare board (2) anna hazare (2) assam (2) aswin (2) austrian (2) avaniyapuram (2) award (2) awards (2) baba ramdev (2) badminton (2) baghbad (2) balachandran (2) banglore (2) bashar al-assad (2) bhairava (2) blast (2) bollywood (2) bus accident (2) canara bank (2) chief minister narayanaswamy (2) chinnama (2) ciricena (2) coin (2) coke (2) commissioner (2) corruption (2) credit card (2) cuba (2) cylinder (2) dehradun (2) deputy governor (2) deputy speaker thambidurai (2) dharamshala (2) dharmapuri (2) died (2) double leaf symbol (2) doubt (2) driving license (2) duraimurukan (2) election campaign (2) european (2) examination (2) fake doctors (2) fake website (2) federal minister manohar parrikar (2) female employee (2) formars loan (2) former cricketer (2) former minister (2) gambia (2) geneva (2) gold (2) google app (2) gun battle (2) guwahati (2) heart attack (2) heavy security (2) heavy snow (2) hike (2) hiphop adhi (2) hiphop gen (2) hirakhand express (2) hosur (2) hunger strike (2) ias officers (2) incident (2) india budget (2) indian sports (2) international women's day (2) istanbul (2) italy (2) jakarta (2) jayakumar (2) jio (2) kachchatheevu (2) kantaleru (2) karunas (2) kenya (2) kerala cinema (2) kingfisher owner (2) kohima (2) kohli (2) kollywood (2) kudankulam (2) luncknow (2) madurai tamilnadu (2) mahabratam (2) maitreyan (2) malasiya (2) manila (2) manju virattu (2) march (2) meeting (2) mellur (2) memorial (2) missile (2) missing (2) mist (2) monsoon rains (2) mullaimani (2) munisamy (2) mysore court (2) naam thamizhar leader seemam (2) nadukkuppam (2) nagarajan (2) nagpur (2) natraj (2) nattional anthem (2) nawaz sharif (2) neet exam (2) new chief justice (2) new notes (2) new rules (2) new year calendar (2) nigeria (2) nonviolent (2) nsg (2) nuclear weapons (2) obma (2) online money transfer (2) pahraic (2) passport (2) people (2) people suffer (2) pepsi (2) permpalur (2) petrol punk (2) philippines (2) pinarryi vijayan (2) polling (2) pondicherry (2) president election (2) private company (2) pune (2) rahul (2) raipur (2) rajiv gandhi (2) rama chandran (2) ramakrishnan (2) ratan tata (2) ravi shankar prasad (2) rekla race (2) resignation (2) robert vadra (2) rupee (2) russian (2) russian president putin (2) sasikala upset (2) saudhi prince (2) sea shore (2) seized (2) shiva sena (2) shock (2) siddaramaiah (2) simbu (2) sivagangi (2) social website (2) solar (2) solider (2) south africa (2) south china (2) south korea (2) spy agency (2) srilanka navy (2) state election commission (2) suicide (2) supporter (2) surat (2) surya (2) syrain.government (2) syrian (2) tamil language (2) tamil nadu school education department (2) tamil nadu government examination (2) tamil nadu sports (2) tamilnaducongresscommittee (2) tamukkam (2) thalibans (2) thane (2) thief (2) traffic (2) transport (2) travelling (2) triplicane (2) turkey (2) uk (2) unemployment (2) urjit patel (2) us presidential election (2) veeraghav (2) virender sehwag (2) virudhu nagar (2) water problem (2) west bengal (2) white house (2) wifi (2) world AIDS awareness day (2) world election (2) 10 lakhs (1) 12 satellites (1) 127 (1) 14 years girl (1) 150 hours 50 results (1) 200 railway station (1) 24 indian lauguages (1) 35 thousand (1) 4.6 richter (1) 5 dead (1) 500 (1) 5G (1) 62 candidates (1) 84 projects (1) A.K.Saseendran (1) A.R Nagar (1) AIMS doctors (1) ALLMS (1) AR rahman (1) ARA (1) Al - Qaeda leader (1) Anurag Thakur (1) Ashoka (1) Asia top 10 beach (1) Babri Masjid (1) Ban PetaJallilkattu (1) British government (1) C.V.shanmugam (1) CM akhilesh yadav (1) Cairo (1) Coimbatore corporation (1) Coimbatore industry association (1) DRC (1) Damascus (1) Dayanidhi maran (1) Ddmk (1) E-wallet (1) EU law (1) Egypt (1) Ernakulam (1) FM (1) Former Secretary General ban Ki moon (1) GAAR (1) GH (1) GSP (1) GSSV (1) GTF (1) Gate (1) George Michael (1) Haridwar (1) Himachal Pradesh (1) ICF (1) ICU (1) IFS (1) IGP (1) INS virat ship (1) IOA (1) IPL (1) IPS (1) IRCTC (1) Identity card (1) India budget 2017 (1) Indian Embassy warning (1) Indus os (1) JIPMER (1) K.A.sengottaiyan (1) LK advani (1) Lahore (1) Lalu prasad (1) Los Angeles (1) Lss nagar (1) MBBS Entrance (1) MNS (1) Maharajganj (1) McDonald (1) Megaserials (1) Muzaffarnagar (1) NGO (1) NGT (1) NITI AAYOG (1) Nakappattinam (1) Obama wife (1) P.H.pandiyan (1) P.S.P Jawan Tej Bahadur (1) PM benjamin netanyahu (1) PM justin (1) PMs office (1) Panipat (1) R.K (1) R.j balaji (1) R.k singh (1) RSS (1) RSS office (1) Richmond (1) S.K.kaul (1) S.P.B (1) S.V.shekher (1) SIS (1) Saudi (1) Singampunari (1) Sunderlal patwa (1) TNSPC (1) TNSTC (1) Thamirabarani (1) Tindivanam (1) Tondiarpet (1) UAE (1) UK government (1) UN to hawaii (1) UP chief minister yogi (1) UP. (1) US Michelle Obama (1) US citizen (1) US congress (1) Ukraine (1) Union Agriculture Minister Radha Mohan (1) V.M.C sivakumar (1) VOC (1) VRS website (1) VS Acharaya (1) Vannadasan (1) abbas mohamed (1) abdul basit (1) abhay chautala (1) abhishek singhvi (1) abu dhabi (1) aceh (1) actor dhanush (1) actor vishal (1) advani (1) advice (1) affect growth (1) after-143-years-tamil-nadu-will-reel-worst-water-scarcity-redalert (1) agartala (1) agni 5 (1) agni-4 (1) agriculture technology (1) ahmed (1) air force (1) air force station (1) air pollution (1) air traffic (1) airforce commander (1) akarttala (1) aleppo (1) alganganallur (1) almora (1) amalanatan (1) amaran (1) amarinder (1) ambassador (1) american (1) american intelligence agency (1) american tennis player (1) amethi (1) amitabh kant (1) ammonia (1) amravati (1) amrut (1) anandhraj (1) anbumani (1) anciyo (1) andhiyur (1) anemia (1) animal welfare activists (1) anna library (1) announcement (1) anoyta (1) anpuselvan (1) anti-national slogans (1) anti-terrorism (1) antonio (1) antriv kolov (1) anushka (1) anwar (1) anxiety (1) apoorva verma (1) apple (1) archives (1) arest (1) army honor (1) arnab goswami (1) arni (1) arrived (1) artiai (1) artifical intelligence (1) arun kumar (1) arunachal pradesh (1) ashoka chakra (1) ashokamittrian (1) ashwin (1) asian cup (1) asian-pacific (1) assembly budget (1) assembly contituency (1) assembly secretary (1) assistant commissioner (1) associate general secretary (1) astrologer (1) athikadavu avinashi project (1) athur (1) atinam (1) attach (1) attur (1) auckland (1) australia-india (1) australian (1) awarness (1) axix bank (1) ayodhya babri masjid (1) azhagiri (1) azmi (1) babri-3 (1) baby (1) baby death (1) bach (1) back money (1) bacteria (1) bairava (1) balkans (1) bamoko (1) ban Ki moon (1) banaskantha (1) bangaldesh (1) bangalore-chennai (1) bank fraud (1) bank of india post (1) banking service (1) bankloans (1) banned (1) baran (1) barcelona (1) barnala (1) beam of app (1) beating (1) beggar (1) beirut (1) benami (1) benjamin netanyahu (1) bharat mata temple (1) bharat ratna (1) bhavana (1) bhogi (1) bhubaneswar (1) bhutton's son (1) bike (1) black mail (1) blessed baby (1) blocked (1) boat symbol (1) bogey festival (1) bolivia (1) bombing (1) boris johnson (1) borra kolin (1) brain tumor (1) bsnl (1) budget session (1) budget2017 (1) bulls (1) bunyan (1) burj khalifa (1) burn fire (1) burned house (1) buses (1) business (1) cable (1) canada (1) canceled (1) canda (1) cannabis (1) cantipur (1) cartoon (1) cash (1) castro (1) cattur (1) cavery (1) celebration (1) central bank governor (1) central board of direct taxes (1) central buget (1) chain protect (1) chairman pratab reddy (1) change.org (1) channel programme (1) chargesheet (1) chariman cyrus mistry (1) cheenai (1) chemmai (1) chengalpattu (1) chenna (1) chennai court (1) chennai flood (1) chennai marathan (1) chennai.tamil nadu (1) chenni (1) chief minister (1) chief rakil sharif (1) chittoor (1) christchurch (1) church (1) cinema election (1) civil servants (1) class X (1) cleaning (1) cliamte (1) cm of india (1) coast guard HC (1) cocaine (1) cockroach (1) collect (1) collectors (1) college campus (1) commitment room (1) committe (1) congressled national democratic alliance (1) constittutional Law (1) cool drink (1) council secretary jamaluddin (1) crashed (1) criminal action (1) criminal court (1) cristian (1) cristiano ronaldo (1) crying (1) cryogenic engine (1) cuban (1) current shutdown (1) cuttack (1) cyclone thanjavur (1) dangal (1) darshan (1) daughter (1) davidson (1) dawood ibrahim (1) dead body (1) death certificate (1) debit card (1) debit money bank (1) debosit (1) debts (1) defense ministry (1) dehradan (1) delhi high court (1) delhi metro rail (1) delhi police (1) delhi university (1) delta (1) demolition (1) deposit (1) depression (1) deputy cm sukhbir singh badal (1) destroy (1) devakottai (1) devil guinea (1) dhaka (1) diesel (1) digital money transfer (1) dinanath bhargava (1) discipline (1) divorce (1) dmk leader stalin (1) dmk-mla (1) document missing (1) dog (1) domestic technology (1) donation (1) double leaf off (1) dr.besant road (1) dress (1) drinking achohol (1) driver (1) dropped (1) drought relief (1) drugs (1) duraisamy (1) early life (1) earth (1) eastern european (1) editorial (1) education minister sengottaiyan (1) election date (1) election government (1) electronic transaction (1) elepant (1) elepants (1) email (1) employee (1) enforcement (1) engineer (1) engineering entrance examination 2018 (1) ennore port (1) environment pollution (1) etah (1) ettayapuram (1) exam start (1) examination result (1) extreme stress (1) fake note (1) fake political (1) fallen (1) farmer association (1) farmers (1) fasting (1) federal environment minister Anil Madhav Dave (1) federal environment minister Anil kumar Dave (1) federal interior ministry (1) federal revenue secretary (1) federal sakthikanth das (1) female priest (1) festival prize award (1) final balance (1) financial sector (1) fire accident (1) fire fight (1) fireworks factory (1) flight (1) floods (1) florida (1) food menu (1) food ration (1) food waste (1) foodstuff (1) football (1) foreign car (1) foreign secretary (1) foreigners (1) forest fire (1) former federal minister mathan singh (1) former CM (1) former chairman (1) former chief commander (1) former nationl security adviser (1) former president akbar rafasanjani (1) former president pervez musharraf (1) free cycle (1) free gas (1) freedom day (1) freedom struggle (1) french brie (1) friend geeta (1) gangtok (1) gazette (1) general manager (1) george HW Bush (1) geroge (1) ghaziabad (1) global economic growth (1) gokula indira (1) gold seized (1) good luck rajendran (1) google (1) greetings (1) guinea (1) guinness (1) gujranwala (1) gulf (1) gun (1) gurushathira award (1) gurvayar (1) hacked (1) hamid ansari (1) handicapped (1) hanoi (1) hanumantha rao (1) harbor (1) harsimrat Kaur Badal (1) hasmuk atiya (1) head masters (1) headquaters (1) health (1) health mental (1) health tips (1) heart disease (1) heavy damage (1) heavy hot (1) heavy police (1) heavy raid (1) hekarai jekatis (1) held (1) helicopter (1) helping (1) hema malini (1) higher education institution (1) hijacked (1) hillary (1) hilter's phone (1) hindhirai (1) hockey (1) hoilday (1) hollywood meryl streep (1) honolulu (1) hosting (1) hot news (1) housing (1) houston (1) husband (1) hydrocarbon project (1) hyperloop (1) iPad (1) illayaraja (1) illness (1) income (1) increase (1) inda (1) india accide (1) india economy (1) india management insititutes (1) india people (1) india. (1) india.dam opened (1) indian attack (1) indian exports (1) indian external affairs (1) indian fisherman (1) indian judiciary (1) indian navy (1) indian ocean (1) indian panic (1) indian plane (1) indian postal department (1) indian premier league (1) indian rocket (1) indian singer (1) indian space research organisation (1) indian tourism industry (1) indira nooyi (1) indore (1) indus river (1) infection (1) innasipuram (1) inner sheet (1) instruction (1) insulin (1) internal problem (1) international terrorist (1) irrigation expert (1) isi (1) islamists (1) itanagar (1) jallianwala bagh (1) jamaica (1) jared kouchner (1) jarvis (1) jayendra bend (1) jeevan nedujaliyan (1) jerusalem (1) jharkhand (1) jio news (1) job (1) joe biden (1) johannesburg (1) john Kirby (1) john glen (1) juvenile reformatory (1) k.P.Munisamy (1) kaccat island (1) kadular (1) kalahasthi (1) kalappattu (1) kalmadi (1) kalraj mishra (1) kalyani (1) kamal orders (1) kamal writer (1) kampala (1) kanasa (1) kandahar (1) kantheri (1) kapil dev (1) karaikudi (1) karrur (1) karthigai (1) karthik chidambram (1) karuppupanam (1) kasimedu (1) kastli (1) katchativu.tamil nadu (1) kathmandu (1) katju (1) kattaras (1) kedar jadhav (1) kehar jakatis singh (1) kelakatti (1) khadi (1) kholi (1) killing cattle (1) killing cow (1) kim yang-us (1) kindi (1) kiran bedi (1) kiran bhatt (1) kiran kumar (1) kishore pajivala (1) kochi (1) kolkata high court karna (1) korea (1) kottaikadu (1) kottayam (1) kovai (1) kovilpatti (1) koyampet (1) krisha water (1) kudimaramath (1) kumbakonam (1) kurian (1) kuwait city (1) kyrgzstan army (1) labor department report (1) lakshmi rama krishnan (1) laser (1) lashkar terrorist (1) launch (1) lawyer (1) leading news agency (1) leaked (1) legislative elevtion (1) letter (1) libya (1) libyato malta (1) lifetime achievment (1) limca book of adventure (1) link (1) literature award (1) live update (1) local airlines (1) lokesh india (1) london ISIS (1) london doctor (1) london. (1) low (1) m.g.r (1) madhavan patrick (1) madras court (1) madura (1) makara jyothi (1) makaraju sakshi (1) male employees (1) mali (1) mammooty (1) mamtha (1) manipur (1) manov (1) mantri jwala (1) maoist (1) maran brother (1) marathan (1) march 16 (1) march 9 (1) mariappan (1) marina (1) marithripala (1) mark zuckerbergs (1) markandey katju (1) markandeya kadgu (1) marry (1) maternity leave (1) mathura (1) may 15 (1) mayavadhi (1) mayawati (1) media (1) medical (1) medical entrance examination (1) meerut (1) meerut bjp (1) meet (1) mega app (1) mehabooba (1) mekapupa (1) men and women (1) mice (1) miitary (1) military aircraft (1) military helicopter (1) military hospital (1) milk agents (1) milla trading system (1) ministry of health (1) ministryof finance (1) minsiter (1) mirzappur (1) missile launcher (1) missile test (1) mod (1) mohali (1) mohammad ali tirani (1) mohammad kaif (1) mohamud ali durrai (1) mohan bhagwat (1) mokaticu (1) mollywood (1) money lender (1) money transaction (1) money trapped (1) money trapping (1) moon (1) mosal (1) moscow (1) mosow (1) mosquitoes (1) ms dhoni (1) mudumali (1) mukesh Ambani (1) muktcar (1) mumbai cinema (1) municipal corporation (1) munusamy (1) murali vijay.cricket (1) mushroom drugs (1) myanmar (1) mylapre (1) mysore (1) nagaland (1) nagar (1) nagare (1) nagercoil to chennai (1) najipjan (1) nallakannu (1) namanathapuram (1) nanjil sampath (1) napier bridge (1) narcotics (1) natarajan (1) national anthem (1) national conference (1) national crime records bureau (1) national day (1) national family welfare in india (1) national forest (1) national human rights commission (1) national khadi village industries commission (1) national physics laboratory (1) national satellite (1) national symbol (1) national unity and community reconcilation day (1) nationalist congress (1) nationwide driver licence renewal (1) navaneetha krishnan (1) naveen jindal (1) navsari (1) naxal (1) ndia (1) nehru (1) nellai (1) nellai university (1) nepal india (1) neptune statue (1) nesapakkam (1) new app (1) new bill (1) new city (1) new coins (1) new delhi rahul gandhi (1) new release (1) new report (1) new secretary (1) nigera (1) niligiris district (1) nirmala (1) nirmala periyasamy (1) nitin patel (1) nobel prize (1) nomination (1) norway (1) notice (1) nugampakkam (1) obama (1) odisa (1) offical (1) office (1) ola (1) old pipes (1) om puri (1) om puri kalamanar (1) online reservation (1) ooty (1) open cermony (1) opening (1) oscar ward (1) oslo (1) ottawa (1) pacific ocean (1) pakistan based terrorist (1) palakkad (1) palamedu (1) palani (1) pan card (1) panchayat leader (1) pandas (1) pandiyan (1) panjul (1) parkash singh (1) parrikaar (1) passes away (1) patanjali (1) patayun (1) pathankot (1) pavutista medvedev (1) paytm wallet (1) pellat (1) pemetara (1) pen or boat or grapes (1) pension (1) peon freedom fighter (1) perambalur (1) periyasamy (1) peshawar (1) petta (1) photos (1) pilgrims (1) pina niyeto (1) pirankoyis hollande (1) piratyankara (1) piryankiyan (1) pitivarant (1) plane (1) planes collision (1) planned budget (1) poet (1) police shot (1) police station (1) poll (1) ponniah anandarajah (1) portugal (1) pound (1) pouring kerala (1) pradhan (1) prakash javadekar (1) praveen nair (1) pregnant (1) prema kantu (1) prescription (1) prime minister manmohan singh (1) prime minister sheikh hasina (1) princess leah (1) private (1) private banks (1) priyanka chopra (1) priyanka gandhi (1) problem issue (1) producer association (1) promotion (1) property (1) public leave (1) puerto rico (1) pujas (1) punishment (1) punjub india (1) puthin (1) puzzle (1) queensland (1) radha rajan (1) radhakrishnan (1) radhanagar (1) radio (1) rae bareli (1) rahul amethi (1) rahul dravid (1) raid (1) railway minister (1) railway strike (1) raised (1) raj (1) rajaji hall (1) rajapaksa (1) rajasthan (1) rajbhavan (1) rajendra balaji minister (1) rajesh lakkani (1) rajeshkumar (1) rajeshwaram (1) raju (1) ram mohan roy (1) rama sigh (1) ramajayam (1) ramasamy (1) ramathapuram (1) ramki-nirosa (1) ranchi (1) ranjini (1) rao (1) raped teacher (1) ration shops (1) ratnam (1) real estate (1) red fort (1) refused (1) repayment (1) report (1) rescue (1) research project (1) retired judge (1) retired officer (1) retirement (1) rice dealer (1) rice price (1) richard verma (1) rijiju kiran (1) rio de janeiro (1) rishikesh (1) riyadh (1) road accident (1) road destroy (1) rohan bopanna (1) rohtak (1) romania (1) rome (1) rubber stamp (1) russian ambassaor (1) s.balachandran (1) sabha (1) sachin tendulkar (1) sahara chief subrata roy (1) sahara group (1) saipulla (1) sajahanpur (1) sakthi kantha das (1) salt (1) sami (1) samsung (1) sandalwood (1) sandstone (1) sania (1) santiago (1) sao paulo (1) sarabjit's dalbir kaur (1) saravan (1) saroja devi (1) sasikala pushpa (1) satta sabai (1) saudi arabia (1) saudi-led (1) saving account (1) schemes (1) school chennai (1) school student (1) school vechile (1) scientists (1) sea birds (1) search engine (1) second captial (1) secretary general (1) secretary higher education (1) secrete messages (1) serena (1) serena willams (1) servant sandals (1) servay (1) service tax (1) sexual exploitation (1) shanghai (1) shankarsubu (1) sharad pawar (1) sharada sit funds (1) sharapova (1) shashi tharoor (1) sheikh hasina (1) sheila dikshit (1) sheila dixit (1) shekanur (1) shellby (1) sheryas Iyer (1) shimla (1) ship accident (1) ship collision (1) shiva temple (1) shivaji (1) shot (1) siberia (1) sikkim (1) sindh (1) sindhu (1) singapore (1) singer (1) sitaram yechurv rokkamar (1) slary (1) smoke inhalation (1) snake catching (1) social (1) social activist (1) social media (1) solar laboratory (1) somalia (1) son (1) south america (1) south american (1) south monsoon (1) southern railway (1) space (1) special court (1) speed (1) spider venom (1) sridhar (1) srilanka jallikattu (1) srilanka president ciricena (1) srilanka world (1) sriperamputhur (1) sripriya (1) stalin. (1) state cabinet (1) state chief secretary (1) state election (1) state former cm (1) state high court (1) state responsibility (1) statue trafficking (1) stress damage (1) struggler (1) student murder (1) success (1) sugar (1) sugarcane (1) summer (1) sun (1) superbug (1) surgical strike (1) suriya (1) surjeet singh barnala (1) surjit singh (1) sushil chandra (1) suthaharan (1) swine flu (1) swiss bank (1) sydney (1) syed ali shah geelani (1) syed modi (1) symbol (1) tahsildar (1) taj mahal (1) taka (1) tambaram railway station (1) tamil nadu chief electoral officer (1) tamil nadu cinema association (1) tamil nadu film industry (1) tamil nadu.lap-top (1) tamil national alliance (1) tamilnadu congess party (1) tamilnadu terrorism (1) tamils (1) tamilsai (1) tao (1) tata groups (1) tatri (1) tavos (1) teenage girl (1) telengana (1) telugana (1) telugu ganga project (1) temple (1) ten rupee coin (1) terrorist masood azhar council (1) thaipusam (1) thambaram air force (1) thamiraparani (1) thenmalli (1) third place (1) thiruchengode (1) thirukonamalai (1) thirupattur (1) thiruthani (1) thousand (1) thrown bank notes (1) thursday (1) ticket (1) tienpiesci (1) tillerson (1) time list (1) timeline (1) tirnamool congress (1) tirpur (1) tisa (1) tncongress (1) toilets (1) tokoyo (1) toll (1) top richest person (1) toronto (1) town hall (1) traffic jam (1) traffic road tamil nadu (1) train (1) train blast (1) train bomb (1) train fares (1) train journey (1) train service (1) travancore (1) treatment india (1) trichy siva (1) tripura (1) trisha (1) truck crashed (1) trump nephew (1) tta (1) ttr (1) ttv dinakaran (1) tughlaq (1) turkey ambassador (1) turn bull (1) tweeted (1) twenty20 (1) two indians (1) tyagi (1) udham singh (1) uma bharti (1) union budget (1) union environment (1) union government (1) union law ministry (1) union minister finance arun jalitey (1) union minister krishna (1) union minister nirmala sitharaman (1) union minister shankar prasad (1) union ministerof state (1) union secretary anil paijal (1) united nations survey (1) united natons security council (1) united states (1) unmarried women (1) unnikrishnan (1) upsc (1) us force (1) us intelligence (1) usa (1) uthayakumar (1) vaadivasal (1) vaali (1) vadapalani junction (1) vairamuthu (1) vajpayee (1) vapse (1) varta (1) vasan (1) vasistha jori (1) vechile parking (1) veeramani (1) veeranam (1) vegetable (1) vehicle registration (1) vellaiyan (1) vellakovil samynadhan (1) venus williams (1) vice bills (1) vice president (1) vice president ansari (1) vice president mike pence (1) victims (1) vijay rupani CM (1) vijay tv (1) vijayadarani (1) vijayakanth (1) vijaymallya (1) vikram (1) vilas paswan (1) vipin rawat (1) virendar (1) virginia (1) virus (1) vishal (1) viskhapatnam (1) vivek (1) viveks (1) viyalentrian (1) vote (1) voting board (1) vrnkaiah naidu (1) warning (1) weak (1) website (1) wind power (1) wine shop closed (1) wipro (1) wishes (1) wolrd (1) women (1) women india (1) women nt allowed (1) wonders (1) work from home (1) workers (1) world bank (1) world bank officer (1) world cinema (1) world fisherman (1) world health organization (1) world most population (1) world record (1) world war (1) world women's day (1) world world news (1) writer (1) yahoo (1) yashoda ben (1) yoga (1) youth (1) youth congress (1) yuva puraskaar saravanakumar lakshmi (1) zakir naik (1) கபாலி (1)

Blog Archive