கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து எல்லைப் பகுதியான கேரளவுக்கு உட்பட்ட இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர்கள் ஜீப் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். கொரோனா அசாதாரண சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாத இறுதியில் தொழிலாளர்கள் கேரளா இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதிலும், பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தளர்வுகளுடன்கூடிய ஆறு மாத ரெகுலர் பாஸ் வழங்கப்பட்டது. இ-பாஸ்
இதன்படி ஒரு முறை பாஸ் எடுத்தால் நாள்தோறும் காலையில் சென்று மாலையில் திரும்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் குமுளியில் கேரள வருவாய்த்துறையிடம் இ-பாஸ் பதிவு செய்து டோக்கன் மட்டும் பெற்றால் போதும். மற்ற சோதனைகள் இல்லை என்றும் தெரிவித்தனர். இருப்பினும், தமிழக எல்லையான குமுளிப் பகுதியில் நாள்தோறும் டோக்கன் பெற பொதுமக்களும், தொழிலாளர்களும் வாகனங்களுடன் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர்.
இதனால், கேரளா செல்ல அனுமதித்திருக்கும் இ-பாஸை ரத்துசெய்ய தொழிலாளர்கள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் கேரள அரசு இ-பாஸில் மேலும் தளர்வுகளை அளித்திருக்கிறது. இதன்படி குமுளி, சின்னாறு, போடிமெட்டு வழியாக கேரளாவுக்குச் செல்பவர்கள் இ-பாஸ் சரிபார்ப்பு, டோக்கன் பெறுதல் எனக் காத்திருக்க வேண்டியதில்லை. இ - பாஸ்
இ-பாஸ் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும். அதை எல்லைப் பகுதியிலுள்ள போலீஸாரிடம் காட்டிவிட்டுச் செல்லலாம் என அறிவித்திருக்கிறது. இதனால், கேரளா செல்லும் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். குமுளி வழியாக கேரளாவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று அரசு டவுன் பஸ் ஒன்று மட்டும் இயக்கப்பட்டது. ஆனால், குமுளி மலைச்சாலையில் சாலைப் பணிகள் நடைபெறுவதாகக் கூறி ஒரு ட்ரிப்போடு போக்குவரத்து நிர்வாகம் அதை ரத்துசெய்துவிட்டது.
http://dlvr.it/Rmb4SB
Saturday, 28 November 2020
Home »
» `கேரளா செல்பவர்களுக்கு சோதனை இல்லை!’ - இ-பாஸ் மேலும் தளர்வு
`கேரளா செல்பவர்களுக்கு சோதனை இல்லை!’ - இ-பாஸ் மேலும் தளர்வு
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!