கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்துவருபவர் ரமேஷ் ஜார்கிஹோலி (Ramesh Jarkiholi). 60 வயதான இவர் எடியூரப்பாவின் அமைச்சரவையில் முக்கிய நபர். கர்நாடகாவில் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணியில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கக் காரணமானவர்களில் ரமேஷ் மிகமுக்கியமானவர் என்று கூறப்படுகிறது.ரமேஷ் ஜார்கிஹோலி
ரமேஷ் ஜார்கிகோலியும் ஒரு இளம்பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும், அந்த பெண்ணிடம் பேசும் ஆடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த காணொலி தொடர்பாக, தினேஷ் கல்லஹல்லி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், ``இளம் பெண் ஒருவருக்கு மின்வாரிய துறையில் வேலை வாங்கிக்கொடுப்பதாகக் கூறி அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இப்போது அமைச்சர் சார்பில் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடப்படுகிறது." என்று கூறப்பட்டுள்ளது.
I have lodged a complaint with police, demanding a probe into a sex scandal involving Karnataka minister Ramesh Jarkiholi: Dinesh Kallahalli, the complainant, in Bengaluru pic.twitter.com/Dhe9rNXahv— ANI (@ANI) March 2, 2021
இந்த செய்தி கர்நாடக ஊடகங்களில் வெளியானதும், எதிர்க்கட்சிகள், அமைச்சர் பதவிவிலகக் கோரி போராட்டம் நடத்தின. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி, அந்த வீடியோ குறித்தும் அந்த பெண் குறித்தும் எதுவும் தெரியாது. இதுகுறித்து தலைமைக்கு விளக்கம் அளிக்கப் போகிறேன், என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, ``அமைச்சர் ரமேஷ் மீதான புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சட்டம் கண்டிப்பாகத் தனது கடமையைச் செய்யும். உண்மை நிலை என்ன என்பது தெரியாமல், ஒருவர் மீது அவதூறு பரப்பக்கூடாது. இந்த புகார் மீது எந்த ஆதாரமும் இல்லை. காவல்துறை விசாரணையில் உண்மை தெரியவரும்" என்று பேசியிருந்தார்.ராஜினாமா கடிதம்
கர்நாடக அரசியலில் இந்த வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் அமைச்சர் ரமேஷ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், ``என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. உரிய தெளிவான விசாரணை தேவை. என்மீது எந்த குற்றமும் இல்லை நான் நிரபராதி என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தார்மீக பொறுப்பேற்று என்னுடைய அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இந்த கடிதத்தை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
மூத்த அமைச்சர் ஒருவர் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருப்பது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/RttMHs
Wednesday, 3 March 2021
Home »
» கர்நாடகா: 'பாலியல் வீடியோ சர்சை' - தாமாக முன்வந்து ராஜினாமா செய்த அமைச்சர்!