மும்பையில் ஏராளமான இடங்களில் போலி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளது. மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தியது போக எஞ்சியிருக்கும் தடுப்பூசி மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை எடுத்துவந்து அதில் சிறிது தண்ணீரைக் கலந்து பொது மக்களுக்கு தடுப்பூசியாக செலுத்தி ஏமாற்றியுள்ளனர். File photo
இந்த வீணாகும் தடுப்பூசிக் கழிவுகளைக் கொடுத்து உதவியது சார்க்கோப்பில் இருக்கும் சிவம் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் சிவ்ராஜ் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிவ்ராஜ் மற்றும் அவரது மனைவி டாக்டர் நீதா ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த டாக்டர் தம்பதி கொடுத்த வீணான மற்றும் காலாவதியான மருந்துகள் மூலமே காந்திவலி ஹவுசிங் சொசைட்டியில் 390 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டாக்டர் சிவ்ராஜ் மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிவரை தனது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியிருக்கிறார். இந்த முகாமில் பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்படும் மற்றும் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை டாக்டர் சிவ்ராஜ், மகேந்திரா என்பவரிடம் கொடுத்துள்ளார். மகேந்திராவும், டாக்டர் மணீஷ் என்பவரும் சேர்ந்துதான் மும்பை முழுவதும் போலி தடுப்பூசி முகாம்களை நடத்தி மோசடி செய்துள்ளனர். மும்பை முழுக்க இவர்கள் நடத்திய போலி தடுப்பூசி முகாமில் 1.50 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வழக்கமாக முகாம்களில் பயன்படுத்திய பிறகு எஞ்சிய தடுப்பூசியை மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். ஆனால் டாக்டர் சிவ்ராஜ் மாநகராட்சியிடம் கொடுக்காமல் அதனை மகேந்திரா மற்றும் டாக்டர் மணிஷ் ஆகியோரிடம் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு டாக்டர் சிவ்ராஜ் தனது மருந்துவமனையில் நடந்த தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு முழு அளவு மருந்தையும் செலுத்தாமல் குறிப்பிட்ட அளவு மருந்தை சேமித்துள்ளனர். அந்த மருந்தைதான் டாக்டர் சிவ்ராஜ் மோசடி பேர்வழிகளுக்கு கொடுத்து உதவியுள்ளார். இதுவரை போலி தடுப்பூசி முகாம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்வாடா, பாங்குர் நகர் மற்றும் போரிவலி போலீஸார் இவ்வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பொய்வாடாவில் போலி தடுப்பூசி முகாம் நடத்தியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த போலி தடுப்பூசி முகாம்களால் மக்கள் தங்களது குடியிருப்புக்களில் தடுப்பூசிமுகாம் நடத்த அச்சம் அடைந்துள்ளனர். 7 வழக்குகள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
http://dlvr.it/S2Ry2C
Friday, 25 June 2021
Home »
» மும்பை: போலி கொரோனா தடுப்பூசி முகாம்; தடுப்பூசி மருந்தில் தண்ணீர் கலந்த டாக்டர் தம்பதி கைது!