கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வித்தியாசமான வழக்கு ஒன்றில்தான், நீதிபதி கிருஷ்ணா எஸ். தீக்சித் இப்படியான கருத்தைக் கூறியுள்ளார்.
2020-ம் ஆண்டு பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் பிறந்த ஹசினா பானுவின் குழந்தை, ஒரு மனநல மருத்துவரால் தொட்டிலில் இருந்து திருடப்பட்டது. மற்றொரு தம்பதியிடம், அது வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட தன்னுடைய குழந்தை எனக்கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்படைத்துள்ளார் அந்த மனநல மருத்துவர். போலீஸார், அந்தக் குழந்தை அனுபமா தேசாய்யிடம் வளர்வதைக் கண்டடைந்தனர்.
குழந்தையின் பெற்ற தாயான ஹசினா பானு, வளர்ப்புத் தாயான அனுபமா தேசாய்யிடம் இருக்கும் தன் குழந்தையை மீட்டு தன்னிடம் தர வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.
அவர் தன் மனுவில், கடந்த வருடம் தனக்குக் குழந்தை பிறந்தவுடன் தன்னிடம் இருந்து சிலர் குழந்தையை பறித்து வளர்ப்புத் தாயிடம் கொடுத்துள்ளனர் என்றும், கடந்த ஒரு வருடமாக வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வரும் தன் குழந்தையை மீட்டுத் தருமாறும் கூறியுள்ளார்.குழந்தை - Representational Image
Also Read: `பணியிடப் பாலியல் புகார் வழக்குகளை வெளிப்படையாக விசாரிக்கக்கூடாது!' - மும்பை உயர் நீதிமன்றம்
ஆனால் வளர்ப்புத் தாயோ, கிருஷ்ணக் கடவுளின் வாழ்க்கையை மேற்கோள் காட்டி, கிருஷ்ணனை பெற்ற தாயான தேவகி, வளர்ப்புத் தாயான யசோதாவிடம் தன் குழந்தை வளர அனுமதித்தது போல, தன்னையும் குழந்தையை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்றார். கூடவே, குழந்தையின் தாய்க்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளது, தனக்குக் குழந்தை இல்லை என்பதையும் குறிப்பிட்டு, தன்னிடமே குழந்தை இருக்க வேண்டும் என வாதிட்டார். அவரின் வாதத்தை ஏற்காத உயர் நீதிமன்றம், குழந்தையை பெற்ற தாயிடம் ஒப்படைக்கக் கூறியது.
தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணா எஸ். தீக்சித் கூறுகையில், `உங்களுடைய வாதத்தை ஏற்க முடியாது. எண்ணிக்கையின் அடிப்படையில் குழந்தையைப் பிரிக்க முடியாது. எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அந்தத் தாய்க்கு அவரின் குழந்தைகள் ஆன்மாவில் கலந்த உயிராவார்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும், `இந்த அழகான குழந்தை தாய்ப்பால் பெறாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. குழந்தையயைப் பெற்ற தாய்க்கு இதுவரை குழந்தையுடன் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. ஒரு நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற விஷயங்கள் ஒருபோதும் நடக்கக்கூடாது' என்று கூறினார், தொடர்ந்து சர்வதேச குழந்தைகள் உரிமைகள், சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்திலும் இத்தகைய விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்ப்பால் புகட்டுவது தாயின் அடிப்படை உரிமை. அதேபோல் தன் குழந்தை தாய்ப்பால் குடிப்பதும் தாயின் அடிப்படை உரிமை. இந்த இரண்டு உரிமைகளும், அரசியலமைப்பின் 21-வது பிரிவின்படி, வாழ்தலுக்கான அடிப்படை உரிமை ஆகும்' எனக் கூறியுள்ளார்.Court- Representational Image
Also Read: `இந்தியர்களின் சராசரி உயரம் குறைந்துகொண்டே வருகிறது!' - ஆய்வில் தகவல்
தொடர்ந்து, வளர்ப்புத் தாய் குழந்தையை பெற்ற தாயிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டார். மேலும் வளர்ப்புத் தாய் விரும்பும் போதெல்லாம் குழந்தையை, பெற்ற தாயின் வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் எனவும் நீதிமன்றம் கூறியது.
வளர்ப்புத் தாயை `சூழ்நிலையால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்' என்று கூறிய நீதிமன்றம், அனைத்து சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்தது.
http://dlvr.it/S8fyN4
http://dlvr.it/S8fyN4