ஹரியானாவில் பசு மாடுகளை கடத்திச் சென்ற கும்பலை, காவல் துறையினர் 22 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.குருகிராமில் மாடுகளை கடத்திச் சென்ற கும்பல், வாகனத்தில் அதிவேகமாக சென்றது. இதனை அறிந்த சிறப்பு காவல் படையினர், அந்த வாகனத்தை துரத்தி சென்றனர். அப்போது, கடத்தி சென்ற மாடுகளை ஒவ்வொன்றாக சாலையில் வீசிய கொள்ளையர்கள், காவல்துறையினரை திசை திருப்ப முயற்சித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் வாகனத்தை சுட்டனர். இருப்பினும் பஞ்சரான வாகனத்துடன் கொள்ளையர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
இறுதியாக 22 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று, மாடு கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹரியானாவில் மாடு கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.இதையும் படிக்க: மெரீனா கடற்கரையில் மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை - நண்பர்களால் நேர்ந்த கொடூரம்
http://dlvr.it/SNLMWR
Monday, 11 April 2022
Home »
» பசு மாடுகளை கடத்திச் சென்ற கும்பல் - துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த ஹரியானா போலீஸ்