உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு மிரட்டல் விடுத்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவின் பெட்ரோல் பங்க் மாவட்ட அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
திங்களன்று சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ஷாசில் இஸ்லாம் அன்சாரி முதல்வர் ஆதித்யநாத்தை மிரட்டுவது போலவும், ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவது போலவும் வீடியோ கிளிப் ஒன்று ஆன்லைனில் வெளிவந்ததை அடுத்து சர்ச்சையில் சிக்கினார். அந்த வீடியோவில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசிய அன்சாரி, “அவரது (ஆதித்யநாத்) வாயிலிருந்து குரல் வந்தால், எங்களின் (சமாஜ்வாடி கட்சி) துப்பாக்கிகள் புகையை வெளியிடாது, ஆனால் தோட்டாக்களை வெளியிடும்” என்று கூறியிருந்தார். முதலமைச்சருக்கு எதிராக ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அன்சாரி மீது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டும் நோக்கில் மிரட்டல் மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லி-ராம்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்சாரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி மாவட்ட அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ள அன்சாரி “எனது வீடியோவை எடிட் செய்து அதை வைரலாக்கினார்கள். அந்த நிகழ்ச்சியில், பலமான எதிர்கட்சியாக இருப்பதால் புகை அல்ல தோட்டாக்களை வெளியிடும் துப்பாக்கி போன்ற அனைத்து விஷயங்களுக்கும் வலுவான பதிலடி கொடுப்போம் என்றுதான் நான் கூறியிருந்தேன்," என்று அவர் கூறினார்.
योगी जी को धमकी देने वाले बरेली के भोजीपुरा से समाजवादी विधायक शहजिल इस्लाम के बिना नक्शा पास अवैध पेट्रोल पंप पर चला बुलडोजर। pic.twitter.com/lhJiXjDe6H
— Prashant Umrao (@ippatel) April 7, 2022
http://dlvr.it/SN8wqn
Thursday, 7 April 2022
Home »
» யோகி ஆதித்யநாத்க்கு மிரட்டல்: சமாஜ்வாதி எம்.எல்.ஏவின் பெட்ரோல் பங்க் இடிப்பால் சர்ச்சை