கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த அகில இந்திய மாநாட்டில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.சீத்தாராம் யெச்சூரி - முதல்வர்
அதேபோல, இதில் 85 பேர் மத்தியக்குழு உறுப்பினர்களாகவும், 17 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகவும், மத்தியக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக 3 பேரும், மத்திய கட்டுப்பாட்டு குழுவிற்கு 5 பேரும், நிரந்தர சிறப்பு அழைப்பாளர்களாக 2 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாட்டில் நேற்று சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். மதுரையில் அண்மையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.``இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்!" - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
http://dlvr.it/SNK9pk
Sunday, 10 April 2022
Home »
» மூன்றாவது முறையாக... சிபிஎம் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு!