நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பாட்டவயல், கரும்பன்மூலாப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீஸ். இவரின் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்குக் குடும்பத்துடன் காரில் சென்றிருக்கிறார். திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு அனைவரும் திரும்பி கொண்டிருந்திருக்கின்றனர்.வாகன விபத்து
கேரள மாநிலம் மீனங்காடி, காக்கவயல் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று பிரவீஸ் ஓட்டி வந்த காரில் மோதியிருக்கிறது. அதில், காரில் இருந்த பிரவீஸ் அவர் மனைவி, தாய் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட பிரவீஸின் 5 வயது மகனை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தெரிவித்த கேரள காவல்துறையினர்,"மீனங்காடி பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் நீலகிரி மாவட்டம் பாட்டவயல் பகுதியைச் சேர்ந்த பிரவீஸ், அவர் மனைவி ஸ்ரீஜா, பிரவீஸின் தாயார் பிரேமலதா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள்
காயங்களுடன் உயிர்பிழைத்த 5 வயது ஆண் குழந்தைக்கு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்னர். விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர். மலைப்பகுதியில் ரோப் கார் விபத்து; 2 பேர் பலி,10-க்கும் மேற்பட்டோர் காயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
http://dlvr.it/SNRhBJ
Tuesday, 12 April 2022
Home »
» கேரளாவில் திருமணத்துக்குச் சென்று திரும்பியபோது கார் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!