அமைச்சரவை மாற்றம்:
கடந்த 2019-ம் ஆண்டு, ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தது. ஆட்சி அமைந்த சமயத்தில், இரண்டரை ஆண்டுக் காலத்துக்குப் பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.புதிய ஆந்திரா அமைச்சரவை
தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மூன்றாவது ஆண்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிச்சந்திரனைச் சந்தித்து அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்துதான் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும், தற்போதைய அமைச்சர்களிடம் ராஜினாமா கடிதமும் பெறப்பட்டது.
போராட்டம்:
ஆந்திராவில் தற்போதுள்ள 25 அமைச்சர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 24 அமைச்சர்களிடமும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளது. காலியான அமைச்சரவையில், முன்பிருந்த அமைச்சர்கள் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடிகை ரோஜா உள்ளிட்ட 15 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அமைச்சர்களுக்கு இன்று காலை ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிச்சந்திரன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.போராட்டம்
அமைச்சரவை மாற்றப்பட்டதற்கும், தங்கள் பகுதி உறுப்பினருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காததை எதிர்த்தும் ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சியினரே போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் சாலைமறியலில் ஈடுபட்டு, வாகனங்கள், டயர் போன்றவற்றை எரித்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், பல இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SNMcJ1
Monday, 11 April 2022
Home »
» ஆந்திர அமைச்சரவை மாற்றம்: பதவியேற்ற ரோஜா... நீடிக்கும் பதற்றம்! - என்ன நடக்கிறது அங்கே?!