முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள் எனக் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.
இந்துத்துவா அமைப்புகள் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளைத் தடை செய்ய வேண்டும், ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும், பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதேபோல, முஸ்லிம் கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் அவர்களால் ஓட்டப்படும் டாக்சிகள், ஆட்டோக்களை புறக்கணிக்க வேண்டும்,கர்நாடகா
மசூதிகளிலுள்ள ஒலிபெருக்கிகளை எடுக்க வேண்டும் என முஸ்லிம்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வணிகங்களைக் குறிவைத்து இந்துத்துவா அமைப்புகளின் பிரசாரங்கள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம், தார்வாடில் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பழ வண்டிகளைச் சேதப்படுத்தியதற்காக ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடியூரப்பா, ``இந்துத்துவா அமைப்புகள் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இது போன்ற சில விஷமிகள் மீண்டும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே உறுதியளித்துள்ளார்.கர்நாடகா கல்லூரி சர்ச்சை
குறைந்த பட்சம் இனிமேல், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக்கூடாது. நாம் அனைவரும் ஓர் தாயின் பிள்ளைகள். எனவே, ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்துமாறு அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்" என்றார்.கர்நாடகா: ``வளர்ந்துவரும் மதப் பிளவை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்!" - கிரண் மஜும்தார் ஷா
http://dlvr.it/SNNjMH
Monday, 11 April 2022
Home »
» ``முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்!" - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா