மத்தியப்பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்திலுள்ள போர்பதேவ் என்ற கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல்போனார். அவரின் கணவர் தன் மனைவியைக் காணவில்லை என்று புகார் செய்திருந்தார். ஆனால், அதே கிராமத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஆண் நண்பர் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டிலிருந்து தெருவுக்கு இழுத்து வந்த அவரின் கணவர், தன் மனைவியை கடுமையாக அடித்து உதைத்தார். அவரோடு சேர்ந்து கிராம மக்கள் 12 பேர் அந்தப் பெண்ணை அடித்து உதைத்து அவமானப்படுத்தினர். சித்ரவதை
அவரின் கணவர் அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினார். வயதான பெண் ஒருவர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்தப் பெண்ணை அவரின் கணவர் தன்னிடமிருந்த பெல்ட்டால் அடித்து உதைத்தார். அவர்களைச் சுற்றி நின்ற யாரும் அந்தப் பெண்ணுக்கு உதவ முன்வரவோ அல்லது தட்டிக்கேட்கவோ இல்லை. அதிகமானோர் அந்தப் பெண்ணை அடித்து உதைப்பதில்தான் தீவிரமாக இருந்தனர். இந்தச் சம்பவத்தின் போது அந்தப் பெண்ணின் இரண்டு மகள்களும் ஒரு மகனும் அங்குதான் இருந்தார்கள்.
அதோடு விடாமல் அந்தப் பெண்ணை அரை நிர்வாணமாக்கி அவரின் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தனர். மேலும் அவரின் கணவரை அந்தப் பெண்ணின் தோளில் தூக்கிவைத்து கிராமம் முழுக்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதை கிராம மக்கள் அனைவரும் தெருவில் நின்றுகொண்டு வீடியோ எடுத்ததோடு கிண்டல் செய்தனர். இதில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது. கோயம்பேடு: ஆசையாக அழைத்தப் பெண் - சமையல் கலைஞருக்கு 4 பெண்களால் நேர்ந்த கொடூரம்!
கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். உடனே போலீஸார் விரைந்து வந்து அந்தப் பெண்ணை மீட்டு பத்திரமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் கொடிய காரியத்தில் ஈடுபட்ட அந்தப் பெண்ணின் கணவர் உட்பட 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டதற்கு, தனக்கு 15 வயதில் திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாகவும் அதனால்தான் வீட்டைவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/STVP7q
Thursday, 7 July 2022
Home »
» ம.பி: வீட்டில் கொடுமை; ஆண் நண்பருடன் சென்ற பெண்; அரை நிர்வாணமாக்கி கணவனைச் சுமக்கவைத்த கிராமத்தினர்
ம.பி: வீட்டில் கொடுமை; ஆண் நண்பருடன் சென்ற பெண்; அரை நிர்வாணமாக்கி கணவனைச் சுமக்கவைத்த கிராமத்தினர்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!