No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Saturday, 4 March 2023

`அதிமுக பாஜக-போல் பிரிந்து வாழக் கூடாது; திமுக கூட்டணிபோல் சேர்ந்து வாழணும்’ - உதயநிதியின் வாழ்த்து

திருமண நிகழ்ச்சிகள், சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கிவைத்தல், பள்ளிகளில் ஆய்வு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம், கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, நாமக்கல் நகரிலுள்ள கவிஞர் ராமலிங்கம் அரசுப் பெண்கள் கல்லூரியில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலையைத் திறந்துவைத்தல், மோகனூர் சர்க்கரை ஆலையைப் பார்வையிடல் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, அமைச்சர் உதயநிதி நாமக்கலுக்கு வருகை தந்தார். காலையில் வெட்டுக்காட்டுப் பகுதியில் நடைபெற்ற, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுச்சாமியின் பேரன் நவஜீவன், வித்யா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். திருமண நிகழ்வில் உதயநிதி அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, தி.மு.க கூட்டணியைப்போல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணிபோல் பிரிந்து வாழக் கூடாது. அப்படி வாழ்ந்தால், ரோட்டில் போவோர்கூட கருத்து சொல்வார்கள்" என்று பேசினார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொண்டவர், மாலையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் திருவுருவச் சிலையை திறந்துவைத்தார். அதன் பிறகு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``தனியார் இடத்திலாவது இந்தச் சிலையை நாங்கள் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள். நம்முடைய தலைவர் முதலமைச்சர் அவர்கள்தான், நாமக்கல் கவிஞருடைய சிலை தனியார் இடத்தில் அமையக் கூடாது, அது பொதுவான இடத்தில், அதுவும் ஒரு கல்லூரியில் மாணவ, மாணவிகள் பயிலும் இடத்தில் அமைய வேண்டும் என்று சொல்லி, இங்கே சிலை அமைய வழிவகை செய்தார். கவிஞருடையது, எளிமையான குடும்பப் பின்னணி. ஆனால், தன்னுடைய வலிமையான தமிழ்ப் புலமையால் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர். மட்டுமல்லாமல் விடுதலைக்காக முழுமையாக தமிழ் மொழியைப் பயன்படுத்தியவர். அதேபோல், நம்முடைய கவிஞர் அவர்கள் சிறந்த பேச்சாளரும்கூட. அவருடைய மேடைப்பேச்சுகள் சாதாரண மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வை ஏற்படுத்தின. நாமக்கல் கவிஞர் சிலையைத் திறக்கும் உதயநிதி நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்து சுதந்திரத்துக்காகப் போராடினார். 10 வருட காலம் முழுவதும் காங்கிரஸுக்காகப் பாடுபட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மகாத்மா காந்தி தலைமையில் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ராஜாஜி அவர்களுடன் கலந்துகொண்டவர்தான் நம்முடைய நாமக்கல் கவிஞர். அப்போதுதான், `கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்ற தேசபக்திப் பாடலை இயற்றினார். அந்தப் பாடல் ஏற்படுத்திய விடுதலைப் போராட்ட உணர்வு என்பது மிக அதிகம். பின்னர் ஒருநாள் நாமக்கல் கவிஞர் காந்தியைச் சந்தித்தபோது, அந்தப் பாடலை இயற்றித் தந்ததற்காக அவரைப் பாராட்டினார் காந்தி. அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த நம்முடைய நாமக்கல் கவிஞரின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியது நம்முடைய கடமை. இப்போது இருக்கிற நம்முடைய சமூகம் அனைத்தையும், அனைவரையும் மறந்துவிடக்கூடிய சமூகம். நம்முடைய முதலமைச்சர், கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளித்து பல முன்னோடித் திட்டங்களை தீட்டிவருகிறார் என்பது உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு வரவழைக்க முதலமைச்சர் காலை சிற்றுண்டித் திட்டம் கொண்டுவந்தார். விழாவில் உதயநிதி அவர்கள் காலையில் ஸ்கூலுக்கு வர வேண்டுமென்றால், பசியோடு வரக் கூடாது, மாணவர்கள் வந்து படிக்கணும், மாணவ, மாணவிகளின் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற ஒரே நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட திட்டத்தில், தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுவருகிறார்கள். அதேபோல், இலவச பேருந்துப் பயணம் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த 20 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 250 கோடிப் பயணங்களை மகளிர் இலவசமாக, கட்டணமில்லாமல் மேற்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் முன்னேற, இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. அதுவும் பத்தோடு பதினொன்றோடு நிற்காமல் நாம் என்னவாக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆழ்மனதில் ஓர் எண்ணம் இருக்கும். முதலில் அது என்ன என்று நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்குங்கள். உழைக்கத் தொடங்குங்கள். உங்களால் முடியாது என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. அப்படி, உங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும், உங்களுடைய வளர்ச்சியிலும் ஓர் அண்ணனாகக் கூட இருந்து நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கான உத்தரவாதத்தைத் தரவே உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்தச் சிலையைத் திறக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் பொன்முடி அவர்களுக்கும், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் அவர்களுக்கும், நாமக்கல் கவிஞருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.விழாவில் உதயநிதி இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இதில் கலந்துகொண்டவர்களுக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து விடைபெறுகிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான், உங்களுடைய அன்பு சகோதரராகத்தான் நான் எப்போதுமே இருப்பேன். சிலை திறப்பதற்காக மட்டும் என்னை இங்கே கூப்பிடவில்லை. பல்வேறு கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார்கள். அவற்றையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.
http://dlvr.it/SkLWcV
Share:

Related Posts:


Daily Tamil News. Powered by Blogger.
496518

Contributors

Search This Blog