ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறது காவனூர் கிராமம். இது, சுற்றியுள்ள குக்கிரமங்களுக்கு ஊராட்சி நிர்வாக இடமாகவும் செயல்பட்டுவருகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்பது. இங்கிருக்கும் மக்கள் மருத்துவத் தேவைகளுக்காக விளாப்பாக்கம், திமிரி, ஆற்காடு போன்ற இடங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்வார்கள்.
இந்தக் கிராமத்தில் இரவு நேரங்களில் பேருந்து வசதியில்லாததால், சிகிச்சைக்காகச் செல்பவர்கள் சிரமப்பட்டுவந்தனர். இந்த நிலையில் இவர்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை ஏற்று, காவனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் வாங்கப்பட்டு, பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ``ராணிப்பேட்டை மாவட்டத்துக்காக ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை எந்தத் தொகுதிக்கு வழங்குவது என்பது குறித்த மாவட்டக் கூட்டத்தில் பல்வேறு இடங்களுக்கான கோரிக்கைகள் வந்தன, எனது தொகுதி உட்பட. இருப்பினும், இந்த முறை ஆற்காடு தொகுதிக்குட்பட்ட காவனூர் ஊராட்சிக்குத்தான் தேவை அதிகம் இருப்பதால், இது அவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது.
மருத்துவமனை கட்ட போதிய இடம் இல்லாததால், 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி திரட்டப்பட்டு,ஒரு ஏக்கர் பரப்பளவு இடம் வாங்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமையவிருக்கிறது. இதில் காவனூர் ஊராட்சி மட்டுமல்லாமல், சுற்றியிருக்கும் நான்கு ஊராட்சிகளைச் சேர்ந்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் பயனடைவார்கள்” எனத் தெரிவித்தார். பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கையை ஏற்று, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Swp6mT