Wednesday, 22 November 2023
Tuesday, 21 November 2023
`மர்மமாக கூட்டம் நடத்துகிறார்’... கே.எஸ்.அழகிரியுடன் மோதும் ஈவிகேஎஸ் - அரசியல் பின்னணி என்ன?!
சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இதற்கு தலைமை வகித்தார். 50-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், 'வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கும் பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் நியமிக்க வேண்டும். அவர்களுக்கான பயிற்சிக்கூட்டங்களை வரும் ஜனவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். INDIA கூட்டணியை மேலும் வலிமையாக்கி, செழுமையாக்குவது ஒவ்வொரு மாவட்ட தலைவர்களின் கடமை. நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் காலேல்கர், சமூகநீதிக்கான அரசியலமைப்பு சட்ட முதல் திருத்தத்துக்கான அறிக்கையை பிரதமர் நேருவிடம் கொடுத்தபோது, இதில் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று கூறி, அந்த அறிக்கையை குப்பை கூடையில் தூக்கி எறியுங்கள் என்று நேரு கூறியதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற, உள்நோக்கம் கொண்ட அவரது கருத்துக்கு வன்மையான கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல், விவசாயிகள் விரோதப் போக்கு, பிரதமரின் அதிகார குவியல், கூட்டாட்சிக்கு குந்தகம் விளைவிப்பது, அதானி, அம்பானி உள்ளிட்ட சில தொழிலதிபர்களின் சொத்துக் குவிப்புக்கு துணைபோவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை குவிப்பது உள்ளிட்டவை குறித்து ஆதாரத்துடன் பட்டியலிட்டு, குற்றப்பத்திரிகை தயாரித்து டிசம்பரில் வெளியிடப்படும். இதைக் கொண்டு கிராமந்தோறும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள் பலர், 'தி.மு.க கூட்டணியில் 15 சீட்டுக்களை பெற வேண்டும்' என வலியுறுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், '"தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்” என முன்னாள் மாநில தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கொதித்திருக்கிறார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய, “காவிரி பிரச்னையை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் விருப்பம் போல், ஏதேதோ செய்கிறார். கடந்த 4 நாட்களில் அவரிடம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒரு கூட்டம் நடக்கிறது என்றால், மூத்த தலைவர், முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்.ஈவிகேஎஸ்
அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை, முன்னாள் தலைவர், மூத்த தலைவர் என்று அழைத்து வந்த நிலையில், தற்போது முடிந்துபோன தலைவர் என்று அழைக்கிறார்கள் போல. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்தவர்கள் மீது தான் திருவண்ணாமலையில் குண்டர் தடுப்பு காவல் சட்டம் போடப்பட்டுள்ளது. அதில் சில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் தெரிந்ததும், முதல்வர் அவற்றை நீக்கியுள்ளார். ஐந்து மாநில தேர்தலில், பஞ்ச பாண்டவர்கள் போல் நாங்கள் வெற்றி பெறுவோம்” என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன், "கடந்த சட்டமன்ற தேர்தல் நடந்த பொழுது 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளை தி.மு.க-விடம் கேட்டு பெறுவதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முனைப்பு காட்டி வந்தது. அந்த நேரத்தில் திடீரென ப.சிதம்பரம் ஊடகத்தில் தோன்றி, 'குறைவான தொகுதிகள் பெற்று நிறைவான வெற்றியை பெறுவோம்' என கூறினார். ஆகையால் கூடுதலாக கிடைக்க வேண்டிய தொகுதிகள் தமிழக காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. 25 இடங்கள் தான் காங்கிரஸுக்கு கிடைத்தது. இதற்கிடையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளை பெறவேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், 'தமிழக காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகிறார். காங்கிரஸ் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருப்பதே நம்மவர்கள் என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது" என்றார். ஜி.கே.முரளிதரன்
இதுகுறித்து நம்மிடம் பேசிய அழகிரியின் ஆதரவாளர்கள், "தலைவர் முறைப்படி அனைவரையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பது வழக்கம். ஆனால் அவர்கள் தான் வருவதில்லை. சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனுக்கு உதயநிதி வந்தபொழுது அனைவரும் வந்துவிட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் மகன்களுக்கு சீட் பெறுவதற்கும் யாரும் அழைக்கமாலே முன்னாள் தலைவர்கள் வருவார்கள். கட்சி மீது அக்கறை இருந்திருந்தால் அவரே வந்திருக்கலாம். இது தேவையற்ற சர்ச்சை" என்றனர்.
"அழகிரியை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸில் சில இடங்களில் நீண்ட காலமாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. அங்கெல்லாம் புதிய தலைவர்களை அழகிரியால் நியமிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு தெரியாமலேயே புதிய மாவட்ட தலைவர்களை டெல்லியில் பேசி நியமித்துவிடுகிறார்கள். எனவே அழகிரி இதுபோல் கூட்டம் நடத்துவதெல்லாம் நானும் ரெளடி தான் என்ற தொனியிலேயே இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அகில இந்திய தலைமை புதிய தலைவரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் அழகிரியாவது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள் சிலர் கொதித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தண்டவாளத்தை நோக்கி இழுத்த தொண்டர்கள்... ‘ஜென்’ மோடுக்குப்போன கே.எஸ்.அழகிரி...
http://dlvr.it/Sz6rWv

MK Stalin: `உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை!' - பட்டமளிப்பு விழாவில் பாடிய முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், மாநில முதலமைச்சருமான ஸ்டாலின் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, பல்கலைக்கழகத் துணைவேந்தர் சௌமியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் விழாவில் பங்கேற்றனர்.முதல்வர் ஸ்டாலின்
பல்கலைக்கழகம் சார்பில் பாடகி பி.சுசீலா, இசைக்கலைஞர் முனைவர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``என்னுடைய தாத்தா முத்துவேலர் பாட்டு எழுதுவதிலும், பாடல் பாடுவதிலும் வல்லவர். அதேபோல் என்னுடைய தந்தை கலைஞர், எல்லா இசை நுணுக்கங்களையும் அறிந்தவர். நிறைய பாடல்களை, கவிதைகளை எழுதியிருக்கிறார்.
இசையைக் கேட்டதும் அதில் சரி - தவறுகளை விளக்கமாகக் கூறுவார். `விண்ணோடும் முகிலோடும் விளையாடும்' பாடலைப் பாடியவர், என்னுடைய மாமா சி.எஸ் ஜெயராமன். அந்த வகையில் இசைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் என்ற பெருமை, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துகுத்தான் உண்டு. ஜெயலலிதா
இது முழுக்க மாநில அரசின் நிதியில் செயல்படும் பல்கலைக்கழகம். மாநில அரசின் முதல்வரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகமும் இதுதான். நான் அரசியல் பேசவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளரும். மற்றவர்களின் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதையும். அதனால்தான், 2013-ம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழக வேந்தராக, முதல்வரே இருக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவுசெய்திருக்கிறார்.
இன்றைக்கு இருக்கும் நிலையை உணர்ந்து, அம்மையார் ஜெயலலிதாவை மனமாரப் பாராட்டுகிறேன். இரு இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தால் பட்டமும் பெருமையடைகிறது. பி.சுசீலாவின் பாடலை நான் எப்போதும் விரும்பிக் கேட்பேன். நான் பயணிக்கும்போது அவருடைய, `நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை… உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை… காயும் நிலா வானில் வந்தால், கண் உறங்கவில்லை…' (கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி இயக்கி, 1962-ம் ஆண்டு வெளியான `தெய்வத்தின் தெய்வம்' என்ற திரைப்படத்தில் பி.சுசீலா பாடிய பாடல்) என்ற பாடலை அடிக்கடி கேட்பேன்.பி.சுசீலா
இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் முதல்வர் ஸ்டாலின்..! pic.twitter.com/s6b1opaWap— @JuniorVikatan (@JuniorVikatan) November 21, 2023
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே பல்கலைக்கழங்களின் வேந்தராகச் செயல்பட்டால்தான், மாணவர்களுக்கான தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும். அதனால்தான் இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரித்துவருகிறது. நல்ல சேதி வரும். ஒத்திசைவு பட்டியலிலுள்ள கல்வி, மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும்.
அப்போதுதான் எல்லோருக்கும் கல்வி, உயர்கல்வி என்ற இலக்கை அடைய முடியும். இதை எல்லா மாநிலங்களுக்குமானதாகவே சொல்கிறேன். நமது உண்மையான சொத்து, கல்விதான். அதை எல்லோருக்கும் வழங்குவதுதான் திராவிட மாடல். இந்தப் பல்கலைக்கழகம் மூலம் பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறார்கள். அந்த வகையில், இது சமூக நீதிக்கான பல்கலைக்கழகம். மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய `நீராரும் கடலுடுத்த' பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பாட, 1970-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தவர் கலைஞர். முதல்வர் ஸ்டாலின்
கலை, இலக்கியம் என்பது பழைய பெருமை அல்ல... எதிர்காலத் தேவை. தமிழ் இசைக்கும், தமிழ்ப் பாடலுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பழந்தமிழ் இசை நூல்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஊக்கம் தர வேண்டும். ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியம் 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஆராய்ச்சி நூலகம் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.மணிப்பூர்: ``2 நாள்களில் 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத போதைப் பயிர்கள் அழிப்பு''- முதல்வர் பிரேன் சிங்
http://dlvr.it/Sz6rBj

கனிமொழி: `10 வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்கள கேட்டிருக்கணும்’ - மீனவர் தினவிழாவில் வாக்குவாதம்
கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவர் கிராமத்தில் உலக மீனவர்தினவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தி.மு.க மகளிரணி மாநில தலைவி ஹெலன் டேவிட்சன், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கனிமொழி எம்.பி பேசுகையில், "மீனவர்களின் துயரங்களை ஏற்றுக்கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு உரிய மரியாதை தராமால், பாகுபாடு காட்டி ஒதுக்கிவைக்கும் சூழலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலகம் சந்திக்கும் சவால்களில் ஒன்று சூழலியல் மாற்றம். சூழலியல் மாற்றத்தால் பனிபிரதேசத்தில் பனி உருகி கடல்மட்டம் உயரும் நிலை உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு, கடல் தாய் போன்றது. அதில் எது என்னுடைய தாய் என்பது இல்லை. தாய் எல்லோருக்கும் சொந்தம். தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களிடமிருந்து படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கிறது.உலக மீனவர்தினவிழாவில் பேசிய கனிமொழி
நம் மூதாதையர்கள் கடல் எனக்குச் சொந்தம் என கடல் கடந்து வாணிபம் செய்தார்கள். தமிழர்கள் கடல்கடந்து சென்று கடல் எல்லையற்றது என்று கடலில் மீன் பிடித்தார்கள். ஆனால், இப்போது கடலில் எல்லைகள் வகுக்கப்பட்டு, பிரிவினை ஏற்படுத்தியதால் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களுக்கும் மத்தியில் இருக்கும் அரசாங்கம் எந்தவித பதிலையும் சொல்ல தயாராக இல்லை. தீர்வு காணவும் அவர்கள் தயாராக இல்லை. கடலரிப்பு பிரச்னை, மீனவர்கள் பாதிக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. ஆனால் அரசியல் செய்வதிலும், மக்களை பிரித்தாளுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மக்களுக்கு இடையே சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரச்னைகளை உருவாக்குவது, அவர்களிடம் காழ்ப்புணர்ச்சி உருவாகி, ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்ளக்கூடிய சூழலை எல்லா இடங்களிலும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஓரிடத்தில் மதக்கலவரமோ, சாதி கலவரமோ, இனக்கலவரமோ வரும்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது அங்கே இருக்கக்கூடிய பெண்களும் குழந்தைகளும்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிரித்தாளுபவர்களின் வலையில் விழுந்தால், எதிர்காலமே இருண்டுபோகும் நிலை ஏற்படும். இந்த செய்தியை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்த மதமாச்சரியங்களும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இந்த விழாவை கொண்டாடுகிறோம். இது தொடர வேண்டும்.
நாம் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றுப்பட்டு வாழும் சூழ்நிலை தொடர வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு கலைஞர் முதல்வராக இருக்கும்போத கடிதம் எழுதியிருக்கிறார். நானும் நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சொல்லியிருக்கிறீர்கள்.விழாவில் கலந்துகொண்ட பெண்கள்
சட்டசபையில் நிறைவேற்றக்கூடிய சட்டங்களை கவர்னர் வைத்துக்கொண்டே இருக்கும் உரிமை அவருக்கு கிடையாது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதற்கு முன்னால் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருந்தால் அதையும் வைத்துக்கொண்டிருப்பார். இனிமேல் வைத்துக்கொண்டு தூங்க முடியாது. அதை கையெழுத்துப்போட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அதனால், உங்கள் கோரிக்கைகளை நிச்சயமாக முதல்வர் நிறைவேற்றி தருவார்கள். ஏனென்றால் மீனவர்களுக்கு என தனியாக மாநாடு நடத்தியவர் நமது முதலமைச்சர்தான். அந்த மாநாட்டில் நீண்டகாலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்ததும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான்.
கடந்த ஆட்சியில் 10 வருஷமாக மீனவர்கள் வீடு கட்டினால் பட்டா வழங்கப்படவில்லை. ஸ்டாலின் ஆட்சிபொறுப்புக்கு வந்த பிறகு, நீங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இப்போது தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. மீனவமக்களுடைய உரிமையான இடத்துக்கு அவர்கள் உரிமைக்கொண்டாடக்கூடிய வகையில் பட்டாக்கள் வழங்கப்படுகிறது" இவ்வாறு கனிமொழி பேசியதும் கூட்டத்தில் இருந்த சில பெண்கள் "கோடிமுனையைச் சேர்ந்த எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை" என சத்தம் போட்டனர். "உங்களுக்கு வரலியா, ஒரு மனு கொடுங்க நான் நிச்சயமா பட்டாவாங்கி தருவதற்கு ஏற்பாடு செய்கிறோன்" என்றார். தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி
அதற்கு அந்த பெண்கள், "15 வருஷமாக பட்டா வழங்கவில்லை" என்றதற்கு "அதை பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்களை நீங்க கேட்டிருக்கணும்" என்றார். ஆனாலும் மீனவ பெண்கள் விடாமல் பட்டா வழங்கவேண்டும் என வாக்குவாதத்தை தொடர்ந்தனர். பின்னர் அவர்களை சிலர் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து பேசிய கனிமொழி, "நாங்க 15 வருஷமா ஆட்சிபொறுப்பில் இல்லை. ஆட்சிபொறுப்பில் இருந்தர்களிடம் கேக்விகேட்டிருக்க வேண்டும். நீங்கள் கேட்கல. இப்போது நாங்கள் வந்திருக்கிறோம். அதை முதல்வரிடம் கொடுக்கிறேன். அவர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவார். இங்கு, மீன்பிடி இறங்குதளம் வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பல கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற ஆணை பிறப்பித்திருக்கிறார். நிச்சயம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, மேடையில் இருக்கும் நண்பர்களின் உதவியோடு பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்ப்பதை நிச்சயமாக செய்யமுடியும்" என சுருக்கமாக பேசி முடித்தார். பின்னர் பெண்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Sz6NrZ

``தமிழகத்தில் ஒவ்வொரு கோயில்களிலும், சொத்துகளைத் திருடி வருகிறார்கள்!" - நிர்மலா சீதாராமன்
உலக மரபு வார விழாவை முன்னிட்டு, மதுரை தியாகராசர் கல்லூரியில் 5 நாள்கள் குடைவரைக் கோயில் கண்காட்சி நடைபெறுகிறது.உலக மரபு வார விழாவில்
இந்தக் கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ``தமிழகத்திலுள்ள பாரம்பர்யத்தை மக்களுக்குச் சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது.
தமிழக பாரம்பர்யத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும்போது, `அரசியல் நுழைகிறது, பாரம்பரியம் இது அல்ல... அது' எனப் பல சர்ச்சைகள் வருகின்றன. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம்.நிர்மலா சீதாராமன்
தமிழகத்தின் பாரம்பர்யத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்திருக்கின்றனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பர்ய இடங்களில் வெள்ளையடித்து விடுகிறார்கள், வெள்ளையடிக்கபட்டதற்குப் பின்னால் உள்ள சரித்திரம், யாருக்கும் தெரிவதில்லை.
தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது, மனதுக்கு வேதனையாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரைக் கோயில்களுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. குடைவரைக் கோயில்களிலுள்ள எழுத்துகளுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளது.
நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பர்யம்தான். அதை நாம் பாதுகாக்க வேண்டும், மாணவர்கள் டாக்டர், இன்ஜினீயர்கள் என எது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும்,மாணவர்களுடன் நிர்மலா சீதாராமன்
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளைத் திருடி வருகிறார்கள், கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத் தெரியவில்லை" என்றார்.மிஸ்டர் கழுகு: குழம்பி நிற்கும் டெல்லி... அதிருப்தி நிர்மலா சீதாராமன்... எஸ்கேப் அண்ணாமலை!
http://dlvr.it/Sz5qp2

Aavin `நிறுத்தப்படும் பச்சை நிற பால் பாக்கெட்; கொழுப்புச்சத்து அளவில் மோசடி'- அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித கொழுப்புச்சத்துடன் லிட்டர் 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை, மக்கள் பெரிதும் வாங்குவதாகக் கூறப்படுகிறது.ஆவின் பால் பாக்கெட் கவர்கள்!
அதாவது, சென்னையில் விற்பனையாகும் மொத்த பால் பாக்கெட்டுகளில் பச்சை நிற பால் பாக்கெட் மட்டும் 40 சதவிகிதம். இப்படியிருக்க, பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நவம்பர் 25-ம் தேதியுடன் நிறுத்துவதாகவும், அதற்கு பதில் அதே விலையில் 3.5 கொழுப்புச்சத்துடைய டிலைட் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும் எனவும், அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு, எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அண்ணாமலை
மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40 சதவிகிதப் பங்குள்ள, 4.5 சதவிகித கொழுப்புச்சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச்சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பாலை விற்பனைசெய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஏற்கெனவே 6 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கவேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79 சதவிகித கொழுப்புச்சத்தே இருப்பது, உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக்கூடத்தில், தமிழ்நாடு பா.ஜ.க மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5%… pic.twitter.com/6fLzNIISCk— K.Annamalai (@annamalai_k) November 20, 2023 பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
இவ்வாறு கொழுப்புச்சத்துகளைக் குறைத்து, ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்றே விளையாடிக்கொண்டிருக்கிறது இந்த ஊழல் தி.மு.க அரசு. மேலும், பாலில் கொழுப்புச்சத்தைக் குறைத்துவிட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்துவருவதை தி.மு.க அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பாலை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.‘பாழாகும் பால் வளத்துறை!’ - திக்கித் திணறும் மனோ தங்கராஜ்
http://dlvr.it/Sz5qdH

Monday, 20 November 2023
``எடப்பாடி அணி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது..!” - சொல்கிறார் பெங்களூரு புகழேந்தி
“எடப்பாடி கூட்டணியை முறித்துக்கொண்டதால், பா.ஜ.க-வுடன் நீங்கள் கூட்டணிவைக்க வாய்ப்பிருக்கிறதா?”
“எடப்பாடிக்கு இது புதிய பழக்கமா... அம்மா மறைந்தவுடன் சசிகலாவை ஏமாற்றினார். பல மாநிலங்களில் அரசியல் சூழ்ச்சி செய்தது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் அந்த பா.ஜ.க-வையே முதுகில் குத்திய ஒரே ஆள் எடப்பாடிதான். இன்று ஆட்களை ஏவி, பா.ஜ.க-வையே பேசவைக்கிறார். அதைக் கேட்கக்கூட பா.ஜ.க-வில் யாரும் இல்லை. அண்ணா, பெரியார் மீது பாய்கிற அண்ணாமலை, அ.தி.மு.க பக்கம் ஏன் திரும்புவதில்லை?”அமித் ஷாவைச் சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி
“எடப்பாடி தரப்பு பா.ஜ.க-வைத் துணிச்சலாக எதிர்க்கிறதே... நீங்கள்தான் தயங்குகிறீர்கள்போல?!”
“அப்படியா! எடப்பாடியை மோடியை எதிர்த்து பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். சி.வி.சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்கள்தான் எதிர்க்கிறார்கள். தங்கமணி, வேலுமணி போன்றோர் பா.ஜ.க கூட்டணி வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். அதனால் எடப்பாடி அணி இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. அதுதான் உண்மை.”
“ஆனால், அந்த எதிர்ப்பைக்கூட உங்கள் தரப்பிடம் பார்க்க முடியவில்லையே?”
“ஓ.பி.எஸ்-ஸைப் பொறுத்தவரையில் யாரையும் தவறாகவோ, கண்ணியக்குறைவாகவோ பேச மாட்டார். அதனால் உங்களுக்கு அப்படித் தெரியலாம். யாராக இருந்தாலும் மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் என்று நானே ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாளை ஓ.பி.எஸ் இணைந்தால்கூட, தமிழ்நாட்டில் நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. எந்தவிதத்திலும் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால் எங்கள் தலைமையை ஏற்கிற கட்சிகள் அவர்களாக வரட்டும்.”எடப்பாடி பழனிசாமி
"அ.தி.மு.க கட்சியையும் தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி கொண்டுவந்துவிட்டார் என்பது உண்மைதானே?”
“எடப்பாடியோ, அவரின் அணியினரோ அப்படிச் சொன்னால் அது சுத்தமான பொய். சசிகலா, ஓ.பி.எஸ்., பா.ஜ.க-வுக்கு துரோகம் செய்து ஏமாற்றியிருக்கிறார் எடப்பாடி. பொன்னையன் கூறியதுபோல பலர் எடப்பாடியைச் சுற்றியிருக்க, பலரும் தங்களுக்குக்கீழ் 10, 15 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு கொள்ளையடித்திருக்கிறார்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரோடுதான் இருப்பார்கள். அது நிலையாக நீடிக்காது. எம்ஜிஆர் உருவாக்கிய பைலாவை நாசம் செய்துவிட்டார்கள். பெரியார், அண்ணா படங்களைக்கூட மறந்துவிட்டார்கள். அதிமுக-வைச் சிதைத்து சின்னா பின்னமாக்கிவிட்டார் எடப்பாடி. யாரோடு பேரம் பேசி இப்படி நடந்துகொள்கிறார் எனத் தெரியவில்லை. கோடிக்கணக்கான தொண்டர்கள் அவருக்குப் பின்னால் இருப்பது உண்மைதான் என்றால், ஒரு தேர்தலில்கூட வெல்ல முடியாதது ஏன்?”
“சரி முன்பைப்போல பா.ஜ.க தலையிட்டு சமரசம் செய்துவைத்தால் ஏற்க தயாரா?”
“இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. பழனிசாமியை இனி நாங்கள் ஏற்க தயாராக இல்லை. சட்டப்படி தி.மு.க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பார். சிறையிலிருந்து யாராலும் கட்சி நடத்த முடியாது. ஏற்கெனவே நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார் இருக்கிறது. எனவே, அவர் தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழல் ஏற்படும். பணத்துக்காக எடப்பாடியின் பின்னால் இப்போது இருப்பவர்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.”ஓபிஎஸ்
“ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறதே?”
`` `ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?’ என்று அண்ணா அப்போதே கேட்டுவிட்டார். அண்ணாவின் வழிவந்த எங்களுக்கும் அதுதான் நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வேறு வேலையே இல்லாததுபோல ஆளுநர் பிரச்னையைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா... அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி கேட்டால் அதற்குக்கூட இழுத்தடித்திருக்கிறார். ஊழலை விசாரிக்கக் கூடாது என்கிறாரா ஆளுநர் எனத் தெரியவில்லை.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Sz4KRs

Trisha: ``மன்சூர் அலிகான் மீது IPC 509 B-ன்கீழ் நடவடிக்கை எடுங்கள்!" - தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் `லியோ’ படத்தில் நடித்தவர்களில் ஒருவரான மன்சூர் அலிகான், செய்தியாளர்கள் சந்திப்பில், `லியோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதாவது, ``நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. (பாலியல்) சீன்களெல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை" என்று மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.மன்சூர் அலிகான்
இதற்குக் கண்டனம் தெரிவித்த நடிகை த்ரிஷா, ``மன்சூர் அலிகான் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரின் பேச்சில் அவமரியாதை, பெண் வெறுப்பு, ஆபாசம் இருப்பதாக நான் உணர்கிறேன். இவரைப் போன்ற சிலரால் மனிதகுலத்துக்கே இழிவு ஏற்படுகிறது" என்று ட்வீட் செய்திருந்தார்.த்ரிஷா |Trisha
த்ரிஷாவைத் தொடர்ந்து, `லியோ’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பாடகி சின்மயி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் மன்சூர் அலிகானுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், ``த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்" என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் வந்துகொண்டிருந்தன. இப்படியிருக்க, இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்திருக்கும் தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக டி.ஜி.பி-க்குப் பரிந்துரை செய்திருக்கிறது.
The National Commission for Women is deeply concerned about the derogatory remarks made by actor Mansoor Ali Khan towards actress Trisha Krishna. We're taking suo motu in this matter directing the DGP to invoke IPC Section 509 B and other relevant laws.Such remarks normalize…— NCW (@NCWIndia) November 20, 2023
இது குறித்து, தேசிய மகளிர் ஆணையம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``நடிகை த்ரிஷாவைப் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாகப் பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், மன்சூர் அலிகான் மீது ஐ.பி.சி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டி.ஜி.பி-க்கு உத்தரவிடுகிறோம். இது போன்ற கருத்துகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகின்றன. அவை கண்டிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறது.Trisha: `எத்தனையோ பிரச்னை இருக்கு, பொழப்ப பாருங்கப்பா' - சர்ச்சை பேச்சு குறித்து மன்சூர் அலிகான்
http://dlvr.it/Sz4KB7

Vikatan Monsoon Sale !!!
விகடன் நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிக்கும்போது, நிச்சயம் அதில் மூழ்கிப் போகாமல் வாசகரால் இருக்க முடியாது அப்படி வாசிப்பின் எதிர்ப்பார்ப்பை கூட்டி பரவசம் அடைய செய்யும் விகடனின் 7 இதழ்களும் உங்கள் வாழ்வியலை மேம்படுத்தி உங்களின் நம்பிக்கைக்குரிய உற்ற தோழனாக உங்கள் ஞானத் தேடலில் விறுவிறுப்பு தீராமல் தகவல்களை அள்ளித்தருகின்றன.
விகடனின் டிஜிட்டல் சந்தாவில் கிடைக்கும் 7 இதழ்கள்
குடும்பங்கள் கொண்டாடும் தமிழகத்தின் நம்பர் 1 வார இதழ். சமூகம், அரசியல், சினிமா, கலை, இலக்கியம், நையாண்டி என அனைத்து துறைகளிலும் எப்போதும் தனித்துவமாகவும், காலத்துக்கு ஏற்ப மக்களை மகிழ்வித்தும், மிகச்சிறந்த முழுமையான இதழியல் வாசிப்பு அனுபவத்தைத் தரும் உங்கள் ஆனந்த விகடன்.
பாமர மக்களுக்கும் புரியும் அரசியல் செய்திகள், கழுகார் Exclusive செய்திகள், உட்கட்சிப் பூசல், திரைக்குப் பின் நடக்கும் டீலிங்குகள் என தமிழக அரசியலின் ஆழமான செய்திகள், சமயம், சமூகம், அரசியல் சார்ந்த பல கருத்துகளைக் குரலற்றவர்களின் குரலாக நேர்பட பேசும் உங்கள் ஜூனியர் விகடன்.
உழவனும் ஆவான் அரசன்!!! செய்யும் தொழிலே தெய்வம்.. தெய்வமே ஒரு தொழில் செய்தால் அது 'விவசாயம்'. தமிழகத்தில் இன்று பல விவசாய முன்னெடுப்புகளுக்கு முன்னோடியாய் இருப்பதுடன் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைக்க விரிவாய் வழிகாட்டும் பசுமை விகடன்.
எந்த காப்பீடு எப்போது உதவும்? உங்களுக்கு பயன் தரும் காப்பீடு எது? ஷேர் மார்க்கெட் முதலீடு, குண்டூசி முதல் தங்கம் வரையான வியாபார உத்திகள் தனி நபர் கடன் வீட்டுக்கடன் தங்க நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களை பற்றிய தெளிவான விளக்கங்கள் இவையனைத்தும் தற்போது உங்கள் நாணய விகடனில்.
இமைப்பொழுதும் நீங்காமல் ஆன்மீகம் விதைக்கும் சக்தி விகடன். கல்யாண தோஷம் முதல் தீரா கடன் நிவர்த்தி வரை, "திருத்தலங்கள்" மகிமையும், சிறப்பும், ஆன்மீக திருக்கதைகளுடன் இறையருளை கண் முன்னே கொண்டு வரும் சக்தி விகடன்.
மங்கையர் மனதில் நம்பிக்கை விதைக்கும் அவள் விகடன். அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் குறிப்புகள், பெண்களின் உடல் ரீதியான சந்தேகங்கள் , சமையல் குறிப்புகள், சாதனை பெண்களின் பேட்டிகள், உறவை வலுப்படுத்தும் வழிகாட்டலை இன்டர்நெட் இன்றியும் அறிய உதவும் பெண்மை போற்றும் குடும்ப இதழ்.
புதிய பைக் அல்லது பழைய பைக், புதிய கார் அல்லது பழைய கார் எந்த மாடல் நல்லது? சந்தையில் எது புதிது? பெட்ரோல்… டீசல்.. மைலேஜுக்கு உகந்த கார் எது ? எலக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை? கேட்ஜெட்ஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பவை உள்ளிட்ட உங்களின் Lifestyle நண்பன் மோட்டார் விகடன்.
வெற்றுக் காகிதங்களை காவியமாய் மற்றும் விகடன் வெறும் வார்த்தை அல்ல பல கோடி மக்களின் நம்பிக்கை. இந்த மனதை மயக்கும் 7 இதழ்களின் சலுகையுடனான சந்தா தொகை, விகடன் இ-இதழ்களின் விலை மட்டுமல்ல அறம் சார்ந்த விகடனின் இதழியலுக்கு நீங்கள் அளிக்கும் கரம்!
உங்களுக்கான மூன்று சிறப்புச் சலுகைகள்:
* Save ரூ.850 > ரூ.1749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899 ரூபாய்க்கு பெறுங்கள்!
* Save ரூ.1,099> ரூ.2998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1899 ரூபாய்க்கு பெறுங்கள்!
* Save ரூ.11,000 > ரூபாய் ₹19,999 மதிப்பிலான டிஜிட்டல் ஆயுள் சந்தா வெறும் ₹ 8999 ரூபாய்க்குப் பெறுங்கள்! No Cost EMI வசதியும் உண்டு.
http://dlvr.it/Sz3trM

விருதுநகர்: ``முன்னேற விழையும் மாவட்டங்களின் வரிசையில் முதலிடம்!” - மத்திய நிதியமைச்சர்
மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் சார்பில், ஸ்வான்நிதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,274 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.நிதியமைச்சர்
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "ஏழை எளிய மக்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக அவர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட திட்டம் ஸ்வான் நிதி. ஸ்வான்நிதி என்றால், 'சுயமான நிதி' எனப்பொருள். அரசின் நலத்திட்ட பொருளுக்காக வரிசையில் நிற்கிற கடைநிலை மனிதர்கள் வரையும் இந்த திட்டத்தின் பயனை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களும் சுய தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இந்த உலகமே உரிமை கோரல் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகிய இரண்டை வகையை சார்ந்துதான் ஈர்க்கப்படுகிறது.
தனக்கான உரிமையை கேட்டுப்பெற்று, தேவையானவற்றை உருவாக்கிக் கொள்வது ஒரு வகை என்றால், சுய சக்தியாக உருவெடுத்து, வளர்வதற்கான அடிப்படை சாதனங்கள் அனைத்தையும் கிடைக்க செய்வது அதிகாரமளித்தல் வகையாகும். இங்குள்ள ஒவ்வொருவரும் சுயமரியாதையுடன், சுய உழைப்பில் உயர்ந்து நிற்பதற்கு அதிகாரமளிக்கும் திட்டமாகத்தான் ஸ்வான் நிதி திட்டம் உள்ளது. சாலை வசதி முதல் ஆரம்ப சுகாதாரம் வரை அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டிய நலத்திட்டங்கள் அடிப்படையில் நாடு முழுவதும் 116 மாவட்டங்கள் முன்னேற விழையும் மாவட்டங்களாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டன. பேச்சு
முன்னேற விழையும் மாவட்டமென்பது மக்களுக்கான அடிப்படை சாதனங்கள் இன்னுமும் அனைவருக்கும் சரிசமமான முறையில் போய் சேரவில்லை, அதை சரியாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் ஆராய்ந்து மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் இந்திய அளவில் முன்னேற விழையும் மாவட்டங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்து அதற்கான விருதையும் பெற்றிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு முறை பேசுகையில், மத்திய அரசு மக்களுக்காக 100 ரூபாய் கொடுக்கிறது என்றால் அதில் 15 ரூபாய் மட்டுமே சம்பந்தப்பட்ட நபருக்கு போய் சேருகிறது. மீதி 85 ரூபாய் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை என பேசி இருக்கிறார். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே டிஜிட்டல் இந்தியா நடைமுறையில் ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க மத்திய அரசு திட்டம் வகுத்தது. வங்கி கணக்கு மூலமாக சம்பந்தப்பட்ட பயனாளிக்கு மத்திய அரசால் கிடைக்கக்கூடிய திட்ட பயன்கள் நேரடியாக அதேநேரம் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய முடிகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்வான் நிதி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூபாய் பத்தாயிரம் கடனுதவி பெற விண்ணப்பித்தவர்களில் இதுவரை 7,982 பேருக்கு முதல் தவணை கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 7,472 நபர்கள் தங்களுக்கான கடன் உதவிகளை பெற்றுள்ளனர். இரண்டாவது நிலையான 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி பெறுவதற்கான திட்டத்தின் கீழ், இதுவரை 1,773 பேருக்கு கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டதில், 1,688 பேர் கடனுதவி பணப்பட்டுவாடா வழங்கப்பட்டிருக்கிறது. 50 ஆயிரம் ரூபாய் கடனுதி பெறும் திட்டத்தில் இதுவரை 249 பேருக்கு கடன் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 242 பேர் கடன் பெற்றுள்ளனர்" என்றார்.கடனுதவி
முன்னதாக, 3 மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்த நிகழ்ச்சி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் வருகை தாமதத்தால் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக 4.30 மணிக்கு தொடங்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி மாலை சுமார் 6 மணி அளவில் முடிவுக்கு வந்தது. அப்போது, நிகழ்ச்சியின் நிறைவாக பாடப்படவேண்டிய 'நாட்டுப்பண்' இசைக்கப்படாமலேயே நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து வரவேற்ற மாவட்ட ஆடசியர் ஜெயசீலன், கடனுதவி வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
ராமேஸ்வரம்: நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை... இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்!
http://dlvr.it/Sz3LzX

``இந்தியா தனது ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும்!" - மாலத்தீவு புதிய அதிபரின் கோரிக்கையும் பின்னணியும்
மாலத்தீவின் புதிய அதிபராக நவம்பர் 17-ம் தேதி அன்று பதவியேற்ற முகமது மூயிஸு (Mohamed Muizzu), மாலத்தீவிலிருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். முகமது மூயிஸு தனது கோரிக்கையை, இந்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவுடனான சந்திப்பின்போது முறையாக தெரிவித்தும் இருக்கிறார்.முகமது மூயிஸ் - கிரண் ரிஜிஜூ
முக்கியமான சுற்றுலாத் தலமான மாலத்தீவின் எட்டாவது அதிபராக முகமது மூயிஸு பதவியேற்ற உடனேயே இவ்வாறு இந்தியாவுக்கு அழுத்தம் தரும் வகையில் கூறியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
முகமது மூயிஸும், சீனாவும்!
மாலே மாகாணத்தின் முன்னாள் அமைச்சரும், மேயருமான அதிபர் முகமது முய்ஸு, 2013 முதல் 2018 வரை மாலத்தீவின் அதிபராக இருந்து சீனாவிடம் பெருமளவில் கடன் வாங்கிய முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு (Abdulla Yameen) நெருக்கமானவர். இதே முகமது முய்ஸுதான், சீனாவுடன் வலுவான உறவை விரும்புவதாக ஒரு வருடத்துக்கு முன்பு கூறியிருந்தார்.சீனா - மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்
அதாவது, ``2023-ல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்நோக்குகிறோம். அப்படி ஆட்சிக்கு வருகையில், அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எங்கள் இரு நாடுகளுக்கும் (சீனா - மாலத்தீவு) இடையிலான வலுவான உறவுகளின் அத்தியாயத்தை எழுதுவோம்" என்று கூறியிருந்தார். இதற்கிடையில், ஊழல் செய்த குற்றவியல் வழக்கில் அப்துல்லா யாமீன் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதன் காரணமாகத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதையடுத்து, தன்னுடைய இடத்துக்கு முகமது முய்ஸுவை அவர் பரிந்துரை செய்தார்.
புவிசார் அரசியலில் ஓர் ஹாட்ஸ்பாட் மாலத்தீவு!
டெல்லியின் ஐந்தில் ஒரு பங்கு அளவிலான ஒரு தீவு நாடான மாலத்தீவில் சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலக அளவில் பிரபலமான சுற்றுலா தலமாக மாலத்தீவு விளங்குகிறது. அதேசமயம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் முக்கிய ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில், மாலத்தீவு ஒரு புவிசார் அரசியல் ஹாட்ஸ்பாடாக மாறியிருக்கிறது. இந்தியாவும், சீனாவும் நீண்ட கால புவிசார் அரசியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவின் வளர்ச்சியில் தாராளமாக முதலீடுகள் செய்திருக்கின்றன.மாலத்தீவு
மாலத்தீவில் இந்திய ராணுவம்!
மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், இந்தியாவால் வழங்கப்படும் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகின்றனர். இதன் காரணமாக, இந்திய போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல ஏதுவாக இருக்கிறது. இந்தியா ராணுவ வீரர்களின் இந்த சிறிய குழு பல ஆண்டுகளாக மாலத்தீவில் நிலைகொண்டிருக்கிறது. மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு, பல மருத்துவ அவசர காலங்களில் இந்திய ஹெலிகாப்டர்கள் உதவியதையும் குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸு
முகமது மூயிஸு பேசியது என்ன?
``எங்களின் பாதுகாப்பு என்று வரும்போது, அதற்கு ஒரு எல்லைக் கோட்டை நான் வரைவேன். அதேசமயம், மற்ற நாடுகளின் எல்லைக் கோடுகளையும் மாலத்தீவு மதிக்கும். மேலும், இந்திய ராணுவத்துக்குப் பதிலாக சீனப் படைகளைக் கொண்டு பிராந்திய சமநிலையை உயர்த்த விரும்பவில்லை" என்று ஊடகத்திடம் முகமது மூயிஸு தெளிவுபடுத்தியிருக்கிறார். முகமது மூயிஸு சீனாவிடம் நெருக்கம் காட்டுபவராக அறியப்பட்டாலும், இந்தியா எத்தகைய முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே, இந்த விவகாரம் எதை நோக்கிச் செல்லும் என்பது தெரியும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
பற்றவைக்கும் சீனா... பாதை மாறும் நேச நாடுகள்... இந்திய தீபகற்பத்தின் அமைதியைக் குலைக்க சதியா?
http://dlvr.it/Sz3Lnf

Sunday, 19 November 2023
ராமேஸ்வரம்: நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை... இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்!
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நேற்று இரவு ராமேஸ்வரம் வந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.மீனவப்பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன்
தனியார் விடுதியில் தங்கியிருந்த நிதி அமைச்சரை பாம்பன் ராயப்பன் தலைமையிலான நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் சந்தித்து, தங்கள் பிரச்னைகளை தெரிவித்தனர்.
கடந்த 15-ஆம் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செயப்பட்டுள்ள 22 நாட்டுப்படகு மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் வைத்தனர்.மீனவர்களுடன் நிர்மலா சீதாராமன்
அதேபோல் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்து 'இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், 135 படகுகளை மீட்டுத்தர வேண்டும்' என்று கைகூப்பி கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை மூலம் இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடமும் பேசி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதனை அடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் நல்லிணக்க அடிப்படையில் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் படகுகளுடன் இன்று விடுவிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளதாக நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.மீனவர்களுடன் நிர்மலா சீதாராமன்
இதனிடையே, இன்று காலை அதிகாலையில் இராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று வழிபடார் நிர்மலா சீதாராமன்.இராமநாதசுவாமி கோயிலில் நிர்மலா சீதாராமன்
ஒரே இரவில் பேசி இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க முயற்சி எடுத்ததற்காக நன்றி தெரிவிக்க வந்த மீனவ பெண்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், "வெற்று வார்த்தைகளால் உங்களை கவரும் தமிழக அரசியலை நம்பாதீர்கள்." என்றார்.
22 மீனவர்களை விடுவித்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Sz2Fvw

`சூரனுக்கு திமுக கொடி வண்ணத்தில் ஆடை?’ - நாகர்கோவில் முருகன் கோயில் சூரசம்ஹார விழா சர்ச்சை
முருகன் கோயில்களில் கடந்த 6 நாள்களாக கந்தசஷ்டி விழா நடந்தது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவான நேற்று முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ள கோயில்களிலும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது வாகனத்தில் எழுந்தருளும் முருகன், சூரனை வதம் செய்யும் காட்சி நடைபெறும். கடவுள் முருகனை அலங்காரம் செய்வது போன்று சூரனையும் விதவிதமாக அலங்காரம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள முருகன் சந்நிதியில் கந்த சஷ்டி விழாவின் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அதில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரனுக்கு தி.மு.க கொடியின் வண்ணத்திலான கறுப்பு, சிவப்பு நிறத்தில் ஆடை அணிவிக்கப்படிருந்தது. அந்த சூரனின் போட்டோவை அ.தி.மு.க ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து "தி.மு.க எனும் சூரன் இன்று வதம் செய்யப்பட்டார்" என பகிர்ந்து வருகின்றனர்.வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் சூரசம்ஹார விழாவில்
"தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் தி.மு.க கொடியின் வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிப்பதா?" என தி.மு.க ஆதரவாளரான கபிலன் உள்ள சிலர் முகநூலில் கேள்வி எழுப்பியதால் இந்த விவகாரம் விவாதபொருளாகி உள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "தி.மு.க ஆன்மிகத்துக்கு எதிரானது இல்லை. தி.மு.க அரசு கோயில் குடமுழுக்குக்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக சிலர் சூரனுக்கு கறுப்பு, சிவப்பு கொடி போன்று அமைத்துள்ளனர். வேண்டுமென்றெ கறுப்பு, சிவப்பு துணியை கட்டி சூரனை வதம் செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன்
கறுப்பு, சிவப்பை பயன்படுத்தியவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் இருக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆலமரம் போன்றது அதை அசைக்க முடியாது. பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் உள் நோக்கத்தோடு இதை செய்திருக்கலாம் என நினைக்கிறேன்" என்றார்.
சூரனுக்கு கறுப்பு, சிவப்பு ஆடை அணியப்பட்டது குறித்து கோயில் தரப்பில் விசாரித்தோம். "கடந்த 40 ஆண்டுகளாக இதுபோன்றுதான் சூரசம்ஹாரவிழாவில் சூரன் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அதுவும் பந்தல் அமைக்கும் பணியாளர்கள்தான் சூரனை அலங்காரம் செய்வார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே இதை அரசியல் ஆக்குகின்றனர்" என நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/Sz2Fkh

Team India: `வீரர்களின் ஜெர்சி... எல்லாவற்றிலும் காவி சேர்க்கிறார்கள்’ - மம்தா பானர்ஜி காட்டம்
``இந்திய கிரிக்கெட் வீரர்களைப் நினைத்து பெருமைக் கொள்கிறோம். மேலும் அவர்கள் உலக சாம்பியன் பட்டம் பெறுவார்கள் என நம்புகிறோம். ஆனால் அவர்கள் பயிற்சி செய்யும்போது, காவி நிற ஜெர்சியை அணிகிறார்கள். வீரர்கள் நீல நிற ஜெர்சியை அணிவதற்கே போராட வேண்டி உள்ளது எல்லாவற்றிலும் காவி சேர்க்கிறார்கள்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
போஸ்டாவில் நடைப்பெற்ற ஜகதாத்ரி பூஜையின் தொடக்க விழாவில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அவர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் அரசியல் ஆதாயத்திற்கு அந்த நிதியை பயன்படுத்தியதாக மத்திய அரசை தாக்கி பேசினார்.மம்தா பானர்ஜி
``உங்களின் ஆதாயத்திற்காக மட்டுமே மொத்த பணத்தையும் விளம்பரம் செய்ய செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 100 நாள் பணியாளர்களின் ஊதியத்தை வழங்கிவில்லை. அந்த ஊதியம் வழங்கப்பட்டால் அந்த பயனாளிகளின் கண்ணீர் துடைக்கப்படும். ஆட்சி அதிகாரம் நிரந்தரமானது அல்ல. அவர்கள் செய்வது முழுவதும் தங்கள் சொந்த லாபத்திற்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் தான். ஆனால் ஆட்சி நிலைக்காது. கவிழ்ந்து விடும்" என்று மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார்.
மேலும், "மதங்கள் வேறுபாடு இல்லாமல் இந்தியாவின் அனைத்து மக்களின் மகிழ்ச்சிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். மதத்தின் அடிப்படையில் நான் எதையும் புதிதாக உருவாக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், "முன்பு மாயாவதி தனக்குத்தானே சிலைகளை வைத்துக் கொண்டார். ஆனால் வேறு யாரும் இதற்கு முன் இதை செய்யவில்லை. இப்போது இது போன்ற விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. என் பெற்றோர்கள் இறந்த பிறகு, மக்கள் என் பெற்றோரின் பெயரில் கல்வி நிறுவனங்களை உருவாக்க பரிந்துரைத்தனர். ஆனால் என் பெற்றோர்கள் விரும்பாத இந்த யோசனை எனக்கு பிடிக்கவில்லை. இந்த வகையில் தான் அவர்களை நினைவு கூறப்பட வேண்டும் என்றில்லை. ஆனால் அவர்கள் தாங்களே தங்கள் பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள்.
நாட்டின் பெயரால் எதை செய்தாலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒருவர் என்றும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் அல்லது தென்னிந்திய தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தினால் கூட எனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை" என்று அவர் கூறினார்.
மேலும், முன்பு சிபிஎம் கட்சியுடன் போராடியதாகவும் இப்போது டெல்லியில் உள்ள கட்சியுடன் போராடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கு வங்காளத்தில் அனைத்து பண்டிகளிலும் கொண்டாடப்படுவதாக கூறிய பானர்ஜி, "தனது பார்வையில் அனைத்து குடிமக்களும் சமம் என்பதால் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக பிரார்த்திப்பதாக கூறினார். மேற்கு வங்கம் நாட்டை வழிநடத்தப் போகிறது என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
http://dlvr.it/Sz1nPm

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அரசு மீதான நீதிமன்றத்தின் அதிருப்தியும், அரசின் விளக்கமும்!
`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது என தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் பதில் தெரிவித்திருக்கிறது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் நீர், நிலம் காற்று என சுற்றுச்சூழல் சீர்கெட்டு, கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகிவருவதாக்கூறிய, சுற்றுவட்டார கிராம மக்கள் `ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்' எனக்கோரிக்கை வைத்து ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தின் 100 நாளில், மிகப்பெரிய பேரணியை நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 13 பேர் குண்டடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறதா திமுக அரசு?
இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர் மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. ஆனால், `இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், தனது புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கூறியும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் அதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், `உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்ற அறிக்கையைத் தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை!' என பதிலளிக்கப்பட்டது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்
அதைத்தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், ``மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல் துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்திருக்கிறது. ஆனால், துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை!" எனக் குற்றம் சாட்டினார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு`ஆட்சியரின் அலட்சியம்; வேட்டையாடுவது போல்...’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை செல்வதென்ன?
இந்தநிலையில், நவம்பர் 17 அன்று இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் கடந்த முறை நீதிமன்றம் கேட்ட விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், `நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கொண்டுடிருப்பதாகவும், அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன் உள்ளிட்ட 17 காவல்துறை அதிகாரிகள், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 21 பேருக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும்' சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றம்
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவு செய்துள்ள வழக்கின் நிலை என்ன? ஒரு காவல்துறை அதிகாரி மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற காவல் துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், `இது தொடர்பாக விளக்கமளிக்க, சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞரும், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞரும் அடுத்த விசாரணையின்போது ஆஜராவார்கள் எனத் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... ஒரு போலீஸ் அதிகாரிதான் காரணமா? அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு
அதைத்தொடர்ந்து, நீதிபதிகள், ``தற்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன? துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!" என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் எடப்பாடியும் - ஓர் அலசல்
http://dlvr.it/Sz1bfm

Saturday, 18 November 2023
மணிப்பூர்: ``2 நாள்களில் 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத போதைப் பயிர்கள் அழிப்பு''- முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 76 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத கசகசா பண்ணைகள் அழிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மணிப்பூர் மாநிலக் காவல்துறை, வனத்துறை மற்றும் மணிப்பூர் ரைஃபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுப் படை, கடந்த செவ்வாய்க்கிழமை 39 ஏக்கர் மற்றும் புதன்கிழமை 37 ஏக்கர் என மொத்தமாக 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத கசகசா பயிர்களை அழித்திருக்கின்றன.கசகசா
கடந்த இரண்டு நாள்களில் மாநில அதிகாரிகளால் அழிக்கப்பட்ட இந்தப் பண்ணைகளின் மொத்த பரப்பளவானது, 40 கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. மணிப்பூர் மலைப்பகுதிகளில் பெரிய அளவிலான சட்டவிரோத கசகசா சாகுபடிக்கு எதிராகத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அபின் மற்றும் ஹெராயின் உற்பத்தியால் மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்திருப்பதாகவும், இந்த போதைப்பொருள் வணிகமே குக்கி மக்களுக்கும் மைதேயி மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதற்கான ஒரு காரணமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படியான சூழலில்தான், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள உக்ருல் மாவட்டத்தின் தோரா சாம்புங் மலைத்தொடரில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
இதுபற்றி, X சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் பிரேன் சிங், ``76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத கசகசா வயல்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. குழாய் இணைப்பு போன்ற பிற உள்கட்டமைப்புகள், உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் போன்றவையும் அழிக்கப்பட்டிருக்கின்றன. போதைப்பொருள்களுக்கு எதிரான போரை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. போதைப்பொருள் அச்சுறுத்தலை மணிப்பூரிலிருந்து முற்றிலும் வேரறுக்கும் வரை இந்த போரை நிறுத்தப்போவதில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.மணிப்பூர்: வாழ்வாதாரத்தை மீட்க பொம்மை தயாரிக்கும் பயிற்சி - கை கொடுக்கட்டும் புதிய முயற்சி!
http://dlvr.it/Sz0qGX

அண்ணாமலை பல்கலை., பணிநீக்க விவகாரம்; உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் விதிமீறல் நடந்தது எப்படி?!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளையடுத்து, 2013-ல் அந்தப் பல்கலைக்கழகத்தை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. முன்னதாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலையடுத்து, 2012-ம் ஆண்டில் அரசு முதன்மைச் செயலாளரான சிவதாஸ் மீனா, பல்கலைக்கழக தனி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே, அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்துவது தொடர்பாக மற்றொரு அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார். அதில் அதிக எண்ணிக்கையில் பேராசிரியர்களும், ஊழியர்களும் இருப்பதால், அவர்களைப் பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினால், நிதிச்சுமை குறையும் என்று பரிந்துரைத்தார். இதன்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் மாநிலம் முழுவதுமுள்ள பிற கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்குப் பணி நிரவல் செய்யப்பட்டனர். ஜெயலலிதா
அதன் பிறகு தணிக்கைக் குழு தனது ஆய்வை மேற்கொண்டது. அதில், உரிய கல்வியே இல்லாமல் சிலர் பணியில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நடவடிக்கை எடுக்குமாறு உயர்கல்வித்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி கணினி அறிவியல், பொருளாதாரம், வரலாறு, மேலாண்மைதுறைகளைச் சேர்ந்த 56 உதவிப் பேராசிரியர்களைப் பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசனிடம் கேட்டோம். “பணிநீக்கம் செய்யப்பட்ட 56 பேரும் 2009-க்கு முன்பே உதவிப் பேராசிரியர் பணியில் இணைந்தவர்கள். பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணிகளுக்கு யு.ஜி.சி, ஏ.ஐ.டி.சி பல்வேறு விதிகளை வகுத்திருக்கின்றன. அந்த விதிகளைப் பின்பற்றி, தகுதியுடையவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகம்
இது 2013-ல் அரசால் அமைக்கப்பட்ட தணிக்கைக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. உதாரணத்துக்கு எம்.பி.ஏ-வில் முதல் கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என, யு.ஜி.சி விதி இருக்கிறது என்றால், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டால், அந்த நியமனம் செல்லத்தக்கதல்ல. அதேபோல கணினி அறிவியல் படிக்காமல் வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி அறிவியல்துறை உதவிப் பேராசியராக நியமிக்கப்பட்டது போன்ற விதிமீறல்கள் தணிக்கைக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்தப் பணிநீக்கம் நடந்திருக்கிறது. தற்போது அந்த 56 பேரில் 18 பேர் மட்டுமே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இப்போதும் பணியாற்றி வருகின்றனர். 38 பேர் பணி நிரவல் செய்யப்பட்டு, பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்” என்றார்.அண்ணாமலை பல்கலைக்கழகம்
இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்திலும் விசாரித்தோம். “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும் யு.ஜி.சி விதிகளைப் பின்பற்றி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலே வேலை கொடுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் பரவலான எதார்த்தம். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. சிபாரிசுகள் அடிப்படையில் சிலரை நியமிக்கலாம். அதேபோல தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் குறைந்த ஊதியத்தில் உதவிப் பேராசிரியர்களை நியமித்து விடுவார்கள். அதனால் யு.ஜி.சி விதிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகம் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டதால், தணிக்கைக் குழு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகி, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.
http://dlvr.it/Sz0Yf1

`இனி மின்சார திருடன் எனக் கூறக் கூடாது'- ரூ.68,526 அபராதம் செலுத்திய குமாரசாமி; காங்கிரஸ்மீது சாடல்!
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, தீபாவளியன்று தனது வீட்டுக்கு சட்டவிரோதமாக மின்கம்பத்திலிருந்து நேரடியாக மின்சாரத்தைத் திருடியதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `அரசு இலவசமாக 200 யூனிட் மின்சாரம்தான் வழங்குகிறது, 2,000 யூனிட் அல்ல. கர்நாடகா இருளில் மூழ்கிவிட்டது என்று கூறிவிட்டு, இப்போது திருட்டு மின்சாரத்தில் உங்கள் வீட்டை மின்விளக்குகளால் ஜொலிக்கவிட்டிருக்கிறீர்கள்' என்று குமாரசாமியைச் சாடியது.ஹெச்.டி.குமாரசாமி
பின்னர், இந்த கவனக்குறைவுக்கு வருந்துவதாகவும், BESCOM (பெங்களூரு மின்சாரம் வழங்கும் நிறுவனம்) அதிகாரிகள் வந்து ஆய்வுசெய்து நோட்டீஸ் வழங்கினால் அபராதத்தைச் செலுத்துவதாகவும் குமாரசாமி பதிலளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, BESCOM அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய மின்சாரச் சட்டம் பிரிவு 135-ன் (மின்சாரத் திருட்டு) கீழ் குமாரசாமி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், மின்கம்பத்திலிருந்து சட்ட விரோதமாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தியதற்காக ரூ.68,526 அபராதம் செலுத்தியிருக்கிறார் குமாரசாமி.
இது குறித்து, தனது கட்சி அலுவலகம் முன்பு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ``தீபாவளியன்று எங்கள் வீட்டில் அவ்வாறு நடந்ததற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், மின்விளக்குகளுக்கான மின்சார நுகர்வு 1 கிலோவாட்டுக்கும் குறைவானதுதான். ஆனால், 2.5 கிலோவாட் என்று கணக்கிட்டு 7 நாள்களுக்கு 71 யூனிட்டுகள் என்று பில்கொடுக்கப்பட்டிருக்கிறது. 71 யூனிட்டுகளுக்கு, மூன்று மடங்கு அபராதம், அதாவது 68,526 ரூபாய்.ஹெச்.டி.குமாரசாமி
அதேசமயம், என்னை மின்சார திருடன் என்று முதல்வரும், துணை முதல்வரும் முத்திரை குத்தியிருக்கின்றனர். இவர்களின் மின்சார திருட்டு குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் பயப்படவில்லை. இவர்களைப் (காங்கிரஸ்) போல் நான் திருடவில்லை. BESCOM வழங்கிய பில் மற்றும் அபராதத்தை செலுத்தி விட்டேன். இனிமேல் என்னை மின்சார திருடன் என்று கூறுவதை நிறுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
இருப்பினும், குமாரசாமியைச் சாடிய முதல்வர் சித்தராமையா, ``எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்காக அபராதம் செலுத்தினார்?" என்று கேள்வியெழுப்பினார்.`தாலியைக் கழற்று' கர்நாடக சிவில் சர்வீஸ் தேர்வில் கெடுபிடி... திருமணமான பெண்கள் வேதனை..!
http://dlvr.it/Sz0YQH

திண்டுக்கல்: `என்ன செய்தார் எம்.பி., பி.வேலுச்சாமி..?’ - உங்கள் கருத்து என்ன?!
திண்டுக்கல் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வேலுச்சாமியின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...
பி.வேலுச்சாமியின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன... பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த சர்வேயில் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும்.
https://forms.gle/3TkUH93jRVoFXHby7?appredirect=websiteLoading…திருநெல்வேலி: `என்ன செய்தார் எம்.பி., எஸ்.ஞானதிரவியம்..?’ - உங்கள் கருத்து என்ன?!
http://dlvr.it/Sz02lT

Friday, 17 November 2023
துப்பாக்கிச்சூடு: `கலெக்டர் முதல் ஐ.ஜி வரை 21 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் தொடக்கம்!' - தமிழக அரசு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது, பொதுமக்கள்மீது காவல்துறையினர் மே 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஆணையத்தின் புலன் விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை, தமிழக அரசு அளித்த அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்துவைத்தது.
இதை எதிர்த்து, மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு
இந்த நிலையில், வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். பின்னர், ``நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி-யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி-யாக இருந்த மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் வழக்கின் நிலை என்ன... ஒரு காவல்துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, மற்ற காவல்துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பினர்.
அதையடுத்து, ``இது தொடர்பாக விளக்கமளிக்க, சி.பி.ஐ தரப்பு வழக்கறிஞரையும், தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞரையும் அடுத்த விசாரணையின்போது, ஆஜராகச் சொல்கிறேன்" என தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.சென்னை உயர் நீதிமன்றம்
``குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் இன்னும் பணியில் நீடிக்கிறார்களா அல்லது ஓய்வுபெற்றுவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அரசுத் தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவ், ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்களிடையே பிரச்னை ஏற்பட்டபோது, அதைத் திறமையாகக் கையாண்டு, நீதிமன்றம் சுமுகமாகச் செயல்பட உதவியவர். அவர் எப்படி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்... தற்போது நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்னென்ன... துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`சாத்தான்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கலை!' - குமுறும் மக்கள்
http://dlvr.it/SyymqN

சீர்கெட்டுக் கிடக்கும் திருப்பத்தூர் பேருந்து நிலையம்; கேள்விக்குறியான சுகாதாரம் - மக்கள் வேதனை!
`சந்தன மாநகரம்’ என்று அழைக்கக்கூடிய திருப்பத்தூர் மாவட்டத்தின் பேருந்து நிலைய திட்டம், 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பேருந்து நிறுத்துமிடம் மேடு பள்ளங்களாகவும், மது பாட்டில்களாலும் நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் பேருந்து வெளியே செல்லும் இடங்களில் தூய்மையற்ற கழிப்பிடங்கள், அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்து வெளியே செல்லும் இடத்தில், நகராட்சி நவீன கட்டணக் கழிப்பிடமும், பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பிடமும் இருக்கின்றன. நீண்ட வருடங்களாகவே இந்தச் சிறுநீர் கழிப்பிடத்திலிருந்தும், நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீர் கலந்து கால்வாயில் தேங்கிய நிலையில் காணப்படுவதாகவும், அதுவும் திறந்தநிலையிலே கிடப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும், மது அருந்திவிட்டு மது பாட்டில்களைப் பேருந்து நிலையத்தின் ஓரங்களில் போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.
பேருந்து நிலையத்தின் மையப் பகுதிகளில் மேடும், பள்ளமாகவும் காணப்படுவதால், மக்கள் அந்த வழியாக அவசரமாகப் பேருந்தைப் பிடிக்கச் செல்லும்போது கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், பேருந்து நிறுத்துவதில் சிரமமாக இருக்கிறது என்றும் பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்தனர் .
அதுமட்டுமல்லாமல், மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களைப் பேருந்து நிலையத்தின் ஓரங்களில் போட்டுவிடுவதாகவும் கூறினர். அதேசமயத்தில் அந்த இடத்தில் பொதுமக்கள் சிலர் குப்பைகளையும் சேர்த்துப்போடுவதால் நீர் தேங்கி நோய் பரவுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் சில ஓட்டுநர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சக ஓட்டுநர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிறுத்தும் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து மற்றும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றன.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தின் சிறுநீர் கழிப்பிடம் சரிவரப் பராமரிக்காததால், மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான பொதுமக்கள் பேருந்து நிலையத்தின் சிறுநீர்க் கழிப்பிடத்தைப் பயன்படுத்தாமல் அதற்கு எதிரே அமைந்துள்ள நகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த இரண்டு கழிப்பிடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பேருந்து வெளியே செல்லும் இடத்திலுள்ள கால்வாயில் துர்நாற்றத்துடனும், கொசு முட்டைகளுடன் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி வி.சி.எம் என்ற தெரு ஒன்று இருக்கிறது. இந்தத் தெருவைச் சார்ந்த மக்கள் இது குறித்து பலமுறை உரிய அதிகாரிகளிடமும், வார்டு கவுன்சிலரிடமும் எடுத்துரைத்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர் .
கால்வாய்க்கு அருகிலுள்ள கடை விற்பனையாளர்களும் எப்போதும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடியே இருப்பதாகவும் தெரிவித்தனர். இது குறித்து அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, "இந்த வழியாக நீங்கள் மூக்கை மூடாமல் சென்றால் நான் உங்களுக்குக் காசு கொடுக்கிறேன்" என்று நிலைமையை விவரித்தனர்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயகக் கடமையாற்றிய பொதுமக்கள் கேட்கிறார்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SyyNrH

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் டிஸ்மிஸ் - பின்னணி என்ன?!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் எனச் சுமார் 12,000 பேர் பணியாற்றிவருகின்றனர். நிர்வாகக் குளறுபடி மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது பல்கலைக்கழகம். ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கே சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனால், அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கருதி, 2013-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று, தமிழக அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. நிதி நெருக்கடியிலிருந்து பல்கலைக்கழகத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய தமிழக அரசு, சிவதாஸ் மீனாவை சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்அண்ணாமலை பல்கலைக்கழகம்: `50 நாள் தொடர் போராட்டம்... வெளியான அரசாணை!’ - என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்
அதையடுத்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் எனச் சுமார் 3,000-க்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திலுள்ள மற்ற கல்லூரிகளுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் தணிக்கைக்குழு ஆய்வு மேற்கொண்டபோது, போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவது தெரியவந்தது. அதனால் அவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள, உயர்கல்வித்துறையில் கோப்பு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் உதவி பேராசிரியர்களாகப் பணியாற்றிவந்த 56 பேரை அதிரடியாகப் பணிநீக்கம் செய்திருக்கும் தமிழக உயர்கல்வித்துறை. இரண்டாம் கட்டப் பட்டியலை தயாரித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் போலிச் சான்றிதழ்கள் மற்றும் போதிய தகுதியில்லாமல் பணிபுரிந்துவருபவர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
http://dlvr.it/SyyNVc

தி.மலை விவசாயிகள்மீது குண்டர் சட்டம்: `திமுக விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம்’ - சீமான் காட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா சிப்காட், செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில், 3,174 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சிக்காலத்தில் கையகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்புப் போராட்டம், நடைப்பயணம், மறியல் போராட்டம், அரசியல் கட்சிகள் ஆதரவுடன் போராட்டம் எனப் பல்வேறு கட்டங்களாக இன்று வரை தொடர்ந்து நடைபெறுகின்றன.ஸ்டாலின் - விவசாயிகள்
கடந்த 2-ம் தேதி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நியாய விலைக்கடை அட்டைகளை ஒப்படைக்க, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது, இரண்டு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இதற்குக் கண்டனம் தெரிவித்த விவசாயிகள், திருமண மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இவர்களிடம் சார் ஆட்சியர் அனாமிகா பேச்சுவார்த்தை நடத்திய பிறகு புறப்பட்டுச் சென்றனர்.
இதற்கிடையில், போராட்டப் பந்தலை காவல்துறையினர் அகற்றினர். தொடர்ந்து மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது, தடையை மீறி பேரணி சென்றது, காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்தியது, ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கூடியது என 11 வழக்குகள் அவர்கள்மீது பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கடந்த 4-ம் தேதி கைதுசெய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஏழு பேர்மீது நேற்று குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.சீமான்
இதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏறத்தாழ 3,174 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை தமிழ்நாடு அரசு சிப்காட் சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பல மாதங்களாக அறவழியில் போராடிவந்த விவசாயிகளை தி.மு.க அரசு எதேச்சதிகாரப் போக்குடன் கைதுசெய்து சிறையிலடைத்தது. தற்போது, தாய்நிலத்தைத் தற்காக்கப் போராடிய அப்பாவி விவசாயிகளில் எழுவர் மீது சிறிதும் மனசாட்சியின்றி தி.மு.க அரசு குண்டர் சட்டம் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
விளைநிலங்களை அழித்து, தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடிவரும் வேளாண் மக்களின் உரிமைக்குரலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்கும் தி.மு.க அரசின் செயல் கொடுங்கோன்மையாகும். எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடிய தி.மு.க., ஆட்சி - அதிகாரத்துக்கு வந்தவுடன் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை பசுமைவழிச் சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயல்வதும், கோவை – அன்னூர், திருவண்ணாமலை – பாலியப்பட்டு, செய்யாறு - மேல்மா, கிருஷ்ணகிரி - ஓசூர் உள்ளிட்ட இடங்களில் வேளாண் மக்களின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களை அபகரித்துத் தொழில் வளாகம் அமைக்க முயல்வதும், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க துணைபோவதும் நம்பி வாக்களித்த விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சை துரோகம்.சீமான் - முதல்வர் ஸ்டாலின்
எந்த சிப்காட் தொழிற்சாலையும் காய், கனிகளை விளைவிக்காது; அரிசி, பருப்பினை உற்பத்தி செய்யாது என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்... வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் வேளாண் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக பறித்து அழிப்பதென்பது தாய்ப்பால் தரும் தாயின் மார்பினை அறுத்து ரத்தம் குடிப்பதற்குச் சமமாகும். மேல்மா சுற்றுவட்டார விவசாயப் பெருமக்கள் விடுத்த அழைப்பை ஏற்று கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 16-ம் நாள் நாம் தமிழர் கட்சி சார்பாக நானே நேரில் சென்று அந்த மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தில் பங்கேற்று, அவர்களின் மண்ணுரிமை கோரிக்கை வெல்ல எனது முழு ஆதரவைத் தெரிவித்து உரையாற்றினேன்.
அதோடு கடந்த 6-ம் தேதி போராடும் விவசாயிகள் மீது தி.மு.க அரசு காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைது செய்தபோது, அதைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தேன். ஓராண்டுக்கும் மேலாக மேல்மா சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வராத திமுக அரசு போராடிய ஏழு விவசாயிகள்மீது குண்டர் சட்டம் தொடுத்திருப்பது சிறிதும் மனச்சான்றற்ற அரச வன்முறையாகும்.சீமான்
ஆகவே, தி.மு.க அரசு வேளாண் பெருங்குடி மக்கள்மீது தொடுக்கப்பட்டிருக்கும் குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்துசெய்வதுடன், எவ்வித வழக்கும் பதியாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
`சாதியக் கொடுமைகளின் கூடாரமாகிவிட்டது தமிழ்நாடு..!' - திமுக அரசைச் சாடும் சீமான்
http://dlvr.it/SyyN5P

Tamil News Today Live: மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டம்; சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டம் - தொடங்கியது வாக்குப்பதிவு!
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியாவில் ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், கடந்த 7-ம் தேதி நக்சல் பாதிப்பு அதிகமிருக்கும் 20 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/SyxffP

Thursday, 16 November 2023
`சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கலை!' - குமுறும் மக்கள்
`நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதன் மூலம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆட்சி மாறியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது.போலீஸ் தாக்குதல்தமிழக மக்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது, அந்தக் கொடுமையான சம்பவத்தை..!
2018, மே 22 தூத்துக்குடியின் கறுப்புநாள். சுற்றுச்சூழலை மாசுபடுத்திவந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ’தூத்துக்குடி’ என்றாலே துப்பாக்கிச்சுடு சம்பவம் நினைவுக்கு வரும் வகையில், வரலாற்றில் அழியாக்கறை படிந்துவிட்டது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளையடுத்து, மே 26-ல் ஆலை சீல் வைத்து மூடப்பட்டதுதூத்துக்குடி கலவரம்
இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ ஒருபக்கம் விசாரிக்க, அப்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் இன்னொரு பக்கம் அமைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 1,544 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை, 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இறுதி அறிக்கையின் சில பகுதிகள் கசிந்தன.அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு
அதில், `யாருடைய உத்தரவும், தூண்டுதலுமின்றி துப்பாக்கிச்சூடுநடந்திருக்கிறது. தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத காவல்துறை நடவடிக்கைகளில் மிக மோசமான சம்பவம் இது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
``குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள்மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படுவதுடன் சிறையில் அடைக்க வேண்டும்” என துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராளிகள் உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 19.10.22-ல் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. இருப்பினும், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொந்தளிக்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்.போலீஸ் துப்பாக்கிச்சூடு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், ‘அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டுச்சேர்ந்து நடத்திய, பச்சைப் படுகொலைதான் துப்பாக்கிச்சூடு சம்பவம், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் கொள்கை முடிவு கண்துடைப்பானது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட நடவடிக்கை எடுப்போம். துப்பாக்கிச்சூடு படுகொலைக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும், தண்டிக்கப்படுவார்கள்’ எனப் பேசினார். ஆனால், இதுவரை அவர்கள்மீது என்ன குற்றவியல் நடவடிக்கை பாய்ந்தது,தேர்தல் பிரசாரத்தில் பேசியது ஓட்டுக்கான வெறும் பேச்சுதானா?தூத்துக்குடி கலவரம்
ஆணையத்தின் அறிக்கை குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. பல நூறு சாட்சிகளை விசாரித்து, சிசிடிவி கேமரா, பிரேத பரிசோதனை அறிக்கை, காயச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து, ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினரை அடையாளம் காட்டியும், அரசு அதை ஏற்றுக்கொண்ட பிறகும், அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் தயங்குவது ஏன்?” என்றார்.
துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம். ”துப்பாக்கிச்சூட்டுல சம்பந்தப்பட்ட எல்லா குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்கும் நாள், எந்த நாளோ அந்த நாள்தான், என் மகள் உள்ளிட்ட 13 பேரின் இறப்புக்கு நீதி கிடைக்கும் நாள். சாத்தான்குளத்துல அப்பா, மகனை போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு அடிச்சுக் கொலைசெஞ்ச 10 போலீஸ்காரங்களுமே இப்போ வரைக்கும் தண்டனை அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க. சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கலை. முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றணும்" என்றார் கண்ணீருடன். கிருஷ்ணமூர்த்தி - வனிதா
இந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கக் காரணமான மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேனிடம் பேசினோம். ``அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீது தொடர்ந்த வழக்குதான் காரணம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணையை, சம்பவம் நடந்த அதே ஆண்டில் சூமோட்டோவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஐந்து மாதங்களில் விசாரணையை முடித்துக்கொண்டது.
நான் தனியாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்திருந்தது குறித்துக் கேட்டதற்கு, சூமோட்டோவாக எடுக்கப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கில், என் புகாரை இணைத்திருந்ததால், வழக்கு க்ளோஸ் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்கள். எனக்குத் தெரிவிக்காமல் எப்படி வழக்கை முடிக்கலாம் என்றேன். அது மட்டுமின்றி என்.ஹெச்.ஆர்.சி மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பிய விசாரணைக்குழுவின் அறிக்கையையும் எனக்குத் தரவில்லை. வழக்கு முடிக்கப்பட்டது ஏன் என்றதற்கு, `பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கிவிட்டது, வழக்கை சி.பி.ஐ விசாரித்துவருகிறது, அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது, தூத்துக்குடியில் அமைதி நிலவுகிறது' என்று அரசு கூறிய விளக்கத்தை எனக்கு பதிலாகக் கொடுத்தார்கள்.ஹென்றி டிபேன்
என் புகாரின் அடிப்படையில் விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு பலமுறை நினைவூட்டியும், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2020-ல் உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். `ஐந்து மாதங்களில் ஒரு வழக்கை க்ளோஸ் செய்வதா?' என்று ஆதங்கப்பட்ட உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. அதோடு அவர்களின் விசாரணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கையை எனக்கு வழங்க உத்தரவிட்டதுடன், க்ளோஸ் செய்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், மீண்டும் எனக்கோ, அரசுக்கோ முறையாக நோட்டீஸ் கொடுக்காமல், வழக்கை முடிப்பதாகத் தெரிவித்தார்கள்.
அரசு கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில், ஐந்து மாதங்களில் சூமோட்டோவாக எடுத்த வழக்கை முடித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்மீதான வழக்கு விசாரணையின்போதுதான், சி.பி.ஐ விசாரித்துவருவதையும், அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஏடி.எஸ்.பி உள்ளிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினேன். 2022-ல் சமர்ப்பிக்கப்பட்ட அருணா ஜெகதீசனின் முழுமையான விசாரணை அறிக்கையை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டது. தூத்துக்குடி கலவரம்
இழப்பீடு வழங்கிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தேன். சி.பி.ஐ-யோ விசாரணையில் ஒரேயொரு இன்ஸ்பெக்டரைத்தான் குற்றவாளியாகக் காட்டியிருக்கிறது. அதனால், சிறப்புப் புலனாய்வுக்குழுவை நியமிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆணைய அறிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத்தான் தற்போது நீதிமன்றம் கேள்வியாக முன்வைத்திருக்கிறது" என்றார்.தமிழக அரசு அளிக்கும் விளக்கத்தில்தான், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது தெரியவரும்!தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறதா திமுக அரசு?
http://dlvr.it/SywGhZ