மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்துக்கும், பழங்குடியல்லாத மெய்தி சமூகத்துக்கும் இடையிலான வன்முறை மே மாதம் முதல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நெருப்புக்கு இரையான வீடுகள், கடைகள், நூற்றுக்கும் மேற்பட்டோரின் மரணங்கள், பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் என அத்தனையும் நிகழ்ந்தபிறகும் மணிப்பூர் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.மணிப்பூர் வன்முறை
இப்படியே ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. இன்னும், `வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கிறோம்’ என்று பா.ஜ.க அரசு கூறிவருகிறது. இதற்கிடையில், மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாகவும் அறிவிக்கப்பட்டு, அந்நிலை தொடர்கிறது.
இந்த நிலையில், குக்கி மற்றும் மெய்தி சமூகத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். மிசோரமின் தெற்குப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ``கடந்த ஒன்பது ஆண்டுகளாக வடகிழக்கு அமைதியாக இருக்கிறது. இருப்பினும் மணிப்பூர் வன்முறை எங்களுக்கு வேதனையளிக்கிறது.ராஜ்நாத் சிங்
எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. இப்போது நமக்குத் தேவையானது, இதயங்களுக்கிடையிலான உரையாடல். எனவே, இரு சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து நம்பிக்கையின்மையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வன்முறை எந்தவொரு அரசியல் கட்சியினாலும் நடக்கவில்லை. சில சூழ்நிலைகளால் இது நிகழ்ந்தது" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/46c3KEk
">
https://bit.ly/46c3KEk
/>
Manipur: பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர்! - இனி வரும் நாள்கள் எப்படி இருக்கும்?
http://dlvr.it/SyGy8P
Thursday, 2 November 2023
Home »
» மணிப்பூர் வன்முறை: ``இரு சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்!" - ராஜ்நாத் சிங்