தென்காசி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மெயின் அருவி மற்றும் அதனை சுற்றியுள்ள வணிகக் கடைகள், உடை மாற்றும் அறைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் உள்ளட்டவை குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த அவர், அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.ஆய்வு
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ``தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குற்றாலத்தில் பேரருவி, செண்பக தேவி அருவி, தேனருவி என பல அடுக்குகளை கொண்ட இயற்கை வளஅமைப்பை கொண்ட சுற்றுலாத் தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக திட்டமிடப்பட்ட அனேக விஷயங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு உடை மாற்றும் அறை இல்லை, வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை, குற்றாலத்தை உலக தரமிக்க சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட 41 கட்டளைகள் இன்னும் அமல்படுத்தவில்லை. மே மாத இறுதி முதல் செப்டம்பர் வரைக்கும் மட்டுமே குற்றாலத்தில் சீசன் காலமாகும். அந்தக்காலத்தில் சிறு, குறு வியாபாரிகள் முதல் இந்த சுற்றுலா மையத்தை அடிப்படையாக வைத்து பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் பயன்பெறுவார்கள்.வாக்கு சேகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் வணிகம் பெருகி வருவாய் அதிகரிக்கும். சீசனை தவிர மற்ற நாள்களில் தண்ணீர் வரத்தும் இருப்பதில்லை. எனவே, வருடம் முழுவதும் குற்றாலத்தில் தண்ணீர் வருவதற்கு சிறப்பு ஏற்பாடாக பேரரருவிக்கு மேலே உள்ள அருவி வழித்தடங்களிலிருந்து வருடந்தோறும் நீர் வரும் அளவுக்கு சின்னதொரு நீர்த்தேக்கம் அமைத்து புதிய அருவி அமைப்பதற்கு திட்டம் முன்வைக்கப்படும். இது, ஏற்கெனவே இருக்கும் இயற்கை அமைப்பை கெடுக்காத வகையிலும், விவசாய நீர் பாசனத்தை பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படும். அதுபோல குற்றாலத்தை உலக தரமிக்க சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினால் முடியாது. ஆகவே நான் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானதும் குற்றாலத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்" என்றார்.பா.ஜ.க வலையில், கிருஷ்ணசாமி வாண்டையார்? - கொந்தளிக்கும் காங்கிரஸார்!
http://dlvr.it/T5c0JL
Wednesday, 17 April 2024
Home »
» தென்காசி: `வருடம் முழுவதும் சீசன்; குற்றாலத்தில் புதிய அருவி உருவாக்குவேன்!' - டாக்டர் கிருஷ்ணசாமி