மகாராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் நக்சலைட்கள் அதிகமாக இருக்கின்றனர். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும் ஆகும். இந்த காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக சாலை மற்றும் மருத்துவ வசதி கிடையாது. கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பட்டிகாவ் என்ற இடத்தில் வசிக்கும் தம்பதியின் இரண்டு மகன்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த மகன்களை பெற்றோர் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இரண்டு மகன்களும் இறந்துவிட்டனர். இதனால் மகன்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் வசதியோ அல்லது டாக்ஸியில் எடுத்துச் செல்ல பண வசதியோ இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் தங்களது மகன்களை தோளில் சுமந்து கொண்டு தங்களது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தனர். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பு மாவட்டமான கட்சிரோலியில் தம்பதிகள் 15 கிலோமீட்டர் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு மகன்களின் உடல்களைக் கொண்டு சென்றனர். அவர்கள் மகன்களின் உடல்களை தோளில் சுமந்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களது ஊர் வனப்பகுதியில் இருக்கிறது. விஜய்
மழை காலம் என்பதால் ஊருக்கு செல்லும் பாதை சேறும், சகதியுமாக இருந்தது. அடிக்கடி மழையும் பெய்தது. அதனை பொருட்படுத்தாமல் மகன்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். அவர்கள் மகன்களின் உடல்களை சுமந்து சென்ற வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ''சகோதரர்கள் இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை. இரண்டு மணி நேரத்தில் அவர்களது உடல்நிலை மோசம் அடைந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். சிறார்களின் உடலை சொந்த ஊருக்கு பெற்றோர் எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கூட இல்லை.
15 கிலோமீட்டர் தூரம் மகன்களின் உடலோடு நடந்து செல்லவேண்டிய நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டனர். கட்சிரோலியின் சுகாதார அமைப்பு மோசமானது என்ற உண்மை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சிரோலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தர்மராவ் ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாநிலத்தை எப்படி மேம்படுத்தப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கட்சிரோலிக்கு சென்று உண்மையான கள நிலவரத்தை பார்க்கவேண்டும். ஒரு வாரத்தில் விதர்பாவில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். கடந்த ஒன்றாம் தேதி அமராவதி மாவட்டத்தில் உள்ள தகேந்திரி என்ற கிராமத்தில் கவிதா என்ற பழங்குடியினப் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அரசு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
இதில் அப்பெண்ணிற்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அப்பெண்ணின் உடல்நிலை மோசம் அடைந்தது. கவிதா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்து அமராவதி கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக தாய், குழந்தை என இரண்டு பேரும் இறந்துவிட்டனர். மோசமாசன சுகாதார வசதி காரணமாக இது போன்ற நிலை ஏற்பட்டது. அரசு 1,500 ரூபாய் கொடுத்து ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு ஆம்புலன்ஸ் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.Insurance Arrest: `முன்கூட்டிய கைது நடவடிக்கை'- நீதிமன்றத்தில், சிபிஐ மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால்
http://dlvr.it/TCs8sN
Thursday, 5 September 2024
Home »
» ஆம்புலன்ஸ் வசதி குறைபாடு; இறந்த மகன்களின் உடலை 15 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர் - மகாராஷ்டிரா அவலம்!