மாநில அரசு vs மத்திய அரசுதேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ரா சிக்ஷா ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியை மத்திய பா.ஜ.க அரசு தர மறுப்பதாக திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கை குறித்த வாதம் மீண்டும் நீள்கிறது.
முன்னதாக, அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்பாக, `பி.எம் ஸ்ரீ பள்ளித் திட்டத்துக்கு மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட திமுக அரசு, அரசியல் லாபத்துக்காக `அந்தத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை இருக்கிறது. அதனால் ஏற்க மாட்டோம்' என்று இப்போது கூறிவருகிறது. மத்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்கிக் கொண்டுதான் இருக்கிறது' என்று கூறியிருந்தார்.தேசிய கல்விக் கொள்கை - 2020
அதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு, `2024-25 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி (60 விழுக்காடு). இதற்கான முன்மொழிவுகள் கடந்த ஏப்ரலிலேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. விவாதங்கள் தேவைப்படும் தேசிய கல்விக் கொள்கையினை, கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது' என்று குறிப்பிட்டு நிதியை ஒதுக்க நடவடிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார்.
`சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதியை மறுப்பதா?’
அதன்பின்னர், தொடர்ச்சியாகத் தேசிய கல்விக் கொள்கையும், அதனுள் இருக்கும் மும்மொழிக்கொள்கையும் பா.ஜ.க, தி.மு.க இடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அந்த வரிசையில், ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் `தி இந்து' ஆங்கில இதழின் தரவுகளைப் பதிவிட்டு, ``தேசிய கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதியை மறுப்பதும், அதே நேரம் இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்குவதும்தான், தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த திட்டமா?" என்று ட்வீட் செய்திருந்தார்.ஸ்டாலின் - மோடி கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டம்
இதற்குத் தற்போது எதிர்வினையாற்றியிருக்கும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ஸ்டாலினிடம் நான்கு கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதில், ``ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது. இருப்பினும், ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது, அரசியலமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு எதிரானது. தேசிய கல்விக் கொள்கை - 2020, பரந்த அளவிலான ஆலோசனைகள் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் கொள்கையை ரீதியான எதிர்ப்பில், உங்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
> தமிழ் உட்பட தாய்மொழியில் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்களா?
> தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வு நடத்துவதை எதிர்க்கிறீர்களா?
> தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கப்படுவதை எதிர்க்கிறீர்களா?
> தேசிய கல்விக் கொள்கையின் முழுமையான, ஒழுங்கமைப்பான, சமமான, எதிர்காலத்துக்கான உள்ளடக்கம் சார்ந்த கட்டமைப்பை எதிர்கிறீர்களா?மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்
அப்படி எதுவும் இல்லை என்றால், உங்களின் அரசியல் ஆதாயங்களை விட தமிழக மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தர்மேந்திர பிரதான தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYNEP 2020: புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதகங்கள் என்னென்ன? | The Imperfect Show 30/7/2020
http://dlvr.it/TD2wPR
Tuesday, 10 September 2024
Home »
» தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்; ஸ்டாலினிடம் மத்திய கல்வியமைச்சர் முன்வைக்கும் 4 கேள்விகள்