காங்கிரஸில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடைசி நேரத்தில் உடல் எடை காரணமாக போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பதக்கம் பெறுவார் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது இந்தியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நாடு திரும்பிய போது ஹரியானா காங்கிரஸ் எம்.பி.தீபேந்தர் வரவேற்றார்.
அதிலிருந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில் காங்கிரஸின் அழைப்பின் பேரில், வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்தனர். இதையடுத்து, அகில இந்திய கிசான் காங்கிரசின் செயல் தலைவராக பஜ்ரங் புனியாவிற்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. வினேஷ் போகத் தற்போது ஹரியானாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸில் இணைந்த மலியுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல்வந்துள்ளதாகவும், வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த கொலை மிரட்டல் செய்தியில், ``காங்கிரஸை விட்டு விலகி விடுங்கள்.
இல்லையென்றால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எங்களை எதிர்கொள்ள நேரிடும். இது எங்களின் இறுதிச் செய்தி. நாங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை ஹரியானா சட்டசபை தேர்தலுக்கு முன் உங்களுக்குக் காண்பிப்போம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யலாம், ஆனால் இது எங்களின் முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை" அதில் கூறப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, பஜ்ரங் புனியா போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
">
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY
">
https://bit.ly/3PaAEiY
/>
http://dlvr.it/TD0Ms2
Monday, 9 September 2024
Home »
» Bajrang Punia: "காங்கிரஸை விட்டு விலகிடுங்க; இல்லன்னா..." - பஜ்ரங் புனியாவுக்கு வந்த கொலை மிரட்டல்