ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, முதன்முறையாக அங்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாதம் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.ஜம்மு காஷ்மீர் தேர்தல்
ஃப்ரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்தியக் கூட்டணியில் இருக்கும் மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜம்மு - காஷ்மீரின் ஐந்து மக்களவைத் தொகுதிகளில், இரண்டில் மட்டுமே பா.ஜ.க போட்டியிட்டது.
அதைத் தொடர்ந்து, சமீபத்தில் காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களிலும் பா.ஜ.க போட்டியிட்டிருக்க வேண்டும். போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வென்ற நமக்கு மற்ற மூன்று தொகுதி மக்களின் ஆதரவும் கிடைத்திருக்கும். இந்த முறை அதைத் தவறவிடக்கூடாது. ஜம்மு - காஷ்மீரின் 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிடும்." என அறிவித்திருந்த நிலையில், இன்று காஷ்மீரின் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டிருக்கிறது.அமித் ஷா
பா.ஜ.க பலமாக இருப்பதாக நம்பப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 47 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 19 தொகுதியில் மட்டுமே பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது. அதில், தெற்கு காஷ்மீரில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளிலும், மத்திய காஷ்மீரில் உள்ள 15 தொகுதிகளில் 6 தொகுதிகளிலும், வடக்கு காஷ்மீரில் உள்ள 16 தொகுதிகளில் 5 தொகுதிகளிலும் மட்டுமே போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவுக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், பா.ஜ.க தலைமையின் இந்த முடிவால், காஷ்மீரில் இருக்கும் மூத்த பா.ஜ.க தலைவர் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் ஒரு மூத்த பா.ஜ.க தலைவர் பேசும்போது, "எங்களின் தியாகம் புறக்கணிக்கப்பட்டதற்கு ஏற்கனவே புண்பட்டு கோபமாக இருக்கிறோம். எங்கள் வாழ்வை பா.ஜ.க-வுக்கு வழங்கியிருக்கிறோம். யாரும் ஆதரிக்காத நிலையில்கூட நாங்கள் பா.ஜ.க-வுடன்தான் நின்றோம். அதற்காக எங்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய நேரம் வந்திருக்கும்போதும், கட்சி எங்களை நம்பவில்லை. போட்டியிடுவதைத் தவிர்த்திருக்கிறார்கள். போட்டியிடும் இடத்தில் கூட புதிய வேட்பாளர்களைத்தான் நிறுத்தியிருக்கிறார்கள்." எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் பா.ஜ.க-வின் இந்த முடிவு தந்திரமான திட்டம் என இந்த முடிவை ஆதரிக்கும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.ஜம்மு காஷ்மீர் தேர்தல்
இது தொடர்பாக மற்றொரு பா.ஜ.க தலைவர், "பா.ஜ.க தலைமையின் இந்த முடிவால் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஏனென்றால், ஸ்ரீநகர் தொகுதியைத் தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இல்லை என்பது எங்கள் தலைமைக்குத் தெரியும். எனவே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் போலி வேட்பாளர்கள்தான்... கட்சியின் கவனம் சுயேச்சைகள் மற்றும் ஆட்சிக்கு வர உதவும் சில அரசியல் கட்சிகள் மீது தான் உள்ளது. வாரிசு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்க்கும் திறன் கொண்ட வேட்பாளர்களை ஆதரிக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது." என உறுதியாகத் தெரிவிக்கிறார்.Taylor Swift - Elon Musk: ``உன் பூனைக்கு காவலனாய் நான் வருவேன்" - சர்ச்சையான எலான் மஸ்க் பதிவு!
http://dlvr.it/TD8HS6
Thursday, 12 September 2024
Home »
» BJP: ஜம்மு-காஷ்மீரில் 19 இடங்களில் மட்டுமே போட்டியிடும் பா.ஜ.க; பின்வாங்குகிறதா? பதுங்கி பாய்கிறதா?